கும்கி படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கி முடித்திருக்கும் ‘கயல்’ படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் காட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாகப் ‘பொறியாளன்’படத்தில் அறிமுகமான ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களோடு பெரிய நட்சத்திரப் பட்டாளமும் படத்தில் உண்டு.
பிரபு சாலமன் கூட்டணி என்றாலே அதில் இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் யுகபாரதி, கலை இயக்குநர் வைரபாலன் ஆகியோர் தவறாமல் இடம்பெறுவார்கள். இந்தப் படத்திலும் இவர்களது பங்களிப்பு உண்டு. முடிந்தவரை காட்சி வழியாகக் கதை சொல்ல விரும்பும் பிரபு சாலமன் இம்முறை ஒளிப்பதிவாளர் வி. மகேந்திரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
கயல் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது... “இதுவொரு முழுமையான காதல் கதை. இதைக் கண்ணீருக்கு நடுவிலான காதல் கதை என்றும் சொல்லலாம். 18 வயதே நிரம்பியவள் கயல். பத்துக்குப் பத்தடி அகலமுள்ள அறைக்குள்ளேயே தனது வாழ்க்கையைக் குறுக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம். தொலைக்காட்சிகூட இல்லாத அந்த வாழ்விடத்தில் வெளியுலகின் வேகமான வளர்ச்சி தெரியாத ஓர் அப்பாவிப் பெண்ணாக வளர்கிறாள். அதட்டினால்கூட அழுதுவிடுகிற மென்மையான மனதுடன் பருவம் எய்தி நிற்கும் அவளைச் சந்திக்கிறான் ஓர் இளைஞன். அவனது உணர்வுபூர்வமான சொற்கள், அவள் வாழ்விடத்துக்கு வெளியே விரிந்த உலகம் இருப்பதை உணர்த்துகின்றன. தன்னைப் பற்றி யாரிடமோ அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்கும் அவள், அவனுடன் சிறகடித்துப் பறக்க நினைக்கிறாள். ஆனால் மாய மானைப் போலக் கண்முன் நில்லாமல் மறைந்துவிட்ட அவனை இப்போது எங்கு போய்த் தேடுவது? அந்த எளிய பறவையின் காதல் பயணம் சாத்தியமானதா என்பதுதான் கயல்” என்கிறார் பிரபு சாலன்.
கடந்த 2004, டிசம்பர் 26 -ம் நாளை ஆசியாவின் வரலாற்றில் கறுப்பு தினமாக்கியது சுனாமி. அந்த ஆண்டில் நடக்கும் காதல் கதை. பத்து வினாடிகளே இடம்பெறும் ஒரு ஷாட்டுக்காக ராஜஸ்தானுக்கும் மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரபுஞ்சிக்கும் போய்த் திரும்பியிருக்கிறது படக் குழு. டால்பி அட்மாஸ் ஒலியைப் படத்தில் இடம்பெறச் செய்கிறார்களாம். சுனாமி காட்சிகள் புது மாதிரியான உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்று உறுதி தருகிறார்கள். படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் ஆகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago