கல்வித் துறையில் நடக்கும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவனுடைய அக்காவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். கொலை களை ஆராயும் காவல் துறை அதிகாரி சமுத்திரக்கனிக்குக் காவல் துறையிலிருந்தே ஆபத்து வருகிறது. ஒரு தாதாவிடமிருந்து தற்செயலாக மணிபர்ஸைத் திருடும் விஜய் வசந்த், அதிலிருக்கும் பொருள் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணு டைய மகளின் கல்விக்கு உதவப்போய் சிருஷ்டி டாங்கே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
சங்கிலித் தொடர்போல நீளும் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என்ன? இதில் கல்வித் துறைக்கும் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் என்ன பங்கு? சமுத்திரக்கனியும் விஜய் வசந்தும் சேர்ந்து எடுக்கும் முயற்சிகளால் இந்தக் கும்பலைக் கட்டுப்படுத்த முடிந்ததா?
கல்வித் துறையில் நடக்கும் மோசடிகளையும் அவலங்களையும் மையமாகக் கொண்டு ‘அச்சமின்றி’ என்னும் படத்தை உருவாக்கியிருக் கிறார் இயக்குநர் ப.ராஜபாண்டி. தனியார் பள்ளிகளின் லாப வெறி, அரசுப் பள்ளிகளிடம் காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றைத் துணிச் சலாகப் பேசுகிறார். பல்வேறு பாத்திரங்கள், கிளைக் கதைகள், திருப்பங்கள் ஆகியவற்றுடன் சுவா ரஸ்யமாகப் படமாக்கியிருக்கிறார்.
கல்வித் துறை அதிகாரியின் கொலையின் மூலம் எடுத்த எடுப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர், கல்வி அமைச்சர் தொடர்பான காட்சிகள் மூலம் அந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார். ஆனால், விஜய் வசந்த் தொடர்பான ஆரம்பக் காட்சிகள் நகைச்சுவை என்னும் பெயரால் பொறுமையைச் சோதித்துப் படத்தின் ஓட்டத்துக்குக் கட்டை போடுகின்றன.
ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த கொலைகள், துரத்தல்கள், கல்வித் துறைப் பிரச்சினைகள் என்று படம் வேகமெடுக்கிறது. கொலைகளுக்கான பின்னணி குறித்த சஸ்பென்ஸ் காப்பாற்றப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும் வாதங்கள் கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகளின் பல் வேறு கோணங்களை எடுத்துரைக் கின்றன.
நாயகனுக்கான அறிமுகப் பாடல் கள், கதையின் ஓட்டத்தை நிறுத்தக் கூடிய டூயட் பாடல்கள் ஆகியவை படத்தை பலவீனப்படுத்துகின்றன. அப்பாவி அம்மாவாகவே திரையில் தோன்றிவரும் சரண்யாவை மிடுக் கான பள்ளி முதல்வராகவும் ஈவிரக்கமற்ற பண முதலையாகவும் சித்தரித்திருக்கும் வித்தியாசம் கவனம் ஈர்க்கிறது. கல்வி அமைச்சரின் பாத்திரத்தின் மீது படம் முழுவதும் சந்தேகத்தின் நிழலைப் படியவிடுவது சுவாரஸ்யம் கூட்ட உதவினாலும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
தனியார் பள்ளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் அரசு அதிகாரி களுக்கும் காவல் துறைக்கும் இடையே கூட்டு இருப்பதாகக் காட்டப்படுகிறது. தனியார் பள்ளிகளின் போக்கும் பயங்கரமானதாகச் சித்தரிக் கப்படுகிறது. ஆனால், படத்தில் அது நம்பகத்தன்மை கொண்ட பக்குவமான சித்தரிப்பாக வெளிப்படவில்லை. வில்லன் கோஷ்டியைப் படுபயங்கர மாகக் காட்டும் மசாலாப் படங்களின் அணுகுமுறைதான் தெரிகிறது.
சரண்யாவின் நடிப்பு பாத்திரத்துக்கு மெருகேற்றுகிறது. வன்மத்தை மறைத் துக்கொண்டு இன்முகம் காட்டுவது, தேவைப்படும்போது சீறி எழுவது, நீதிமன்றத்தில் பதற்றப்படாமல் தன் தரப்பை முன்வைப்பது என்று சரண்யா வித்தியாசமான முத்திரை பதிக்கிறார்.
ராதாரவியின் முதிர்ச்சியான நடிப்பும் அனுபவமும் அவர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கின்றன. விறைப்பான காவல் துறை அதிகாரி என்பது சமுத்திரக்கனிக்குப் பழக்கமான வேடம் தான். அந்த விறைப்பைக் காதலில் சற்றே நெகிழவைத்து வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர்.
நகைச்சுவை, சண்டை, காதல் எல்லாம் இருந்தாலும் விஜய் வசந்தின் பாத்திரம் ஓரளவு இயல்பானதுதான். எதிலும் மிகையாகச் செய் யாமல் அடக்கி வாசித்துப் பார்வை யாளர்கள் மனதில் நிற்கிறார். வழக்கமான லூஸுப் பெண்ணாக வந்து, பிறகு சற்றே தீவிர முகம் காட்டும் வேடத்தில் சிருஷ்டி டாங்கே கவனிக்கவைக்கிறார்.
பிரேம்ஜி அமரனின் பின்னணி இசை காதுகளைப் பதம்பார்க்கிறது. ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் துரத்தல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்கு படமாக்கப் பட்டுள்ளன.
நடப்பிலுள்ள முக்கியமானதொரு பிரச்சினையை அழுத்தமாகப் பேசு வதுடன் அதைச் சுவையான கதை யாகவும் சொல்லியிருக்கிறார் இயக்கு நர். கதையின் மையத்துக்குத் தேவை யற்ற காட்சிகளைத் தயக்கமின்றி நறுக்கியிருந்தால் படத்தின் வலிமை கூடியிருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago