திரை விமர்சனம்: திருநாள்

By இந்து டாக்கீஸ் குழு

டெல்டா மாவட்டங்களில் நீதிபதி களையே கதிகலங்க வைக்கும் அதிரடி தாதா நாகா (சரத் லோகிதஸ்வா). அவரது விசுவாச அடியாள் பிளேடு (ஜீவா). தாதாவின் சாக்கு மண்டித் தொழிலில் மட்டும் நேர்மையான பங்குதாரராக ஜோ மல்லூரி, அவர் மகள் நயன்தாரா. இவருக்கும் ஜீவாவுக்குமிடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் காதலில் ஏற்படும் பிரச்சினையால் தாதாவுக்கும் ஜீவாவுக்கும் முரண்பாடு தொடங்குகிறது. இன்னொரு பக்கம் ‘நீயா, நானா?’ கோபிநாத் தலைமை யில் காவல் துறைக் குழு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. காதலர்கள் சேர்ந்தார்களா? தாதா - அடியாள் மோதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை!

என்னதான் கதை பழைய பாணி யில் இருந்தாலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட களத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் ‘திருநாள்’ களைகட்டியிருக்கும். முடிச்சுகளைச் சரியாகப் போட்ட இயக்குநர் ராம் நாத், கதையை நகர்த்துவதில் குழம்பி யிருக்கிறார். கதைப் போக்கில் மேலோங்கியிருக்க வேண்டியது அதிரடியா, யதார்த்தமா என்பதிலும் குழப்பம் தெரிகிறது.

ஆரம்பக் காட்சியில் கதாநாயகன் அதிரடி காட்டுகிறார். பிற்பகுதியில் அதி ரடிக்கு வாய்ப்பிருக்கும் காட்சிகளில் வேறு முகம் காட்டுகிறார். இதனால் திரைக்கதை வலுப்பெறுகிறதா என் றால் அதுவும் இல்லை. விசுவாசி எதிரி யாக மாறிய பிறகு வேகமெடுக்க வேண் டிய கதை மந்த கதிக்குச் செல்கிறது. காவல் துறையின் காய் நகர்த்தல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அழுத்த மாக இல்லை.

காட்சியமைப்புகளில் ஏகப்பட்ட ஓட்டைகள். நெஞ்சம் நிறைய வன்மத் துடன் காவல் நிலையத்தில் ஜோ மல்லூ ரிக்கு பணத்தை திருப்பித் தருகிறார் தாதா சரத். வெளியே வந்தால் சும்மா விட மாட்டார்கள் என்று கூடவே இருந்த ஜீவாவுக்குத் தெரியாதா என்ன? ஜீவாவும் தன் பழைய கூட்டாளியும் ஒன்றாக இருப்பது தெரிந்தும் தாதா ஏன் சும்மா இருக்கிறார்?

திருப்பங்களே இல்லாமல் காட்சி களை இழுத்ததுடன் கிளைமாக்ஸுக்கு முன்னால் குத்துப்பாட்டு வைத் தது கூடுதல் கொட்டாவிக்கு வழிவகுக் கிறது. ஜீவா நயன்தாரா காதல் வளரும் விதத்தில் சுரத்தில்லை. வ.ஐ.ச. ஜெயபாலனைக் காவல் துறை வளைக் கும் திட்டம் நன்றாக இருக்கிறது.

முகத்தில் வெட்டுக்குறி, வாயில் பிளேடு, பழைய கைலி என அடியாள் வேடம் ஜீவாவுக்கு நன்றாகவே பொருந்துகிறது. உடல்மொழியிலும் பேச்சிலும் அதனை நன்றாகவே வெளிப் படுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துகிறார். திருந்தி வாழும் நிலையில் போலீஸ் தனது தலையில் துப்பாக்கி வைக்கும்போது ‘நாளைக்கு எனக்குக் கல்யாணம் சார். என் குலசாமியா உங்களைப் பார்க்கிறேன்’ என்று கோபிநாத்திடம் கெஞ்சும்போது மனதில் நிற்கிறார்.

கிராமத்துப் பெண்ணாக தாவணி யில் நயன்தாரா அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், அவருக்குக் காதல், டூயட்டைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. கொடூரமான தாதா வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார் சரத் லோகிதஸ்வா. நகைச்சுவைக்காக முனிஸ்காந்த் இன்னும் முயற்சிக்க வேண்டும். கருணாஸ் கடைசி ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக் கிறார். தன்னை யார் என்று கேட்ட காவ லர் மீது கோபம் கொப்பளிப்பதையும், துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள் ளும்போது ஏற்படும் கையறு நிலையை யும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் வ.ஐ.ச.ஜெயபாலன்.

படத்தின் பலம் இசையும் ஒளிப் பதிவும். இசையமைப்பாளர் ஸ்ரீயின் மெல்லிசை ஆறுதலைத் தருகிறது. ‘பழைய சோறு’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் ரம்மியம். பாடல் வரிகளும் முழுமையாகக் கேட்கும்படியாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் அனுபவம் கைகொடுத்திருக்கிறது. டெல்டா பகுதியின் பச்சையை ஒளி ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்.

‘வன்முறை இல்லாத நாள்தான் திருநாள்’ என்று படம் முடியும்போது ‘செய்தி’ சொல்கிறார் இயக்குநர். படம் முழுக்க குரூரமான வன்மத்தைக் காட்டி விட்டு இறுதியில் அன்பைப் போதிப்பது அபத்தம். வன்முறையைக் கைவிடும் ஜீவாவின் மாற்றம் அழுத்தமாகக் காட்டப்பட்டிருந்தால் இந்தச் செய்திக்கு மதிப்பு இருந்திருக்கும்.

காட்சிகளில் வலுவோ, புதுமையோ இல்லாததால் திருவிழா முடிந்த மறுநாள்போல சோர்ந்து காணப் படுகிறது இந்தத் ‘திருநாள்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்