இரு வேறு உலகங்கள்

By செய்திப்பிரிவு

கணவன் தரை தளத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான். மேலே உத்தரத்தில் மனைவி தூங்கிக்கொண்டிருக்கிறாள். மனைவி அறையின் அலாரம் எழுப்பும் ஓசையால் கணவன் தூக்கம் போய் எரிச்சலுடன் விழிக்கிறான். அவர்களுடைய வீடு வான்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

Head Over Heels அனிமேஷன் படத்தின் முதல் காட்சி இப்படித்தான் தொடங்குகிறது. அதாவது தரைதளத்தில் கணவனின் வாழ்க்கை. அந்தற்கு மேலே கூரை மீது பல்லியைப் போல மனைவியின் வாழ்க்கை. ஒரே வீட்டுக்குள் இருக்கும் இரு வேறு உலகங்கள். சமயங்களில் யார் எந்தத் தளத்தில் வசிக்கிறார்கள் என்னும் குழப்பமும் வருகிறது. வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள இக்குழப்பமும் புதிய திறப்பை அளிக்கிறது. நவீனக் கவிதைபோல இப்படம் முழுவதும் படிமங்களால் ஆனதாக இருக்கிறது.

தம்பதியர் கல்யாணம் ஆகிப் பல வருடங்கள் ஆனவர்கள் என்பது பாத்திரங்களின் உடல் மொழியாலும் அலங்காரங்களாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் திருமண உறவுக்குச் சாட்சியாக ஒரு புகைப்படம் அறையில் மாட்டப்பட்டுள்ளது. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் மனைவி அவள் பக்கம் திருப்பிக்கொள்கிறாள். கணவன் அவன் பக்கம் திருப்பிக்கொள்கிறான்.

கணவன் தங்கள் காதல் உறவை மீட்டெடுக்கப் பழைய பொருட்களின் ஊடே ஒரு நினைவுக் குறியீடைத் தேடி எடுக்கிறான். அது அவள் அந்தப் புகைப்பட்த்தில் அணிந்திருக்கும் காலணி. உற்சாகத்துடன் அதைச் செப்பனிட்டு ஒரு பரிசாக மாற்றுகிறான். அந்தப் பரிசு அவளால் நிராகரிக்கப்படுகிறது. வானில் சுற்றிக்கொண்டிருந்த அவர்களது வீடு ஒரு சமவெளியில் வந்து இறங்குகிறது. இதற்கிடையில் அந்தப் புகைப்படம் அவர்களது முரண்பாட்டால் விழுந்து உடைகிறது. தம்பதியரின் இரு வேறு உலகங்கள் என்ன ஆயின என்பதை நுட்பமாகக் காட்சிப்படுத்துவதுடன் படம் முடிவடைகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த டிம்மூதி ரேக்கர்ட் இயக்கியுள்ள இப்படம் பல திரை விழாக்களில் கலந்துகொண்டு பரிசுபெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்