கோலிவுட்டின் ஹாட் ஹீரோயின்கள் பட்டியலில் அலட்டல் இல்லாமல் இடம்பிடித்திருக்கிறார் ஆன்ட்ரியா. அச்சில் வார்த்த அழகுப் பதுமை போல் தோற்றம், கமல் என்றாலும் கணேஷ் வெங்கட்ராம் என்றாலும் ஓகே சொல்லும் குலுமனாலிப் புன்னகை. அவ்வப்போது சின்னதாக எட்டிப் பார்க்கும் கோபம் இதெல்லாம் ஆன்ட்ரியாவின் ஆல் டைம் ஆட்டோகிராஃப். பேட்டி என்றால் நம்மை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிடும் ஆன்ட்ரியாவை, அவரது ஒப்பனை உதவியாளர் வழியாகத்தான் பிடித்தாக வேண்டும். இம்முறை ஹேப்பி மூடில் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகளோடு ‘தி இந்து’ வுக்காக அவர் பேசியதிலிருந்து...
கமல் ஹாசன் ஒரு நடிகையாக உங்களை அடையாளம் காட்டினார். ஆனால் ‘அரண்மனை’ படத்தில் சுந்தர்.சி, உங்களோட முழுமையான நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்துவிட்டார்ன்னு சொல்றாங்களே?
கதையும் கதாபாத்திரமும் பிடித்துத்தான் எல்லாப் படங்களிலும் நடிக்கிறேன். என்னோட லக் ‘அரண்மனை’ படம் இப்போ ஸ்பெஷல் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அதுக்கு சுந்தர். சிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். இந்தப் படத்தில் முழுக்கப் புடவையிலேயே வருவேன். இதுவரைக்கும் அப்படி எனக்கு அமைந்ததில்லை. போன வருஷம் மலையாளத்தில் வெளியான ‘அன்னாயும் ரசூலும்’ படத்தால் இப்பவும் கேரளா போகும்போது பெரிய அங்கீகாரம் கிடைக்குது.
இப்போ ராம் இயக்கத்தில் நடிக்கிற ‘தரமணி’ படமும் அப்படித்தான். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே ஈக்வெல் இம்பார்ட்டன்ஸ் இருக்கு. இதுவரைக்கும் நடிப்பா இல்லை பாடலான்னு ஃபோக்கஸ் இல்லாமல் இருந்தேன். அரண்மனையும் தரமணியும் நான் நடிப்புல அதிகமா டிராவல் பண்ணலாம்கிற நம்பிக்கைய கொடுத்துருச்சு. ஆனாலும் நான் பாடினா நல்லா இருக்கும்னு என்னை நம்பிக் கூப்பிடுற பாடலைக் கண்டிப்பா பாடிக் கொடுப்பேன்.
கமலைப் பற்றி வாயே திறக்க மாட்டேன்றீங்களே?
கமல் சாரைப் பற்றித் தனியா புத்தகமே எழுதலாம். காதல், ஆக்ஷன், திரில்லர், காமெடி, எக்ஸ்பெரிமெண்ட் இப்படி எல்லா ஜானர்லயும் வெற்றி கொடுத்தவர் கமல் ஒருத்தர்தான். இப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல இதுதான் முதல் படம்கிற மாதிரி சின்சியராக இருப்பார். அதெல்லாம் அவரால் மட்டும்தான் முடியும்.
சிம்புகூட ‘இது நம்ம ஆளு’, ஜெய்கூட ‘வலியவன்’ - என்ன கேரக்டர்ஸ் பண்றீங்க?
‘வலியவன்’ கமர்ஷியல் படம். சீரியஸாக இல்லாமல் முறையாக ஜாலியான ரோல். ‘இது நம்ம ஆளு’ படத்துல நடிக்கணும்னு அந்தப் படத்தோட கேமராமேன் பாலசுப்ரமணியெம் சார் கேட்டார். அபாரமான திறமைசாலி. அவர் சொன்ன உடனே ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்துல ஹேர் ஸ்டைலில் தொடங்கி என்னோட லுக்வரை எல்லாமே ரொம்பவே டிஃபரண்ட். ஒவ்வொரு படத்திலும் என்னோட லுக் மாறிகிட்டே இருக்கணும்னு ஆசைப்படுவேன். அது எனக்குத் தானாகவே அமையுது.
கெஸ்ட் ரோல் ஆக்ட்ரஸ்னு உங்களுக்கு ஒரு பேர் இருக்கே?
அதுக்காக நான் எப்பவுமே ஃபீல் பண்ணப்போறதில்லை. இப்போகூட சுந்தர். சி சார், ஒரு கேமியோ சீன்தான் என்று ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டி வரச் சொன்னார். போய் நடிச்சுக் கொடுத்தேன். எப்பவுமே என்ன ரோல் என்பதில் எனக்குப் பிரச்சினை இல்லை. என்னோட எஃபக்ட் ஸ்கிரீன்ல தெரியக் கூடாது. சில சீன்ஸ் வந்தாலும் என் கேரக்டரும் அதை எழுதின இயக்குநர் திறமையும்தான் தெரியணும். அப்போ ஆடியன்ஸ் ஆட்டோமேட்டிக்கா நம்மள ரசிப்பாங்க.
விரைவில் கம்போஸர் ஆகப் போறீங்களாமே?
இது வதந்தி. என்னோட பர்சனல் இன்ட்ரஸ்ட் காரணமா இசையில ஆர்வம் காட்டுகிறேன். அப்பப்போ தனியார் நிறுவனங்களோட நிகழ்ச்சிகளில் லைவ் மியூசிக் ஷோ பண்ணிக் கொடுக்கிறேன். மத்தபடி படங்களுக்கு மியூசிக் பண்ண மாட்டேன். அது என்னோட ‘கப் ஆஃப் டீ’ இல்ல.
ஆன்ட்ரியாவிற்கு எந்த இசை வடிவம் பிடிக்கும்?
இங்கே உள்ள கிளாசிக்கல் இசையோட வெரைட்டி செம மாஸ். நம்ம நாட்டில் இதோட வேல்யூ ரொம்பவே ஸ்டிராங்கா இருக்கு. எனக்கு கர்னாடிக் ரொம்பவே பிடிக்கும். சின்ன வயசுல கர்னாடிக் மியூசிக்கை மிஸ் பண்ணிட்டேனேனு வருத்தமா இருக்கும்.
சாப்ட்வேர் உதவியோட பாடத் தெரியாதவர்களையும் இப்போ பாடகராக்கி விடுகிறார்களே! இதை எப்படிப் பார்க்குறீங்க?
ஒரு சின்ன அறைக்குள் வேண்டுமானால் எல்லாரும் பாடலாம். இப்படி ஏமாத்துறவங்க மேடை நிகழ்ச்சியில் ஏமாற்ற முடியாது. நான் ஸ்டேஜ் ஷோக்களில் பாடித்தான் டிரெயினிங்கே ஆனேன். சிலர் ஸ்டேஜ்லயும் பாடுற மாதிரி நடிக்கிறாங்க. அந்த அளவுக்கு டெக்னாலஜி உதவியாக இருக்கு. ஆனா, திறமை எங்க இருந்தாலும் தனியா தெரியும். திறமை இருக்கிறவங்களுக்குக் கண்டிப்பா அங்கீகாரமும், பாராட்டும் கிடைச்சே தீரும்.
உங்களைப் பற்றி எந்தக் கிசுகிசுவும் இப்போ வர்றதில்லையே? காசிப் இல்லாமல் எப்படி ஹாட் ஹீரோயினாக இருக்க முடியுது?
என்னுடைய வேலைகளை மட்டும் சரியா செய்யுறதுல கவனத்தைச் செலுத்துறேன். மற்ற விஷயங்களைப் பத்தி யோசிக்கிறதில்ல. அதுகூடக் காரணமா இருக்கலாம்.
ரசிகர்களைச் சந்திக்கும்போது என்ன மாதிரியான காம்ப்ளிமெண்ட் கிடைக்குது?
என் குரல் பற்றிதான் அதிகம் பேசுவாங்க. இப்போ ‘அரண்மனை’ படத்தோட நடிப்பு பற்றி. சின்ன பொண்ணா இருக்கீங்களேன்னு சொல்லுவாங்க. இப்போ எல்லோரும் செல்ஃபி எடுத்துக்க ஆசைப்படுறாங்க. ஆனா அது முடியுறதில்ல. அதுக்காக என் ஃபேஸ்புக் பேஜ்ல என்னோட போட்டோஸ் அப்பப்போ போட்டு அவங்களை உற்சாகப்படுத்துவேன்.
சமீபத்துல பீச்ல எடுத்துக்கிட்ட என் போட்டோ ஒண்ணை ஷேர் பண்ணினேன். அஷரப்னு ஒரு ரசிகர் வந்து “உன் முகத்தைக் காணத்தான் கரை புரண்டு வருகின்றன அலைகள்… அவை என்ன பாவம் செய்தன.. உன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய்?” என்று என் போட்டோவுக்கு தகுந்த மாதிரி வருணித்து எழுதியிருந்தார். அதைப் படிச்சதும் ரொம்ப மெல்ட் ஆகிட்டேன். இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.
சமீபத்திய இசையமைப்பாளர்களில் உங்களுக்குப் பிடித்தவர்?
அனிருத், சந்தோஷ் நாராயணன் இந்த ரெண்டு பேர் இசையும் ரொம்பப் புதுசா இருக்கு. ரெண்டு பேருமே நல்ல ஃபார்முலாவை உருவாக்கியிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் சவுண்ட் ரொம்ப டிஃபரெண்ட். அவர் இன்னும் பல மடங்கு கவனிக்கப்படணும். ரசிகர்கள் இன்னும் அவரைக் கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை.
- படங்கள்: சரித் சி.வர்மா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago