விசாகப்பட்டினத்தின் காவல் ஆணையராக இருந்த ஜெயப் பிரகாஷ் கொடூரமாகக் கொல் லப்படுகிறார். கொலையாளிகளைப் பிடிக்க முடியாத அரசுக்கு நெருக்கடி உருவாகிறது. இதனால் ஆந்திர உள்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினம் செல்லும் துரைசிங்கம் (சூர்யா), அங்கு சிபிஐ விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். உள்ளூர் கொலை யாளிகளைப் பிடிக்கச் சென்ற வருக்கு சர்வதேச அளவில் இயங்கும் பெரிய திமிங்கிலமே தட்டுப்படுகிறது. அந்தத் திமிங்கிலம் யார், அது சிங்கத்தின் வேட்டையில் சிக்கியதா, இல்லையா என்பதுதான் ‘சிங்கம் 3’.
ஹரி - சூர்யா கூட்டணியின் ‘பிராண்ட்’ ஆக மாறியிருக்கும் சிங்கம் வரிசைப் படங்களில் இது மூன் றாவது. கடந்த 2 படங்களின் தொடர்ச்சியாகவே இதன் திரைக் கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வணிக அம்சங்களுக்கும் இடமளித்து, விறுவிறுப்பாக நகர்ந்து செல்ல வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளும் ஹரி பாணி திரைக்கதையின் முத்திரை கள் படம் முழுக்க விரவியிருக் கின்றன. யோசிக்கக்கூட இடை வெளி தராமல் அடுத்தடுத்து விறு விறுப்பாகச் சம்பவங்களை அமைத் துப் படுவேகமாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார் ஹரி.
ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, சூரி தொடர்பான காட்சிகள் சுவாரஸ்ய மின்றிக் கடந்துபோனாலும், அதை யும் ஈடுகட்டும் அளவுக்குத் திரைக்கதையில் திருப்பங்களும், சுவாரஸ்யமும் உள்ளன.
பொழுதுபோக்குப் படத்திலும் மின்னணு, மருத்துவக் கழிவுகள் பற்றிய கவலையை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. வசனங்கள் கரம் மசாலா!
சூர்யா, ஒரு கட்டத்தில் சிபிஐ பொறுப்பில் இருந்து வெளியேறி ஆந்திர போலீஸாகப் பொறுப் பேற்றுத் தன் வேட்டையைத் தொடர்வது, விசாகப்பட்டினத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதாவைப் பிடிக்க, சரியான தருணத்துக்காகப் பதுங்கிப் பாய் வது, கடல் கடந்து இயங்கும் வில்லனைத் தேடிச் சென்று, சூசகமாக மிரட்டிவிட்டு மின்னலென மறைவது, நிர்பந்தங்களில் சிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்துவது என நாயகனின் சாகசச் சித்திரத்தை வரைவதற்கு இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அதில் சிறிதளவுகூட நாயகிகளின் பாத்திர வார்ப்புக்குக் காட்டவில்லை.
பத்திரிகையாளர் திவ்யா (ஸ்ருதி ஹாசன்) கதாபாத்திரத்தின் அறி முகம், அதன் அணுகுமுறை, முடிவு ஆகியவை ஹீரோயிசத்துக்கு முட்டுக்கொடுக்கவும் கவர்ச்சிக் காகவும்தான் பயன்பட்டிருக்கின்றன. முக்கியக் கதையில் ஸ்ருதியால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. அனுஷ்கா கதாபாத்திரமும் வீணடிக் கப்பட்டிருக்கிறது. வில்லனைக் கொடூரமானவனாகக் காட்டி, அதன் அடிப்படையில் போலீஸ் செய்யும் எந்த அத்துமீறலையும் சகஜப் படுத்திவிடும் தனது வழக்கத்தை இதிலும் கடைபிடித்திருக்கிறார் ஹரி. பெண்களுக்குக் கலாச்சார வகுப்பெடுக்கும் பழக்கத்தையும் தொடர்கிறார். ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் பெண்களுக்குக் கோடு போடும் இயக்குநர், சூரி சம்பந்தப் பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் அதே கண்ணியத்தைக் காட்டியிருக்க வேண்டாமா?
விசாகப்பட்டினம் ரயில் நிலை யத்தில் இறங்கும்போதே ரவுடி களைச் சாய்க்கும் சூர்யாவின் கம்பீர உடல்மொழி, க்ளைமாக்ஸ் சண்டை வரை கச்சிதமாகத் தொடர்கிறது. படம் முழுவதையும் அவரே தூக்கிச் சுமக்கிறார் என்பதோடு, கடைசிவரை தனது கதாபாத்திரத்துக்கு எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முனைப்புடன் உழைத்திருக்கிறார். சுறுசுறுப்பான உடல்மொழியோடு காட்சிக்குத் தேவையான அழுத்தங்களுடன் கூடிய தேர்ந்த வசன உச்சரிப்பும் அவரது பலம். இந்தப் படத்தில் வசன உச்சரிப்பில் இன்னும் கவர்ந்துவிடுகிறார்.
விட்டல் கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் அனுப் தாக்கூர் சிங் - வில்லத் தனத்துக்கு மோசம் இல்லை!
ஹரி படங்களில் கதைக்கு வெளியே நகைச்சுவை துருத்திக் கொண்டு நின்றாலும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப் படத்தில் சூரி, ரோபோ சங்கர் என இரு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் காமெடி படுத்துவிட்டது. சூரி தனது உடல்மொழி, உரையாடல் இரண்டிலுமே மேம்பட வேண்டிய தேக்கமான கட்டத்துக்கு வந்து நிற்கிறார்.
விசாகப்பட்டினம், ஆஸ்தி ரேலியா, தூத்துக்குடி எனப் பயணித் திருக்கும் ப்ரியனின் கேமரா அகலக் கோணங்களால் பிரம்மாண்டம் காட்டி, இது ஒரு மாஸ் மசாலா படம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் (வி.டி.விஜ யன், டிஎஸ்ஜே) இருக்கும் விறுவிறுப்பு, ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் இல்லை. பின்னணி இசை பல இடங்களில் தொடர்பற்று ஒலிக்கிறது.
விசாகப்பட்டினம் கன்டெய்னர் காட்சிகள், கடற்கரையில் கமிஷனர் அலுவலகம், ஆஸ்திரேலிய கார்ப் பரேட் அலுவலகம் எனப் படம் முழுவதும் கலை இயக்குநர் கே.கதிரின் ராஜ்ஜியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனல் கண்ணனின் சண்டை, துரத்தல் காட்சிகள் சூர்யா ரசிகர்களுக்கு முழுமையான ஆக்ஷன் விருந்தை அளிக்கின்றன.
பார்த்த சிங்கத்தையே சலிப்பு இல்லாமல் பார்க்கவைத்த வகை யில், இயக்குநருக்கு வெற்றி!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago