அமெரிக்காவில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ராபின்சன் குரூசோவின் நாவலைத் தழுவி நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவர உள்ள 3டி அனிமேஷன் படம் ‘தி வைல்ட் லைஃப் 2016’. முழுக்க முழுக்க நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டுள்ள குழந்தைகள் படம் இது. இந்தப் படம் அவர்களை மாய உலகத்துக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.
அமெரிக்காவில் யாருமே வசிக்காத ஒரு குட்டித் தீவு உள்ளது. அந்தத் தீவில் பஞ்சவர்ணக் கிளி, பன்றி, மீன்கொத்தி, ஆடு, பச்சோந்தி, எறும்புத்தின்னி எனச் சில உயிரினங்களும் வாழ்கின்றன. சொர்க்கம் போல் உள்ள இந்தத் தீவில் இந்த விலங்குகள் அமைதியாக வாழ்ந்துவருகின்றன. ஒரு நாள் கடலில் பயங்கரமான புயல் உருவாகிறது. கடும் மழை பெய்கிறது, காற்றும் சுழன்றடிக்கிறது. அப்போது கப்பலில் வரும் ராபின்சன் குருசோவும் அவனுடைய நாயும் புயலில் மாட்டிக்கொள்கிறார்கள். கடலில் தத்தளித்தபடி அந்தத் தீவுக்கு வந்து சேருகிறார்கள். அந்த அமைதியான தீவு ராபின்சனுக்குப் பிடித்துப்போகிறது.
அங்கேயே தங்க மரத்தாலான குடில் ஒன்றை அவன் அமைக்கிறான். இயற்கையான அந்தத் தீவை ராபின்சன் மாற்றுவது அங்கு வாழும் விலங்குகளுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனிடையே கப்பலிலிருந்து தீவுக்கு வந்துசேர்ந்த பூனைகள் ராபின்சன் குருஸோவையும் அவனுடைய நாயையும் பழிவாங்க முயல்கின்றன, தீவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகின்றன. இதனால், தீவின் விலங்குகளுக்கும் ராபின்சனுக்கும் நட்பு ஏற்படுகிறது. ராபின்சன் விலங்குகளிடம் அன்பு காட்டுகிறான். ராபின்சனுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் யார், யார் பக்கம் சாய்ந்தார்கள் என்று செல்கிறது கதை.
இது 3டி அனிமேஷன் படம் என்பதால், விலங்குகள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் குழந்தைகளை வாய்விட்டுச் சிரிக்கவைக்கும். ஒவ்வொரு விலங்கும் ராபின்சனை விரட்டச் செய்யும் தந்திரங்களும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பிடிக்கும்.
படத்தை பென் ஸ்டாஸென் இயக்கியுள்ளார். ராமின் ஜவாடி இசையமைத்து படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி என மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்தப் படம் ராபின்சன் குருசோ என்ற பெயரில் வெளியானது. ஆனால், அமெரிக்காவில் ‘தி வைல்ட் லைஃப் 2016’ என்ற பெயரில் படம் வெளியானது. இதே பெயரில் இந்தியாவில் செப்டம்பர் 9-ம் தேதி படம் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago