தொழில்நுட்பம்: அனிமேஷன் 2 - கலக்கும் களிமண் பொம்மைகள்

By திரை பாரதி

இருபரிமாண அனிமேஷன் படங்கள் உருவாகும் படிநிலைகள் சுவாரஸ்யமானவை. ஜெர்ரி எலிக் குட்டியைக் காணாமல் டாம் பூனை அழுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது டாமின் கண்களிலிருந்து ஒரு துளி நீல நிறக் கண்ணீர் தரையில் விழுகிறது. எங்கிருந்தோ ஓடி வரும் ஜெர்ரி எலி, அதை சீஸ் சாப்பிடும் தனது தட்டில் பிடித்து டாம் பூனையின் வாயில் ஊற்றுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த காமெடி கலாட்டாவுக்கு உயிர்கொடுக்க, இந்த இரண்டு கதாபாத்திரங்களின் ஒவ்வொரு நகர்வும் 15 பிரேம்கள் கொண்ட விவரணை ஓவியங்களாக வரையப்படுகின்றன.

உதாரணத்துக்கு டாமின் கண்களிலிருந்து விழும் ஒரு துளி கண்ணீர் கண்களில் திரள்வது ஒரு சீக்குவென்ஸ். அதை 15 ஸ்டெப்ஸ்கள் வரைவார்கள். அந்த ஒரு துளியானது கண்ணில் இருந்து கீழே விழுவது மற்றொரு சீக்வென்ஸ். உதாரணமாகக் கண்ணீர்த் துளி தரையை நோக்கிப் பயணிப்பதை 15 பிரேம்களாக வரைந்துவிடுவார்கள். ஒரு 2டி அனிமேஷன் படத்தை உருவாக்கும்போது முதலில் திரைக்கதையும் உரையாடலும் எழுதப்படும். பிறகு முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு ஓவிய உருவம் கொடுக்கும் வேலை நடக்கும். இப்படி முதன்மைக் கதாபாத்திரங்களை இயக்குநர் திரைக்கதையில் விவரித்த கற்பனைக்கு ஏற்ப வரைந்து இறுதி வடிவம் கொடுக்கும் ஓவியரை ‘ மாடலர்’ என்கிறார்கள். மாடலர் வரைந்து இயக்குநர் இறுதி செய்த கதாபாத்திரத்தின் செயல்களைக் காட்சி வாரியாக வரைந்து தள்ளுபவர்கள் 2டி ஆர்ட்டிஸ்ட்கள். இவர்கள் வரைந்ததை ஓர் ஒளிப்பதிவாளருக்குரிய கற்பனைத் திறனோடு கம்போஸிங் செய்பவர்களை லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் அல்லது ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட் என்கிறார்கள். அடுத்து இப்படி வரைந்த ஸ்டெப்ஸ்களில் தேவையில்லாமல் இருக்கும் கோடுகளையும் லைட் & ஷேட் பகுதிகளையும் நீக்கி ஒவ்வொரு பிரேமாகப் பளிச்சென்று இறுதி வடிவம் தருபவர்களை க்ளீன் அப் ஆர்ட்டிஸ்ட் என்கிறார்கள்.

க்ளீன் அப் செய்யப்பட்ட ஓவியங்களை கம்ப்யூட்டரில் ஏற்றுபவர்களை ஸ்கேனர் ஆபரேட்டர் என்கிறார்கள். வரையப்பட்டு கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்ட விவரணைச் சித்திரங்களைச் சரியான வரிசையில் டிஜிட்டல் ஆர்டர் செய்து அவற்றின் முகம், உடை ஆகியவற்றுக்கு ஏற்ற வண்ணங்களைத் தருபவர்களை இங்க் அண்ட் பெயிண்ட் ஆர்ட்டிஸ்ட் என்கிறார்கள். பிறகு கதாபாத்திரத்தின் சித்திரங்களுக்கு அசைவுகளைத் தந்து அவற்றுக்கு உயிர்கொடுப்பவர்களை கீ பிரேம் அனிமேட்டர் என்று அழைக்கிறார்கள். இப்படி 2டி அனிமேஷன் துறையில் எத்தனை படிநிலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். இனி ஓவியங்களாக வரையத் தேவையற்றுப் பொம்மைகளை மட்டுமே வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்களுக்கு பெரிதும் பயன்பட்டுவரும் உத்தியான ‘ ஸ்டாப் மோஷன்’ பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன்

2டி அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கான உடல் அசைவுகள் அனைத்தும் ஓவியர்களால் வரையப்படுகின்றன. ஆனால் ஸ்டாப் மோஷன் அனிமேஷன் படத்தில் உடல் அசைவுகள் அனைத்தும் எளிதில் வளைத்து உருவாக்கும் பொம்மைகளைக் கொண்டும், களிமண் மூலம் உருவாக்கப்படும் ‘ க்ளே மாடல்’ பொம்மைகளைக் கொண்டும் இன்னும் இலகுவாகச் சாத்தியப்படுத்தும் கலையாக மலர்ந்தது.

ஸ்டாப் மோஷன் அனிமேஷனில். கதாபாத்திரமாகச் சித்திரிக்கப்படும் பொம்மை உயிர் அற்றது என்பதால் அமைதியாகத்தான் இருக்கும். அனிமேட்டர்தான் அதன் ஒவ்வொரு (action) நகர்தலையும், உணர்ச்சியையும்(emotion) செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு நகர்தல் மற்றும் உணர்ச்சியைத் தனித்தனியாக படம் பிடிக்க வேண்டும். ஒரு பெரிய மேஜை அளவு

இடம் கதைக்களமாகத் தேவை. அதில் கதாபாத்திரம் வாழும் இடத்தின் பின்னணியைச் சித்திரிக்கும் வீடு, சாலை, மரங்கள், உள்ளிட்ட மினியேச்சர்களும் தேவை. ஸ்டில் கேமரா, லைட்டிங் அமைப்பு, கம்ப்யூட்டர், ஸ்டோரி போர்டு, மற்றும் கதாபாத்திரங்களாக நாம் நடிக்க வைக்கப்போகும் களிமண் மாடல் பொம்மைகள். இவற்றை வைத்துக்கொண்டு ஸ்டாப் மோஷன் கதை ஒன்றை அடுத்த வாரம் படம் பிடிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்