முன்னோட்டம்: அங்கத வடிவில் அறிவியல் புனைவு!

By திரை பாரதி

புதுமையான ஒருவரிக் கதையைத் தேர்ந்தெடுத்தல், திரைக்கதையைச் செதுக்குதல் எனத் தொடங்கி படமாக்கல்வரை நேர்த்தியுடன் முழுப் படத்தை உருவாக்கத் துடிக்கும் புதிய திறமைகள் குவியும் இடமாகியிருக்கிறது தமிழ்த் திரை. ‘இலெமூரியன் திரைக்களம்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துவரும் ‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’ என்ற புதிய படத்தின் படக் குழு பற்றியும் தற்போது கோடம்பாக்கத்தினர் பேசுகிறார்கள்.

ஒரு சிறு நகரத்தில் அரசியல் பின்புலத்தோடு அதிகாரம் செலுத்திவரும் படிப்பறிவற்ற இளைஞன் கதையின் நாயகன். அறிவை வளர்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில் அவன் செய்யும் கோமாளித்தன முயற்சிகளால் அந்தப் பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அவனைக் கட்டுப்படுத்த மக்கள் திட்டமிடும்போது, தனது விண்வெளிச் சுற்றுலாப் பயணத் திட்டத்தை அறிவிக்கிறான் கதை நாயகன்.

கதை நாயகனுக்கு எப்படி விண்வெளிப் பயணம் செல்லும் ஆசை வந்தது? தனது குறிக்கோளில் அவன் எப்படி வெற்றியடைந்தான்? அவனைத் தடுக்க நகர மக்கள் செய்த முயற்சிகள் என்ன? இவற்றையெல்லாம் சுவாரசியமான, அவல நகைச்சுவையாக (பிளாக் காமெடி) சொல்லியிருக்கும் படமே ‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’.

திரைக்கதை அமைத்து இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுக இருப்பவர் ஜெயபிரகாஷ். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுச் செய்திருக்கிறார், இவருடன் இணைந்து இலெமூரியன் திரைக்களம் சார்பில் யாழ்மொழி ரா. பாபுசங்கர் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

அறிவியல் புனைவு அவல நகைச்சுவைப் படமாக உருவாகிவரும் இதில் கதைநாயகனாக அத்விக் ஜலந்தர் அறிமுகமாகிறார். இவர் லண்டன் பெட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை மக்கள் தொடர்பியல் பயின்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பைப் பயின்றிருக்கிறார். மேலும், நவீன நாடகக் கலைஞர்களான பூஜா ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், தற்காப்புக்கலை வீரர் ஜோகிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் பற்றி ஆய்வு செய்துவரும் பறையிசைக் கலைஞர் சே. தமிழ், பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இசை சகிஷ்னா சேவியர்.

தெலுங்கானா மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சிறப்பு அனுமதி பெற்று படத்தில் 50 சதவீதத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். எஞ்சிய பகுதிகள் அனைத்தும் மதுரை, அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் படமாக்கியிருக்கிறார்கள். விரைவில் படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு ஆகியவற்றுக்குத் திட்டமிட்டு வருகிறது படக் குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்