சின்னத்திரையில் பாசமான கதாபாத்திரங்களையே பெரிதும் தேர்வு செய்து நடித்து வந்த ஷமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மவுன ராகம்’ தொடர் வழியே முதன்முறையாக வில்லி அவதாரம் எடுத்து நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு..
என்ன திடீரென வில்லிக்கு மாறிட்டீங்க?
சின்னத்திரைக்குள்ளே வந்து எட்டு வருஷமாச்சு. அது ஏனோ தெரி யலை; ஷமிதான்னா அதிகம் சத்தம் போட்டுப் பேசாத மென்மையான கதாபாத்திரமும், கிளிசரின் போட்டு அழும் சோகமான கதாபாத்திரமும் தான் சரியா இருக்கும்னு எனக்கு அமைந்தது. கேரியர்ல ஒரு மாற்றம் வரும்போது ‘பிரேக் கிடைச்சி ருக்கு’ன்னு சொல்வோமே அந்த மாதிரிதான் எனக்கு இப்போ நடந்த தும். ‘உனக்கு நெகடிவ் ரோல் ரொம்ப பொருத்தமா இருக்கும். வாய்ப்பு வரும்போது மிஸ் பண்ணிடாதே’ என்று என் கணவர் நடிகர் ஸ்ரீ எப்பவும் சொல்லிக்கிட்டே இருப் பார். அந்த மாதிரி அமைந்த தொடர்தான் இந்த ‘மவுன ராகம்’.
இந்த வில்லி கதாபாத்திரத்துக்கு உங்களை எப்படி தயார்படுத்திக் கிட்டீங்க?
இந்தத் தொடர்ல முழுக்க நான் ஒரு வில்லத்தனமான பெண் என்று சொல்ல முடியாது. கணவரைப் பிடிக்கும். அவரை சார்ந்த மற்றவர் களைப் பிடிக்காது. அந்த இடங் களில் மட்டும்தான் வில்லியாக பிரதி பலிப்பேன். பொதுவாக சில சீரியல் களில் வரும் வில்லி கதாபாத்திரம், அவர் நடிப்பதற்கு முன்பே இவர் வில்லியாகத்தான் வரப் போகிறார் என்று காட்டிக்கொடுக்கும். காரணம் அடர்த்தியான மேக்கப், வித்தி யாசமான டிரெஸ்ஸிங் உள்ளிட்ட விஷயங்கள். இந்தத் தொடரில் அதெற்கெல்லாம் வேலையே இல்லை. ஓவர் ஆக்டிங் இல்லாமல் கச்சிதமாக நடிப்பில் மட்டும் வில்லி யாக வெளிப்பட்டால் போதும். அந்த சுதந்திரத்தை சீரியல் இயக்குநர் தாய் செல்வம் சார் கொடுத்திருக் கிறார். அதேபோல அளவுக்கு அதிக மான மேக்கப், காஸ்டியூம்ஸ்னு இல்லைன்னாகூட ஆக்ரோஷமான வில்லியாக காட்ட முடியும் என்று ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் அழ காக கேமராவில் பதிவு செய்கிறார். இதெல்லாம் அதற்கு பெரிய பலம்.
சினிமாவைப் போல சின்னத்திரை யிலும் சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்காவிட்டால் ஒரு கட்டத்தில் பின்னுக்கு போகும் சூழல் இருக்கிறதே?
‘பாண்டவர் பூமி’ படத்துக்குப் பிறகு பெரிதாக சினிமாவில் கவ னத்தை செலுத்தவில்லை. ‘சிவசக்தி’ தொடர் வழியே சின்னத்திரைக்கு வந்து இப்போது வரைக்கும் சீரிய லின் லீட் கதாபாத்திரம் மட்டும்தான் ஏற்று நடித்து வருகிறேன். வீட்டில் இருக்கும்போதுகூட எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் தெளிவும், சரியான நேரத்தையும் பின்பற்றுவேன். நடிக்கும்போதும் அப்படித்தான். தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள் ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமக்கு கொடுத்துள்ள வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வேண்டும். அதை முறைப்படுத்திக்கொண்டால் சின்னத்திரையில் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்ய முடியும்.
ஜோதிகா, ரேவதி, ஸ்ரீதேவி உள் ளிட்ட நடிகைகள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கவனிக்க வைக்கிறார்களே?
இதெல்லாம் பெரிய விஷயம். கல்யாணமானதும் நடிப்புக்கு எல்லாம் வேலையே இல்லை என்று ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், அதெல்லாம் இன்று மாறி ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக கலக் கியவர்கள் இப்போது தனக்கு பொருத்தமான கதாபாத்திரங் களைத் தேர்வு செய்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. திரைத் துறையில் அதற்கான இடமும், வீட் டில் அவர்களுக்கான சுதந்திரமும் அளித்திருப்பதும் வரவேற்கத்தக்க விஷயம்!
ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கியவர்கள் இப்போது தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago