பர்மாவிலிருந்து (மியான் மர்) புலம்பெயர்ந்து வரும் தமிழ் குடும்பத்தில் எட்டு வயதுச் சிறுவன் வெங்கட் (கௌதம் கார்த்திக்). வட சென்னையின் சவுகார்பேட்டை யில் குடியேறும் அந்தக் குடும்பம் எதிர்பாராமல் குடும் பத் தலைவரை இழக்கிறது. தாயின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் வெங்கட், நகைக்கடை வைத்திருக்கும் குணசீலனிடம் (சித்திக்) வேலைக்குச் சேர்கிறான். அவரோ முறைகேடான வழி யில் வெளிநாட்டிலிருந்து தங்க பிஸ்கெட்டுகளை வரவழைத் துக் கறுப்புச் சந்தையில் விற்று வந்த வியாபாரி. வெங்கட்டின் துறுதுறுப்பைப் பார்க்கும் அவர், தனது தவறான தொழிலை மீண்டும் கையில் எடுக்கிறார்.
தங்கக் கடத்தல்காரர் களைப் பிடிக்கப் போலீஸ் வலை விரிக்கிறது. கடைசியாக ஒருமுறை சென்னையிலிருந்து ரங்கூனுக்குத் தங்கத்தைக் கடத்தி, கிடைக்கும் பெரிய தொகையோடு தொழிலை விட்டுவிட முடிவெடுக்கிறார் கள் வெங்கட்டும் முதலாளி குணசீலனும்.
ரங்கூன் செல்ல அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, அங்கே நடக்கும் சம்பவங்கள், சென்னை திரும்பியதும் காத்திருக்கும் திருப்பம் எனப் போகிறது கதை.
திறமை, உழைப்பு இருந் தாலும் தப்பு வழி பல இழப்பு களை உண்டாக்கும் என்று கூற வருகிறது கதை. கேமராவைப் பார்த்து வசனமாக அதை வகுப்பு எடுக்காமல், கதா பாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் வழி யாகச் சொல்லி முதல் முயற்சியிலேயே கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. விறு விறுப்பாகவே விரிகிறது திரைக்கதை.
கைது செய்யப்படும் கதா நாயகன், “பிறக்குறது ஈசி, சாகு றது அதை விட ஈசி, வாழறது தான் கஷ்டம்” என்று பேசும் வசனத்திலிருந்து பின்னோக்கி விரிகிறது படம்.
பர்மாவிலிருந்து சென்னை வரும்போது “யாத்ரிகா நீ போய் வா மகனே…!” என்று பிரிவின் துயரைக் கூறும் மறைந்த பாடலாசிரியர் நா.முத் துக்குமாரின் வரிகளுக்கு வலிமிகுந்த கவிதையாய் காட்சியை நிறுத்துகிறது படப் பிடிப்பு. மொழியும் மண்ணும் தாய்வீடாக இருந்தாலும் புது ஊர், புது மக்கள் என்ற மலைப்பு அடங்குவதற்குள், ஓடிவந்து சிறுவன் வெங் கட்டை விளையாட அழைக் கும் சிறுவன் குமாரும் நண்பர் களாகி உறவுகளாகவும் மாறும் கட்டம் ‘பொற்காலம்’ படக் காட்சியை நினைவூட்டினாலும் நெகிழ்வு.
விஜய், அஜித் ரசிகர் குழுக் களைக் காட்சிப்படுத்திய விதமும், ரஜினி பட சுவரொட்டி, செய்யது பீடி விளம்பரம் கொண்டு 1990-களின் கால கட்டத்தை நினைவூட்டும் கலை இயக்கமும் நேர்த்தி.
வெங்கட், குமார் கூட்டணி யில் மற்றொரு நண்பனாக இடம்பிடிக்கும் ‘டிப்டாப்’பின் (டேனியல் பாப்) நகைச்சுவை உணர்வை மீறி, அவரது கதா பாத்திரம் வார்க்கப்பட்டிருக் கும் விதம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் மூன்று நண்பர்களை மட்டுமே வைத்து அடுத்தடுத்து திருப்பங்களைக் கொடுத் திருக்கிறார் இயக்குநர்.
வெங்கட்டாக வரும் கௌதம் கார்த்தி முதல்முறை யாக அர்ப்பணிப்புடன் நடித் திருக்கிறார். சண்டைக்காட்சி களில் வேகம், சாதுர்யம் என ஈர்க்கிறார். இவர் தவறான பாதையில் பயணிப்பதை அறிந் தும் கோபப்படாத(!) காதலி யாக, ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் கவ ரும் அறிமுகம் சானா.
கதையுடன் ஒட்டி நிகழக் கூடிய இயல்பான நகைச் சுவைக்கு நல்ல வாய்ப்பிருந் தும் அதில் கோட்டை விட் டிருக்கிறார் இயக்குநர்.
பாசம், நட்பு, காதல், பொறாமை, துரோகம், இழப்பு எனக் கதாபாத்திரங்கள் எதிர் கொள்ளும் பல உணர்வுகளை முடிந்தமட்டும் வலுவான காட்சி கள், வேகமான திரைக்கதை பின்னலுடன் விரிந்து நம்மை ஈர்க்கிறது ரங்கூன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago