திரை விமர்சனம்: பாயும் புலி

By இந்து டாக்கீஸ் குழு

விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வசிப்பது மதுரையில். இங்கே அடுத்தடுத்து நான்கு தொழிலதிபர்களைக் கடத் திக் கொல்கிறது ஒரு மாபியா கும்பல். இதனால் பயந்துபோகும் மற்ற தொழிலதிபர்களிடம் தலா இரண்டு கோடி கொடுக்காவிட்டால் நீங்களும் இதேபோல்தான் கொல்லப் படுவீர்கள் என்று பயமுறுத்திப் பணத்தைக் கறக்கிறது.

இந்தக் கொலைகளுக்குக் காரண மான குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையால் அனுப்பப்படும் விஷால் மறைமுக ஆபரேஷன் மூலம் முதல் கட்டமாகச் சில ரவுடிகளை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்கிறார்.எல்லோரையும் கொன்று விட்டோம் என்று நினைக்கும்போது இதற்கெல்லாம் பின்னால் இன்னொரு வர் இருப்பது தெரியவருகிறது. அந்த நபரைக் கண்டுபிடிக்கும் வேட்டை யில் விஷால் இறங்க, அந்த நபர் திறமையாகக் காய் நகர்த்துகிறார். குற்றவாளி யாரென்று தெரிந்ததும் அதிர்ந்துபோகும் விஷால் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

ரவுடிகளை வேட்டையாடும் போலீஸ் படங்களுக்கே உரிய ‘ரத்தக் கவிச்சி’அடிக்கும் கதைதான் பாயும் புலி. இதைக் குடும்ப இழையுடன் பின் னிய விதத்தில் சுசீந்திரன் வித்தியாசம் காட்டுகிறார். ஒரு சில காட்சிகளும் திருப்பங்களும் அதிர்ச்சியும் ஆச்சரிய மும் தருகின்றன. ஆனால் இவை அதிகமாக இல்லை என்பதுதான் பிரச் சினை. பல காட்சிகள் முன்னரே யூகிக் கக் கூடியவையாக உள்ளன. காதல் சமாச்சாரம் சம்பிரதாயத்துக்காகத் திணிக்கப்பட்டதுபோல் இருப்பதால் படத்தில் ஒட்டவே இல்லை.

விஷால் யாரைத் தேடுகிறார் என்பதைப் பார்வையாளர்களுக்கு விரைவிலேயே அடையாளம் காட்டி விடுகிறார் இயக்குநர். அதாவது, வில் லன் யாரென்று பார்வையாளர்களுக் குத் தெரியும், கதாநாயகனுக்குத் தெரியாது. வில்லனால் கதாநாயக னுடன் நேருக்கு நேர் மோத முடி யாத நிலை. இத்தகைய சூழல் விறுவிறுப்பான திரைக்கதைக்கு உத்தரவாதம் தருகிறது. ஆனால் சுசீந்திரன் அதைச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ளவில்லை. விளைவு, தெரிந்த முடிவை நோக்கி நகரும் படத்தைப் பொறுமையோடு பார்க்க வேண்டிய நிலைக்குப் பார்வை யாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

விஷால் காஜல் இடையிலான காதலில் புதிதாக எதுவும் இல்லை. தன் கண் முன்னால் விஷால் சில ரைச் சுட்டுத்தள்ளும்போது காஜல் காட்டும் உணர்ச்சி சூரியின் நகைச் சுவைக்கு ஈடாக இருக்கிறது.

விஷால் வழக்கம்போல ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம் காட்டுகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக் கவும் செய்கிறார். எப்போதும் போல அழகும் உற்சாகமுமாய்த் திரையில் தோன்றும் காஜல் அகர்வாலுக்கு இது இன்னொரு படம். அவ்வளவுதான். சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். சூரியின் நகைச்சுவை முயற்சிகள் சில இடங்களில் சிரிக்கவைக்கின்றன.

ஒளிப்பதிவிலும் பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் வேல்ராஜ் படத்தைத் தூக்கிப்பிடிக்க முயற் சித்திருக்கிறார். இமானின் பின்னணி இசை சுமார்தான். ‘யார் இந்த முயல் குட்டி’, ‘சிலுக்கு மரமே’ ஆகிய பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.

ஒரு காட்சியில் கான்ஸ்டபிள் சூரி நன்றாகக் குடித்துவிட்டு பைக்கை ஓட்டிச் செல்கிறார். பின்னால் துணை கமிஷனரான விஷால் உட்கார்ந்திருக் கிறார். குடித்துவிட்டு வண்டி ஓட்டக் கூடாது என்னும் சட்டம் காவலர் களுக்கு இல்லையா? காவல் துறை யின் சாகசங்களைக் காட்டும் இயக்கு நர் அவர்களுக்கான பொறுப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா? அல்லது காவல் துறையினரைப் பற்றிய விமர்சனமாக இந்தக் காட்சியை அமைத்திருக்கிறாரா?

பிரதான குற்றவாளியை நாயகன் கொன்றுவிடுகிறார். ஆனால் அந்தக் கொலைக்கான பழியைப் பிறர் மீது போட்டு அதற்காக நான்கு பேரைச் சுட்டுக் கொல்கிறார். குடும்பப் பெரு மையைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் இந்தக் கொலைகளும் மோசமான குற்றம்தான். இப்படிப் பட்ட காவல் துறை அதிகாரிதான் தார்மீகமான சக்தியா?

படம் முழுவதும் வேட்டுச் சத்தம், வெட்டு, குத்து, ரத்தம். இவற்றைக் குறைத்து, குற்றத்திற்கான காரணம், புலனாய்வு, ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் புலியின் பாய்ச்சல் இலக்கை எட்டியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்