‘உரு’ படத்தில் தன்ஷிகா ஏற்று நடித்திருக்கும் ஜெனிஃபர் கதாபாத்திரத்துக்காக அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. காரின் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழும் காட்சியில் தன்ஷிகா ‘ரிஸ்க்’ எடுத்து நடித்ததை நம்மிடம் நினைவுகூர்ந்தார் . “ஸ்டண்ட் இயக்குநர் பிரபு சந்திரசேகர் இந்தக் காட்சியை ‘டூப்’ போட்டு எடுத்துவிடலாம் என்றார். நான் மறுத்துவிட்டேன். இன்று ரசிகர்கள் மிக உன்னிப்பாகக் கவனித்துப் படம் பார்க்கிறார்கள்.
அவர்களை ஏமாற்ற முடியாது என்று கூறிவிட்டேன். ‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ ‘கபாலி’ எனக் கணமான கதாபாத்திரங்களை, என் மீது நம்பிக்கை வைத்து இயக்குநர்கள் கொடுத்ததால்தான், இன்று ‘உரு’ போன்ற படங்களில் என்னால் துணிந்து நடிக்க முடிந்திருக்கிறது. கமர்ஷியல் நாயகி என்பதைவிட ‘வெர்சடைல் நாயகி’ என்று அழைக்கப்படுவதையே எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய மரியாதையாகப் பார்க்கிறேன்” என்கிறார் மலையாளப் பட உலகிலும் கால் வைத்திருக்கும் தன்ஷிகா.
மாறுபட்ட ஆசை!
விஜய் நடித்த ‘பைரவா’, சிம்பு நடித்திருக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்படப் பல படங்களில் முன்னணிக் கதாநாயகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிவருபவர் சத்யா. சினிமாவும் ஆடையும் இவருக்கு ரசனையான தொழில் என்றாலும் கிரிக்கெட் மீது இவருக்குத் தீராத காதல். அதற்காகவே இவர் நடிகராகிவிட்டார். “என்னை ஒரு கிரிக்கெட் வீரனாக அப்பா எதிர்பார்த்தார். அது அவரின் கனவாகவே இருந்தது. கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு அதிகம் பிடித்துப்போனதால் அதில் இறங்கிவிட்டேன்.
நான் இருக்கும் சினிமாவிலேயே சி.சி.எல். எனப்படும் நட்சத்திரக் கிரிக்கெட் லீக் போட்டிக்குப் பெரிய மதிப்பு இருக்கிறது. அதில் கலந்துகொண்டு ஆட வேண்டும் என்றால் குறைந்தது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் ஏழு படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றார்கள். நடிக்க வாய்ப்பு என்று கேட்டதும், நல்ல வேடங்களே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஜீவா’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘ஏஏஏ’, ‘இரும்புத் திரை’ என வரிசையாகப் படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு, ஆடை வடிவமைப்பு இரண்டையும் தொடர்வேன். நட்சத்திர கிரிக்கெட் என் இலக்கு” என்கிறார் சத்யா.
வெற்றி நாயகன்
‘ஈரம்’, ‘அரவான்’ படங்களுக்குப் பிறகு ‘கோச்சடையான்’ படத்தில் நடித்ததற்காகக் கவனிக்கப்பட்டார் ஆதி. அதன் பின்னர் அவர் பெரிதும் நம்பிய ‘யாகாவாராயினும் நா காக்க’ கைகொடுக்காததால், தெலுங்குப் படவுலகில் பிஸியானார். தற்போது அவர் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் ‘மரகத நாணயம்’ படத்தின் மெகா வெற்றி மீண்டும் தமிழ்த் திரையின் பக்கம் அவரைத் திருப்பியிருக்கிறது. “மரகத நாணயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. கதையையும் இயக்குநரையும் நம்பி உருவான படம்.
இனி தொடர்ந்து புதுமுக இயக்குநர்களின் படங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். சென்னையில்தான் படித்தேன். இங்கே வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்தவன். எனக்குத் தமிழ் எளிதாகவும் மனதுக்கு நெருக்கமாகவும் இருக்கிறது. இதை ஆந்திராவிலேயே நான் சொல்லியிருக்கிறேன்” என்று தனக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவை உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் ஆதி.
‘மெர்சல்' காட்டும் விஜய்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு ‘மெர்சல்’ எனத் தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். பொதுவாக விஜய் போன்ற முன்னணிக் கதாநாயகன் நடிக்கும் படத்தின் தலைப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கசிந்துவிடும். இம்முறை தலைப்பு அப்படி முன்னதாக வெளியாகிவிடக் கூடாது என்பதில் படக்குழு மிகவும் கவனமாக இருந்தது. ‘திராவிடன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘தளபதி’ உள்ளிட்ட பல தலைப்புகள் இணையத்தில் வலம் வந்தபோது, "இவற்றில் எதுவுமே உண்மையில்லை" எனத் தெரிவித்தது படக் குழு. அதன்படி ‘மெர்சல்' என்ற தலைப்புடன் கூடிய ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தற்போது வெளியிட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago