குறும்படம் இயக்கினால், திரைப்படம் இயக்கலாம் என்று பலரும் வரிந்து கட்டிக் கிளம்பியிருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் பாலாஜி மோகன். முதலில் காதலித்து வெற்றிகரமாகச் சொதப்பியவர் தற்போது வாய் மூடி பேச வந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
‘வாயை மூடி பேசவும்' புதுசா இருக்கே தலைப்பு..?
மக்கள் மத்தியில் இப்போ கம்யூனிகேஷன் மூலமாகத்தான் நிறைய பிரச்சினைகள் வருது. அதை மையப்படுத்தி ஜாலியா ஒரு படம் பண்ணியிருக்கேன். மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியா நஸ்ரியா நடிச்சிருக்காங்க. முன்னாள் கதாநாயகி மதுபாலாவை இந்தப் படத்துக்காக மறுபடியும் அழைச்சிட்டு வந்திருக்கேன். எழுத்தாளர் வேடத்துல நடிச்சிருக்காங்க.
உங்க அறிமுகப் படம் படம் தமிழ் - தெலுங்கு, இப்போ தமிழ் - மலையாளம்?
இந்த ரெண்டு மொழிகளிலும் இந்த கதை ரீச்சாகுன்னு நினைச்சேன். அதனால் இந்த முறை தெலுங்கு இடத்துல மலையாளம். மற்றபடி என்னோட மூனாவது படம் தமிழ்ல மட்டும்தான்.
இப்பவே உங்களோட மூணாவது படம் பற்றிய செய்திகள் இணையத்தைக் கலக்குதே?
‘காதலில் சொதப்புவது எப்படி' முடிச்ச உடனே என்கிட்ட வேறு கதைகள் இல்ல. இருந்தா உடனே படம் பண்ணியிருப்பேன். இப்போ என்கிட்ட நிறைய கதைகள் இருக்கு. நடிகர்கள் தேர்வு முடிஞ்சுட்டா என்னால உடனே ஷுட்டிங் கிளம்ப முடியும். என்னோட அடுத்த படத்துல தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கிறாங்க. விஜய் சேதுபதி நடிக்கிறார்ங்கிற செய்தியில உண்மையில்ல.
என்ன மாதிரியான படங்களைப் பார்க்கறீங்க? சமீபத்தில் உங்களை பாதிச்ச படங்கள் என்னென்ன?
சமீபகாலமா நான் எந்தப் படத்தையும் பார்க்க முடியல. ஏன்னா, என்னோட படத்தோட வேலைகளே எனக்கு சரியா இருக்கு. ஆனா கண்டிப்பா பார்க்கணும். படங்கள் பார்க்கிறது நல்ல எனர்ஜி. எனக்கு எல்லா வகைப் படங்களுமே பிடிக்கும்.
இன்னைக்கு படங்களை ரிலீஸ் பன்றதுல இருக்க பெரிய சவால் எதுன்னு நினைக்கிறீங்க?
தயாரிப்பாளர் போட்ட காசை எடுக்கணும், லாபம்னு கொஞ்சமாச்சும் கிடைக்கணும். இதுக்கு அவர் நிறைய விளம்பரப்படுத்த வேண்டியதிருக்கு. டி.டி.எச், யுடியுப் இப்படி நிறைய தியேட்டர் இல்லாத மாற்று மீடியாக்கள் மூலமாக சரியான நேரத்துல படங்களை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.
டி.டி.எச், யுடியுப்ல எல்லாம் படங்களை வெளியிடுவது சாத்தியமா?
அதுதான் எதிர்காலத் திரையரங்கமா இருக்கும். யுடியுபுக்காக மட்டுமே படம் பண்ணும் காலம் சீக்கிரம் வரும்.
உங்க ரெண்டு படங்கள்லயும் சின்ன கேரக்டர்கள்ல தலை காட்டியிருக்கீங்க. ஹீரோவா நடிப்பீங்களா?
நான் நிறைய மேடை நாடகங்கள் பண்ணியிருக்கேன். எனக்கு நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஜாலியா பண்ணுவேன். இப்போதைக்கு சின்ன கேரக்டர்ஸ் எனக்குப் போதும். இயக்கத்துல கவனத்தை வைப்போம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago