கோலிவுட் கிச்சடி: மாரி- 2

By ஆர்.சி.ஜெயந்தன்

மாரி-2

மாரி படம் வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்று கூறப்பட்டாலும் ரசிகர்களிடம் குட்டு வாங்கியது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் பாலாஜி மோகன். “இவ்வளவு நாள் மாரி-2 திரைக்கதை எழுதும் வேலைகளில் மூழ்கியிருந்தேன், கூடிய விரைவில் மாரி-2 குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” எனக் கூறியிருக்கிறார். இந்தப் படத்துக்காக தனுஷ் - காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணைகிறது.

முதல் பார்வை தயார்!

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாகச் கூறப்படும் படம் ‘எந்திரன்’ இரண்டாம் பாகம். ‘2.0’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகளை ஷங்கர் ஏற்கெனவே படம்பிடித்துவிட்டார். இந்நிலையில் ரஜினி - அக்‌ஷய் குமார் இணைந்து நடிக்கும் காட்சிகளை சென்னையில் அடுத்த வாரம் தொடங்குகிறாராம் ஷங்கர். இந்தப் படத்தின் அதிகாரபூர்வமான தலைப்பு, முதல் பார்வை வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைக் காண ரஜினி ரசிகர்களும் ஷங்கரின் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக ஷங்கருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. அதோடு அந்தப் படத்தின் டீஸர் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாவதும் உறுதியாகியிருப்பதாகத் தகவல்.

சபாஷ் நாயுடு பராக்

எதிர்பாராத விபத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையும் ஓய்வும் எடுத்துவரும் கமல் தற்போது சிறிய அளவிலான உடற்பயிற்சிகளைச் செய்துவருகிறாராம். மேலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை செப்டம்பர் 2-வது வாரத்தில் தொடங்கிவிடலாம் என்று தனது குழுவை முடுக்கிவிட்டிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. முதல் கட்டப் படப்பிடிப்பில் கிடைத்த காட்சிகளை எடிட் செய்து பார்த்ததில் 45 நிமிடத்துக்கான படம் கிடைத்துவிட்டதாம்.

வடசென்னை’க்காரர்கள்

மூன்று பாகங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை, இரண்டு தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கிவருகிறார் வெற்றிமாறன். சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களோடு விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோருக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் நடிகர்கள் பட்டியலில் பிரபல இயக்குநரான சுப்ரமணியம் சிவா இணைந்திருப்பதாகத் தெரிகிறது. முக்கிய தாதாவாக நடிக்கிறாராம் இவர். ‘சீடன்’ படத்துக்குப் பிறகு படம் இயக்காமல் நீண்ட தலைமுடி, தாடி ஆகிவற்றுடன் வலம்வந்த சுப்ரமணிய சிவாவின் தோற்றம் கொண்டுவந்து சேர்த்த வாய்ப்பு இது என்கிறார்கள்.

50 படங்களின் நாயகன்

ஐம்பதுக்கும் அதிகமான குறும்படங்களை இயக்கி, நடித்த அனுபவத்துடன் முழுநீளத் திரைப்படம் இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துவருகிறார் அறிமுக நட்சத்திரம் எழில். படத்தின் தலைப்பு ‘செஞ்சிட்டாளே என் காதல’. எதற்கு இப்படியொரு தலைப்பு என்றதும் எச்சரிக்கையாகிறார். “இது பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல. காதலில் தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வின் வெற்றிக்கு அதையே எப்படி அடித்தளமாக மாற்றிக்கொள்கிறான் என்பதுதான் கதை. தமிழ் சினிமாவில் காதல் மலினப்பட்டே வந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப் பாதையில் இந்தப் படத்தின் திரைக்கதை பயணிக்கும்” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்