குக்கூ: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

By செய்திப்பிரிவு

நகைச்சுவை, மசாலா படங்களுக்கு இடையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ஒரு யதார்த்த சினிமா முயற்சி ராஜு முருகனின் குக்கூ. எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாகியிருக்கிறது. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம்.

சென்னைப் புறநகர் ரயில் நிலையங் களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் (தினேஷ்). கூடவே பாட்டுக் கச்சேரி களிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா). இருவரும் கண் பார்வை இழந்தவர்கள்.

வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக் கிறது காதல். தமிழ் சுதந்திரக்கொடியைக் காதலிக்க, சுதந்திரக்கொடியோ கண் பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர் கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை முதல் படத்துக்கான கதைக்களமாக எடுத் துக்கொண்ட ராஜு முருகன் பாராட்டப்பட வேண்டியவர். கதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமட்டாமல், கதாபாத்திரங்கள் தேர்வு, வசனங்கள் ஆகியவற்றிலும் ராஜு முருகன் ஆச்சரியப்படுத்துகிறார்.

‘தல, தளபதி இருக்கிற இடத்துல மஞ்சுளாவுக்கு என்ன வேலை, இப்ப சின்ன அண்ணன்தான் எல்லாம், பொம்பள வலியை முழுசா புரிஞ்சவன் எவனும் இல்லை, கவர்னர் வந்தா ஆட்சியை கலைச்சிடுவார்’ என்பன போன்ற வசனங் கள் படத்தின் கூர்மையைக் கூட்டுகின்றன.

‘அண்ணா ஹசாரே கூட்டத்துல பார்த் தேன், இன்னிக்கு பேஸ்புக்கல ஏகப்பட்ட லைக் விழும்’ என்று தற்போதைய இளை ஞர்களின் ‘சமூக சேவை’யை முகத்தில் அறைந்தது போல சொல்வது நச்.

வசனங்களுக்குச் சமமாக பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்குப் பெரிய பலமாக விளங்குகின்றன. கதைக்களத்தைப் பின்னணி இசை மூலமாகவே உணர முடிகிறது.

தினேஷும் மாளவிகாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நிறை வாகவே நடித்திருக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை, குத்துப்பாட்டு இல்லாதது, ஆபாச காமெடி இல்லாதது, வசனங்கள் என எத்தனையோ நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியை உணர முடியவில்லை. ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்ட அதே காதல் கதை. பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள் எனப் படம் தனது இலக்கை எட்டத் தவறுகிறது. காதலை அடிப்படையாகக் கொண்ட கதையில் மாற்றமில்லை. காதலிப்பவர்களின் அடையாளங்கள் மட்டுமே மாறுகின்றன. அவர்களது அடையாளங்களும் அவர்களது வாழ்வின் கூறுகளோடு வெளிப்படவில்லை. காதலர்கள் மீது அனுதாபம் ஏற்பட வைப்பதற்கு மட்டுமே இந்த அடையாளம் பயன்படுகிறது.

முழுக்க முழுக்கப் பார்வையற்றவர் களைச் சுற்றியே கதை நகருகிறது. ஆனால் அவர்களது எந்தத் துயரமும் மனதைத் தொடுமளவுக்குக் காட்சிப் படுத்தப்படவில்லை. பார்வையற்றவர்கள் பற்றிய சித்திரிப்பு மிகவும் மேலோட்டமாக உள்ளது. படத்தின் நீளம் மிக அதிகம். திரைக்கதையில் திருப்பங்களை உரு வாக்கும் காட்சிகளில் போதிய அளவு நம்பகத்தன்மை இல்லை. இதனால் படத்திற்கும் ரசிகர்களுக்குமான ஒருங் கிணைப்பு சாத்தியமாகவில்லை.

இரண்டாவது பாதியில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டாலும், கொஞ்சம் இழுத்து ‘ஐயய்யோ என்ன ஆகுமோ’ என்று பார் வையாளருக்குப் பதற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதுவும் காதல், ‘மூன்றாம் பிறை’ போன்ற படங்களை நினைவூட்டும் விதமாகவே உள்ளது. இளையராஜா பாடல்கள், நடிகர்கள் போல் வேடமணிந்து ஆடுவோர் போன்ற காட்சிச் சித்தரிப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. புதிய இயக்குநர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

எளிய மனிதர்களின் காதலைச் சொல்ல முனைந்ததற்காகப் பாராட்ட லாம். அதை அவர்களுக்கான பின்னணி யோடு பொருத்தி அழுத்தமாகச் சொல்லி யிருந்தால் இன்னும் பாராட்டியிருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்