கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்
கத்தி ரிலீஸ் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கொதித்தெழுந்தார்கள். #WeWantTHALA55ForPongal2015 என்ற ஹேஷ்டேக்கைத் தயாரித்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள். காரணம், அவர்களுக்குப் பொங்கல் 2015 அன்றுதான் அஜித்தின் 55-வது படம் வெளியாக வேண்டுமாம்.
அந்த ஹேஷ்டேக்கில், பலரும் அஜித்தின் பல்வேறு சாதனைகளையும், படத்தை ஏன் பொங்கலுக்கு வெளியிடச் சொல்கிறோம் என்ற கருத்துகளையும் வெளியிட்டார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்திய அளவில் இந்த டேக் டிரெண்டாது. தற்போது இந்த டேக் வலம் இன்னும் காலாவதியாகாத நிலையில் #ajith56 என்ற புதிய டேக்கிற்கு உயிர்கொடுத்து அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற பரபரப்பைக் கிளப்பிவருகிறார்கள்.
திணறிய ஷாருக் கான்
ஹேப்பி நியூ இயர் படம் வெளியானதைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக் கான் பதிலளித்தார் . அதற்காக #AskSrk என்ற டேக்கைத் தயாரித்து, அந்த டேக்கில் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன் என்று அறிவித்தார். அவர் அறிவித்த சில மணித்துளிகளில் இந்திய அளவில் முதல் இடத்தில் #AskSrk என்ற டேக் வந்தது.
ஷாருக் கான் தலையில் அடித்துக்கொள்ளும் விதமாக ஏடா கூடமாகக் கேட்கப்பட்ட கேள்விகள் அதிகமாகக் குவிந்ததால், திணறிய ஷாருக் கான் சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று சினிமாவிலிருந்து நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்பது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago