கிளாமர் எனக்கு செட் ஆகாது: அனன்யா

By மகராசன் மோகன்

‘‘சொன்னா நம்பவே மாட்டீங்க. படங்கள்ல எனக்கு எப்படி துறுதுறுனு கேரக்டரா அமையுதோ அப்படித்தான் நான் நிஜத்துலயும். வால் தனமும் குறும்பும் இருக்கிற கேரக்டரா, கூப்பிடு அனன்யாவைன்னு என்னைத்தான் முதல் சாய்ஸ் வெச்சுகிறாங்க. அதனாலயே எனக்குத் தமிழ்ப் படங்கள் ஸ்பெஷல்தான்’’ டிரேட் மார்க் கன்னக் குழிச் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார் அனன்யா.

‘நாடோடிகள், ‘எங்கேயும் எப்போதும்’ இரண்டு பெரிய வெற்றிப்படங்கள்ல நடிச்சீங்க. ஆனா அதுக்கு அப்புறம் உங்களை இங்கே காணோமே?

சரியா சொல்லணும்னா நல்ல ஸ்டோரி எதுவும் அமையல. என்னோட எல்லா கேரக்டர்லயும் குறும்பு இருந்தாலும் ஒரு அழுத்தம் இருக்கும். ‘புலிவால்’ படத்திலகூட விமலை எந்தத் தப்பும் செய்யவிடாமல் பார்த்துக்கிற காதலியா வருவேன். அட்லீஸ்ட் அது மாதிரியாவது கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பாக தொடந்து நடிப்பேன்.

தாய்மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கறீங்களோ?

மலையாளத்துல தொடந்து நடிக்கக் காரணம் அங்க நான் எதிர்பார்க்காத பல நல்ல கேரக்ட்டர்கள் கிடைக்கிறதுதான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் நடிச்சுட்டேன். ஆனா மலையாளம், தமிழ்ல நடிக்கும்போதுதான் நம்ம வீட்ல இருக்கிற ஃபீல் கிடைக்கிறது.

கிளாமர் கதாபாத்திரங்கள் விருப்ப மில்லையா?

கிளாமர் எனக்கு செட் ஆகாது. கிளாமரா நடிக்கிற மாதிரி என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல. ஆனா என்னோட ரசிகர்கள் மாடர்ன் டிரெஸ்ஸ விட நீங்க புடவையிலயும், சல்வார்லயும் கிளாமரா இருக்கீங்கன்னு சொல்றாங்க. அப்படிப் பார்த்தா, கிளாமர் உடம்பை எக்ஸ் போஸ் பண்றதுல மட்டும் இல்லையே.

ஓவர் மேக்அப் உங்களுக்குப் பிடிக்காதோ?

மேக்அப் ஒரு அளவோட இருந்தா நல்லது. தேவைங்கிற கேரக்டருக்கு மட்டும்தான் ஓவர் மேக் அப்புக்கு யெஸ் சொல்வேன். நார்மலா சினிமா ஃபங்கஷன்ஸ் போகும்போது மேக்கப் யூஸ் பண்ண மாட்டேன். மலையாளப் படங்களில அதிக மேக்அப் தேவைப்படுறதில்ல. தமிழ்லயும் யாரும் மேக்அப்பை அப்பிவிடுறது இல்ல.

அடுத்து தமிழில்?

அதிதி. நந்தா கூட நடிக்கிறேன். அடுத்த மாதம் ரிலீஸ். இதுவரைக்கும் தமிழ்ல வந்த கேரக்டர்ஸ்ல அதிதி முக்கியமான கேரக்டர். ரொம்ப வித்தியாசமான கெட்டப்ல என்னைப் பார்க்கலாம். திரு மணமான மாடர்ன் பெண்ணா வருவேன்.

திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?

பர்ஸனல் விஷயம் வேண்டாமே. அதைப்பத்தி வெளியில் அதிகம் பேசுவதில்லை. இன்னும் சிலருக்கு நான் திருமணம் முடிச்ச விஷயமே வெளியே தெரியல. மேரேஜுக்கு அப்புறம் 4 மலையாளப் படங்கள், 2 தமிழ்ப் படங்கள், 1 தெலுங்குப் படம்னு பிஸியாகத்தான் இருக்கிறேன். என்னொட கணவர் ஆஞ்சநேயன் ரொம்பவே ஃபிரண்ட்லி. என்னோட கேரியருக்கு பாதிப் பில்லாமல் மேரேஜ் லைஃப் கிடைத்தது கிஃப்ட்.

வில்வித்தை உங்களோட இன்னொரு அடையாளமா இருக்கே?

அதை எப்பவும் விடமாட்டேன். கடைசியா 2012 ல ஸ்டேட் லெவல் மேச்ல வின் பண்ணினேன். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் ஜெயித்தேன். போன வருஷம் சென்னையில் தான் நேஷனல் லெவல் போட்டி நடந்தது. அந்த டைம் தெலுங்குப் பட ஷூட்டிங்ல மாட்டிக்கிட்டேன். ரொம்ப்ப வருத்தமாயிடுச்சு. இப்பவும் டைம் கிடைச்சுட்டா முழு நேரமும் ஆர்ச்சரி டிரைனிங்தான். என்னோட கணவர் ரொம்பவே சப்போடிவ். இந்த வருஷம் சம்மர்ல நடக்கற போட்டிய மிஸ் பண்ணப்போறதில்ல. கண்டிப்பா ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்