நான் சொன்னா பத்து லட்சம் பேருக்குப் பிடிக்கும்!: சித்தார்த்துடன் ஒரு சந்திப்பு

By கா.இசக்கி முத்து

“லவ்வர் பாய்ங்கிற பேர் என்னை 12 வருஷமா துரத்திகிட்டே இருக்கு. கிசுகிசு இல்லாம இருந்தா ரொமாண்டிக் ஹீரோவா இருக்கிறது கஷ்டம்னு நினைக்கிறேன். அதுவே ஆக்‌ஷன் ஹீரோவா இருந்தா ஜிம்லே இருக்கார், இவ்வளவு முட்டை சாப்பிடுறார்னு கிசுகிசு வரலாம். ஆனா நான் அதெல்லாம் பண்றது இல்லயே.” என்று கலகலவெனச் சிரிக்கிறார் தற்போது ஜிகிர்தாண்டா படத்தின் மூலம் கேங்ஸ்டர் பாயாக வெளிவரவிருக்கும் சித்தார்த். அவரிடம் பேசியதிலிருந்து..

‘ஜிகர்தண்டா' படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஒரு படத்தோட கதையைக் கேட்டு ஹிட்டாகும், ஃப்ளாப்பாகும்னு எந்தப் படத்தையும் நான் ஒத்துக்கிறதில்லை. எனக்கு மதுரை ரொம்ப பிடிக்கும். நான், கார்த்திக் சுப்புராஜ், கருணா, சிம்ஹா, கேமிராமேன் கேவ்மிக் இப்படி ரொம்ப சந்தோஷமான குரூப். செட்டுக்கு வந்தவங்க எல்லாருமே, இந்தப் பசங்க இப்படிக் கூத்தடிங்கிறாங்கனு சொல்லுவாங்க. எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், கடின உழைப்பையும் கொட்டிருக்கோம்.

கார்த்திக் ரொம்ப தெளிவா, தனக்கு என்ன வேணுமோ அதைக் கேட்டு வாங்குற ஆள். ‘சார்.. நீங்க நடிங்க. எது பிடிக்குது, பிடிக்கலன்னு நான் எடுத்துக்கிறேன்ன்னு சொல்லுவார். படம் முடிஞ்சிட்டதால ஜிகிர்தண்டா டீமை ரொம்ப மிஸ் பன்றேன்.

தொடர்ச்சியா இப்போ தமிழ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டீங்களே?

ஆமாம். முதல்ல ‘ஜிகர்தண்டா', அப்புறம் ‘காவியத் தலைவன்' அதுக்கு அப்புறம் ‘லுசியா' தமிழ் ரீமேக். அப்புறம் என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலமா 2 படங்கள் தயாரிக்க இருக்கேன்.

இயக்குநர் சித்தார்த்தை எப்போ பார்க்கலாம்?

இயக்கத்தில் குதிக்க ஆசைதான். ஆனா அகோரப் பசியோட இருக்கிற நடிகன் சித்தார்த்துக்கு இப்போ தொடர்ச்சியா பெரிய வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருக்கு. இப்போ மற்ற மொழிகளில் இருந்து, ஏன் தமிழ்ல மட்டும் தான் படம் பண்ணுவீங்களா கேட்டுட்டு இருக்காங்க. தொடர்ச்சியா 4,5 படங்கள் வரிசையா இருக்கு. நல்ல டைம்ல தமிழுக்கு வந்துட்டேன். அதைத் தக்க வெச்சுக்கணும். இயக்கத்துக்கு சரியான நேரம் வரும்.

தொடர்ச்சியா உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்துக்கிட்டே இருக்கே?

தொடர்ச்சியா லவ் படங்கள் பண்றதுனால கிசுகிசு வர்றது இயல்புதான். எல்லாமே கல்யாணம் பண்ற வரைக்கும் தானே. பார்க்கலாம். அம்மா, அப்பா முடிவு பண்ண உடனே கல்யாணத்தை பத்திச் சொல்றேன்.

எந்த மாதிரியான படங்கள் பண்றது கஷ்டம்னு நினைக்கிறீங்க?

ஒரு நடிகனா எல்லா வகையான படங்களும் பண்ணனும்னு நினைக்கிறேன். ‘ரங் தே பசந்தி’னு ஒரு படத்துல பகத் சிங் கேரக்டர் பண்ணினேன். நிறைய பேர் பகத் சிங் கேரக்டருக்காக ரொம்ப மெனக்கிட்டிருக்காங்க. அஜய் தேவ்கன்கூட பகத் சிங் வேடத்துல நடிச்சதுக்காக தேசிய விருது வாங்கியிருக்கார். என்னை விட நீ நல்ல பண்ணியிருக்கனு சொன்னார். ஏன் சொன்னார் அப்படிங்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு.

நான் ‘ரங் தே பசந்தி’ படத்துக்காக ரொம்ப எல்லாம் மெனக்கெடல. பகத் சிங் 23 வயசுல செத்த ஒரு பையன். நான் பகத் சிங் கேரக்டர் பண்ணும்போது எனக்கு 26 வயசுதான். எந்த வயசுல என்ன மாதிரியான கேரக்டர் பன்றோம்ன்னு ஒண்ணு இருக்கு. அதனால எனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியல. இந்த படம் பண்றது கஷ்டம், அந்த படம் பண்றது கஷ்டம்னு ஒண்ணுமே கிடையாது. என் தலைவர் சுந்தர்.சி ஒரு வார்த்தை சொல்லுவார். என்னவா இருக்கட்டும் பிரதர். நடிகன் நடிக்கும்போது நடிக்கிறதா தெரியக்கூடாது. உன்கிட்ட அது இருக்குது பிரதர், அதான் உனக்கு ப்ளஸ்னு சொன்னார். நான் உண்மையிலேயே அப்படிதான், நாம நடிக்கிறோம் அப்படிங்கிறது தெரியக் கூடாதுன்னு நினைப்பேன்.

நீங்க இயக்குநர் ராமோட நெருங்கிய நண்பராமே?

இயக்குநர் ராமும் நானும் ரொம்ப வருஷமா நெருங்கிய நண்பர்களா இருக்கோம். நாங்க ஒரு படம் பண்றதா இருந்தோம். வருங்காலத்துல கண்டிப்பா பண்ணுவோம். எப்படா நாங்க ரெண்டு

பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு நிறைய பேர் எதிர்பார்க்குறாங்க. அவரோட 4 கதைகள் என்கிட்டதான் இருக்கு. கண்டிப்பா சேர்ந்து படம் பண்ணுவோம்.

தொடர்ச்சியா ட்விட்டர்ல இயங்கிக்கிட்டே இருக்கீங்களே?

எல்லாத்தையும் பற்றி கருத்து சொல்றதை பார்த்துட்டு, என்னோட நண்பர்கள் என்னை ஒப்பினியன் ஸ்டார்னு சொல்லுவாங்க. எனக்கு அமைதியா இருந்தா பிடிக்காது. நாம சொல்றது சில பேருக்கு பிடிக்கும், சில பேருக்கு பிடிக்காது. இப்போ 10 லட்சம் பேருக்கு பிடிக்குது. மைக்ரோ பிளாக்கிங்கை ஒரு ஆக்டிவான மீடியமா பார்க்குறேன். நான் ஏதாவது ஒரு விஷயம் உடனே சொல்லணும்னு நினைச்சா, என்னால 10 லட்சம் பேருக்கு உடனே சொல்லிட முடியும். அடிக்கடி மீடியாவை கூப்பிட்டு அவங்க நேரத்தை வீணடிக்க முடியாது இல்லையா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

35 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்