நாயகன் சந்திரனும், நண்பன் கிஷோர் ரவிச்சந்திரனும் டெம்போ வேனில் லோடு அடிப்பவர்கள். தேனியில் காய்கறி லோடு ஏற்றி சென்னை கோயம்பேடில் இறக்குகிறார்கள். அதற்கான கூலியை வைத்து டெம்போ வேனின் கடன் தவணையான ரூ.18 ஆயிரத்தை அடைக்க திட்டமிடுகிறார்கள். பணம் போதாததால், சென்னைக்குள் ஒருமுறை சவாரி அடிக்கிறார்கள். இந்தச் சூழலில், கடன் தொல்லை காரணமாக வீட்டை மாற்றும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களிடம் வாடகை பேசி, வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடு தேடுகிறார்கள். ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு காதல் தொற்றிக்கொள்கிறது. இதற்கிடையே, தனியார் நிதி நிறுவனத்தில் பெரும் தொகையை கொள்ளையடிக்கும் ஹரிஷ் உத்தமன், போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க, பணப்பையை இவர்களது வேனில் போட்டுவிடுகிறார். கூடவே, அந்த வேனையும் ஹரிஷ் தவறவிடுகிறார். அந்த பணம் என்ன ஆனது? சந்திரன் - ஆனந்தி காதல் கைகூடியதா? ஹரிஷ் இவர்களைப் பிடித்தாரா? போலீஸார் ஹரிஷைப் பிடித்தார்களா? என்பது மீதி கதை!
‘சாட்டை’ படம் இயக்கிய அன்பழகனின் 2-வது படம் இது. சாலையைக் கதைக் களமாக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையில், சாமானிய மனிதர்களையும் அவர்களது ஆசாபாசங்களையும் கொண்டுவந்து பொருத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் அது எதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறது.
பெரும்பாலான காட்சிகள் இயல்பாக இல்லை. உதாரணத்துக்கு, நாயகன் உட்பட 4 பேரும் வில்லனிடம் சிக்கிக்கொண்ட பிறகு, அவர்கள் தப்பிச் செல்ல எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.
ஆனால், கிளைமாக்ஸ் காட்சியை இப்படிதான் அமைக்க வேண்டும் என்பதற்காகவே கடைசி வரை அவர்களை வில்லனின் பிடியிலேயே இருக்க வைத்துவிட்டார் இயக்குநர். ஆணி அடிக்கும் இயந்திரத்தால் ஆட்களைக் கொல்வது போன்ற காட்சியை தவிர்த்திருக்கலாம்.
நிதி நிறுவனத்தில் ஹரிஷ் கொள்ளையடிக்கும் காட்சி தர்க்கரீதியில் (லாஜிக்) நம்பகமாக அமையவேண்டும் என்பதில் இயக்குநர் காட்டிய ஈடுபாடும், கவனமும், 2-ம் பாதியில் இல்லாததுதான் படத்தின் பெரிய சிக்கல்.
‘கயல்’ படத்தில் நடித்த சந்திரன் தனது வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனந்தியை உருகி உருகி காதலிக்கிறார். நமக்கு சொந்தமில்லாத பணத்துக்கு ஆசைப்படுவது தவறு என்று சொல்லும் இடத்தில் ஆனந்தி நெகிழ வைக்கிறார். படம் முழுவதுமே சின்னி ஜெயந்த் தனது குணச்சித்திர வேடத்தால் தாங்கிப் பிடிக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் கிஷோர் ரவிச்சந்திரனின் நடிப்பும் கச்சிதம்.
படம் இரண்டு காரணங்களால் நம்மை இருக்கையில் பொறுமையுடன் அமரவைக்கிறது. ஒன்று, வி.இளையராஜாவின் ஒளிப்பதிவு. சாலையில், வளைவுகளில், மலைப்பாதைகளில், மலை கிராமங்களில் அவரது கேமரா காட்டியிருக்கும் துடிப்பும் வேகமும் நிதானமும் அபாரம்! இரண்டாவது, இமானின் இசையும், யுகபாரதியின் வரிகளும்.
இயக்குநர் நினைத்தால் இசையமைப்பாளரிடம் இருந்து கதைக்கு இணக்கமான இசை, பாடலாசிரியரிடம் இருந்து கட்டுக்கோப்பான வரிகளைப் பெற முடியும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம். ஸ்ரேயா கோஷலின் குழைவான குரலில் ஒலிக்கும் ‘உன்கூட பேசத்தானே’, அனிதா வெங்கட்டின் கொண்டாட்டமான குரலில் ஒலிக்கும் ‘டுக்கும் டுக்கும்’ என்ற கிராமத்து முளைப்பாரி திருவிழா பாடல் ஆகியவற்றில் யுகபாரதி வழக்கமான தன் மண்வாச முத்திரையைப் பதித்திருக்கிறார்.
நமக்கு சொந்தமில்லாத பணத்துக்கு ஆசைப்பட்டால் கெடுதலில் போய் முடியும் என்று சொல்கிறது படம். 2-ம் பாதியின் தர்க்கப் பிழைகளைக் களைந்திருந்தால் ‘ரூபாய்’ மதிப்பு கூடியிருக்கும்!
'ரூபாய்' படத்தின் செல்ஃபி விமர்சனம்:
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago