தீவுத் திடலில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் படைப்புகள் பல பரபரப்பாக விற்று வரும் வேளையில், ஆழ்வார்பேட்டையில் ஆர்.டி.சாரியின் டேக் மையத்தில் ‘தமிழ் புத்தக நண்பர்கள்’ அமைப்பு சார்பில் முதுபெரும் இரண்டு படைப்பாளிகளுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும், தலா ரூபாய் 50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டன.
85 வயது நிரம்பிய இந்திரா பார்த்தசாரதிக்கும், 84 வயதான அசோகமித்திரனுக்கும் விருது வழங்கி பாராட்டினார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
‘‘இந்த விழா தீவுத் திடலிலோ, மெரினா கடற்கரையிலோ நடந்திருக்க வேண்டும்…’’ என்று ஆதங்கப்பட்டார் சிதம்பரம். இந்த சமயத் தில் அது சாத்தியமில்லாதது என்பதும், வேறு எந்த சமயத்தில் நடத்தினாலும் கூட்டம் சேராது என் பதையும் அவர் அறிவார். சரி, அது சிதம்பரத்தின் சம்பிரதாய வார்த்தைகள் என்று விட்டுவிடுவோம்.
இந்திரா பார்த்தசாரதியையும், அசோகமித் திரனையும் வாழ்த்தும்போது தமது ‘கணையாழி’ கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சிதம் பரம். அரசியல் இதழாக தொடங்கி, முழுக்க முழுக்க இலக்கிய வண்ணம் பூசிக்கொண்ட கணை யாழிக்கு இருவரும் தூண்களாக விளங்கியவர்கள் என்று பெருமிதம் கொண்டார். ஹோம் வொர்க் செய்துவிட்டு வந்தவராக, இருவரின் படைப்புகள் சிலவற்றை படித்துவிட்டு வந்து மேற்கோள் காட்டினார் ப.சி. அசோகமித்திரனின் நகைச்சுவை வரிகளை மறுவாசிப்பு செய்தபோது அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘‘இ.பா-வும், அசோகமித்திரனும் இந்த வயதிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இருவரும் லேப்டாப்பில் எழுதுகிறார்கள். சொந்த மடிக் கணினிகளில். அரசு இலவசமாகக் கொடுத்த, அல்லது கொடுப்பதாக வாக்குக் கொடுத்த மடிக் கணினிகளில் அல்ல…’’ என்று குறும்புப் புன்னகை தவழக் குறிப்பிட்டார் சிதம்பரம்.
சிதம்பரத்தின் உரைக்கு முன்னதாக, ‘கல்கி’ இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ், மற்றும் ‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இருவரும், வாழ்நாள் சாதனையாளர்கள் இருவரின் படைப்புகளை சுருக்கமாக ஆய்வு செய்தார்கள்.
‘‘இந்த விருதை நாங்கள் சென்ற வருடமே கொடுத்திருக்க வேண்டும். விடுபட்டு போனதில் எங்களுக்கு வருத்தம்தான். அதனால்தான் இந்த வருடம் இவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம்’’ என்றார் ஆர்.டி.சாரி, தனது வரவேற்புரையில்.
‘‘சாரி சொன்னதை வைத்து, இனி ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்பதை புரிந்துகொள்வோம்…’’ என்றார் திருப்பூர் கிருஷ்ணன். இதற்கு 80 வயது நிரம்பிய, சாதனைகள் பல புரிந்த படைப்பாளிகளின் பட்டியலை அவர் சாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago