இரட்டைச் சந்தோஷத்தில் இருக்கிறார், மகிமா. ‘நிமிர்ந்து நில்’ படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் ‘கிட்ணா’ படத்தில் மகிமாவுக்கு இரட்டை வேடம். வெகுளியாய்ச் சிரித்தவாறே பேட்டிக்குத் தயாரானார் மகிமா.
‘கிட்ணா’ படத்தில் அமலா பால் தானே கமிட் ஆகியிருந்தாங்க?
ஆமாம். அது எனக்கும் தெரியும். ஆனால், அவங்க ஏன் நடிக்கவில்லை என்று எனக்குத் தெரியலை. ஒரு நாள் சமுத்திரக்கனி சாரிடமிருந்து போன். அவர் இயக்குற படத்தில ஒரு ரோல் என்றாலே தலை கால் புரியாம ஆடுவேன். இப்போ இரட்டை வேடம். இன்னும் அந்தச் சந்தோஷத்துல இருந்து மீள முடியல.
சமுத்திரக்கனி கதை சொன்னாரா?
சொல்லாமலா...? ஆனா உங்களுக்குச் சொல்ல மாட்டனே! ரெண்டு நாட்களுக்கு முன்னாடி கூட, “யார் கேட்டாலும் கதையைப் பற்றி மூச்சுவிடாதே”ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கார். நான் கதைய வேனா யாருகிட்டயும் சொல்லாம இருக்கேன். ஆனா மூச்சுவிடாம இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.
டிசம்பர்ல ஷூட்டிங். எனக்கு போல்டான கேரக்டர். என்கூட தன்ஷிகா நடிக்கப்போறாங்க. கர்நாடக ஸ்டார் ஒருத்தர் நடிக்கப் போகிறார். சமுத்திரக்கனி படத்தை இயக்குவதோடு முக்கியமான ரோல்ல நடிக்கிறார். நாடோடிகள் எப்படிப் புதுசா இருந்துச்சோ, அதுமாதிரிதான் இந்தக் கதையும் ரொம்பப் புதுசு.
‘சாட்டை’ படத்துக்கு அப்புறம் ஏன் இடைவெளி எடுத்துக்கிட்டீங்க?
பிளஸ் டூ படிச்சிக்கிட்டிருந்தேன். நல்ல மெரிட் வாங்கிக் காட்டணும்னு ஒரு சேலஞ்ச். எக்ஸாம் முடிஞ்சதும் ‘என்னமோ நடக்குது’. அப்புறம் ‘மொசக்குட்டி’, ‘அகத்திணை’ படங்கள் முடிச்சிட்டேன். இந்த இடைவெளி நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்ய எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கு.
கேரளாவில் உங்க சொந்த ஊர் எது?
காசர்கோடு. மங்களூர் பக்கம். இப்போ நல்ல மழை. சொந்த ஊர்ல மழையில நனையுறமாதிரி சந்தோஷம் என்ன இருக்கு? காசர்கோடு வந்தா ஃபேன்ஸ் தயங்காம எங்க வீட்டுக்கு வரலாம்.
ஆக்ஷன் படங்கள்ல நடிக்க ரொம்ப ஆர்வம்னு சொன்னீங்களாமே?
ஆமா! டான்ஸ், ரொமான்ஸ், சென்டிமென்ட் ஈஸியா செய்துவிடலாம். ஆக்ஷன் கதைன்னா ஹீரோயின்ஸ் யோசிப்பாங்க. எனக்கு
என்னவோ, ஆக்ஷன் சீக்குவன்ஸ் ரொம்பவே பிடிக்குது. ஃபைட் சீனைக் கைதட்டி விசிலடுச்சு ரசிப்பேன். ‘பருத்திவீரன்’ பிரியாமணி, ‘அருந்ததி’
அனுஷ்கா, ‘மேரி கோம்’ பிரியங்கா சோப்ரா இவங்க கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிருக்கக் கூடாதான்னு மனசுக்குத் தோணுச்சு. அடுத்து பிரியங்கா சோப்ரா, நம்ம ‘கிரண்பேடி’ கேரக்டரில் நடிக்கப்போறாங்களாம். அவங்களை மீட் பண்ணினா ஹேன்ட்ஷேக் கொடுக்கணும். அவங்ககிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும். நான்
இப்படிச் சொன்னதும் ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன்னு சொன்னதா எழுதிடாதீங்க. நம்மோட ரோலுக்கு டெப்த் இருந்தால்போதும். ‘மேரி கோம்’ மாதிரியான படங்களிலும் நடிக்கணும். கிளாமரை பேஸ் பண்ணி கரீனா நடித்த ‘ஹீரோயின்’
படம் மாதிரியான கேரக்டர்களும் ஏற்கணும். அதிலதான் நம்மோட பெஸ்ட் இருக்குன்னு நம்புகிறேன். என்னோட ஒல்லி உடம்பு, ஆக்ஷனுக்கு அருமையா ஒர்க் அவுட் ஆகும்னு சொல்றாங்க. எனக்கும் நம்பிக்கை இருக்கு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago