இசை’ படத்தின் மூலம் தன்னை நேர்த்தியான இசையமைப்பாளராகவும் நிறுவிக்கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘இறைவி’ வரமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தில் விஜய்சேதுபதி, ராதாரவி என நடிப்புக்காக கவனிக்கபடும் பலர் இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைத்துத் தரப்பினரும் ஒருசேரப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்குத் திரையுலகின் வசூல் நாயகன் மகேஷ்பாபு நேரடித் தமிழ்ப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். தெலுங்கிலும் தயாராகும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் நம்மை எட்ட, “செல்வராகன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறேன். எதற்காக சென்னை வந்தேனோ அது இப்போது கையில் கிடைத்திருக்கிறது.” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் நம்மிடம்..
விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உங்களையும் சேர்த்துக்கொள்ளலாமா?
இந்த உலகதில் வெற்றிக்காக உழைக்காதவர்கள் மிகக்குறைவு. பலர் மற்றவர்களுக்கும் குடும்பத்துக்காகவும் கச்சாப் பொருளாகவே இருந்து தங்கள் காலத்தை கடந்து சென்றுவிடுகிறார்கள். இன்னும் பலருக்கு உழைப்புடன் நேரம் கூடிவரும்போது வெற்றிகளும் அவர்களுக்கானதாக ஆகிவிடுகிறது. ஒரு இரும்பு இரும்பாக இருக்கிறவரை அது அது எத்தனை உறுதியாக இருந்தாலும் அது வெறும் கச்சாப் பொருள்தான்.
அதுவே காந்தமாக மாறுகிறபோது அது அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது. இரும்பாக இருக்கும் நாம் காந்தமாக மாற ஒரு அவகாசம் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதுதான் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. எனக்கு வரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மதிக்கிறேன். எதையும் நான் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள தயாராக இல்லை. நான் 100 கிலோ மீட்டர் ஓடியாக வேண்டும். இப்போது ஐந்து கிலோ மீட்டர்தான் ஓடிவந்திருக்கிறேன். கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சோர்ந்துபோய்விடக் கூடாது என்ற ஊக்கத்தை யாரிமிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?
என் அப்பா. அவர் ஒரு ஆசிரியர். அவர் திரையில் நடினாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது கனவு நனவாகவில்லை. நான் நடிகனாகியே தீருவேன் என்று சொன்னபோது குடும்பத்தில் முதல் ஆளாக எதிர்த்திருக்க வேண்டிய அவர், நேர் மாறாக உற்சாகம் தந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். “ எம்.ஜி.ஆர். சின்னச் சின்ன கேரக்டர் பண்ணி 42 வயசுலதான் ஹீரோ ஆயிருக்கார் பார்த்துக்க.
எந்த சூழ்நிலையிலயும் பின்வாங்கிறாதப்பா” என்று சொன்னவர். அப்பா தந்த ஊக்கத்தைப் போலவே ஒரு பஸ் கண்டக்டராக இருந்து எத்தனை முயற்சிகளுக்குப் பிறகு நடிகராகியிருப்பார் என்று ரஜினி சாரை நினைத்தும் ஊக்கம் பெற்றிருக்கிறேன். இன்னொரு நட்சத்திரம் சில்வர் ஸ்டர் ஸ்டோலன்.
“நீ எத்தனை ஏழை என்றாலும் சரி, அணிந்துகொள்ள ஒரேயொரு ஆடைதான் இருக்கிறது என்றாலும் சரி, உறங்க இனி நடைபாதை மட்டும்தான் என்ற நிலை வந்தாலும் சரி, உன் கனவை மட்டும் அணைத்துவிடாதே. அது உன்னை ஒருநாள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியே தீரும். அதற்கு நானே உதாரணம்” என்று கூறியிருந்தார். அந்த வார்த்தைகளை அப்படியே எனக்குள் சேகரித்து வைத்துக்கொண்டதும் நெருக்கடியான காலங்களில் உயிர்ப்புடன் இருக்க உதவியது.
நம்மை இயக்கியவர் இன்று முக்கிய நடிகராக கவனம் பெற்றிருக்கிறார் என்ற முணுமுணுப்பு எதையும் காதில் வாங்கினீர்களா?
எனக்கு அப்படியொரு எதிரலை வர வாய்ப்பே இல்லை. ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகில் கடைசி ஊழியனாக இருக்கக்கூடிய புரடெக்ஷன் பாய் வரை நான் அனைவரிடமும் ஒரே மாதிரி பழகியிருக்கிறேன். அணுக எளிதானவனாக இருந்திருக்கிறேன். இன்றும் மொபைல் எண்ணை மாற்றாதவனாக இருக்கிறேன்.
என் படங்கள் வழியாக நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஊடக நண்பர்களில் தொடங்கி என்னை சந்திக்கும் ரசிகர்கள் வரை எல்லோருடைய வார்த்தைகளையும் காதுகொடுத்துக்கேட்டு தவறென்றால் அக்கணமே வருத்தம் தெரிவித்திருக்கிறேன். இதனால் இறைவி படம் வெளியானவுடன் என்னைப் பாராட்டாத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவரும் மனம் திறந்து பாராட்டினார்கள். இயக்குநர் நண்பர்களும் அப்படித்தான்.
‘இறைவி’யில் அருள் கதாபாத்திரத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் உங்களைத் தேர்தெடுத்ததன் பின்னணியில் உங்கள் தோல்விகளுக்குப் பங்கிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக. ஒருவனது தோல்விகள்கூட வீணாவதில்லை என்பதற்கு நான் உதாரணம் என்று தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அருள் கதாபாத்திரம் தனிப்பட்ட முறையிலும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்பதை மறுக்கவில்லை. ஓடாத வாட்ச்கூட ஒருநாளைக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும் என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல, தோல்விகளின் பின்னால் இருக்கும் உழைப்பு வீணாவதில்லை என்பதால் ‘எஸ்.ஜே.சூர்யா இந்தக் கதாபாத்திரத்தைச் செய்தால் சரியாக இருக்கும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நினைக்க வைத்திருக்கிறது.
அந்தப் படத்தில் எனக்குள்ளிருக்கும் நடிகனை முழுமையாக வெளிக்கொண்டுவந்த திறன் முழுவதும் அவரையே சாரும். ஆனால் அவருக்கு என்னைக் குறித்த நம்பிக்கையை அளித்தது ‘இசை’ படத்தில் எனது நடிப்பு என்று குறிப்பிட்டார். இன்றைய நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநருக்கு அந்த நம்பிக்கையை நம்மால் கொடுக்க முடிந்திருக்கிறதே என்று ஒரு இயக்குநராக கர்வம் கொள்கிறேன்.
முழுநேர நடிகராகிவிட்டீர்கள். இனி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை பார்ப்பது அரிதாகிவிடுமா?
அதுதான் இல்லை. ஆண்டுக்கு ஒரு படம் இயக்குநராக, நடிகனாக இரண்டு படங்கள். நான் இயக்கும் படங்கள் இனி எல்லோருக்குமான படங்களாக இருக்கும்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோமே?
இதுபற்றி நான் எதுவும் வாய்திறப்பது தர்மமாக இருக்காது. விரையில் அவர்களே விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’?
இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. செல்வராகவன் முதல்முறையாக த்ரில்லரை இயக்குகிறார். அவரைப்போன்ற ஒரு இயக்குநரின் கீழ் அதுவும் த்ரில்லர் கதையில் நடிப்பது இனிய, பயங்கரமான சவால் என்றே நினைக்கிறேன். அதுபற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago