கே.எஸ்.ரவிக்குமாரும் நானும், கோபத்தால் ஒரு வரை ஒருவர் நன்றாகப் பட்டை தீட்டிக் கொண் டோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 25 ஆண்டுகால திரையுலக பயணத்தை முன்னிட்டு ராஜ் டிவி சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை அவருக்கு பாராட்டு விழா நடந்தது. ‘என்றென்றும் கே.எஸ்.ரவிக்குமார்’ என்ற பெயரில் நடந்த இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜூன், மனோபாலா, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சேரன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
படப்பிடிப்பின்போதும், பட விழாக்களின் போதும் இதே இடத்தில் பலமுறை கே.எஸ்.ரவிக் குமாரை வாழ்த்தியிருக்கிறேன். இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு வித்திட்டவர், ஏவி.எம்.சரவணன். அதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். ‘ஒருமுறை இவரைப் பார்த்து விட்டால் போதும். அவர் உனக்கு பொருத்தமானவராய் தெரிவார்’ என்றார். அவர், அவ்வளவு சீக்கிரம் யாரையும் சிபாரிசு செய்ய முன்வரமாட்டார். அப்படி கே.எஸ்.ரவிக்குமாரை அறிமுகப்படுத்தும்போதே உதாரணமாக நம்ம எஸ்.பி.முத்து ராமன் மாதிரி என்றும் சொன்னார். அவரைப்போல் ஒருத்தர் இருக்க முடியாதே என்று எனக்கு அப்போது ஒரு சந்தேகம். ஆனால், அவர் எஸ்.பி முத்துராமனின் அடுத்த சந்ததியில் ஒருத்தர் என்பது அவரிடம் பழகப்பழக புரியத் தொடங்கியது. என்ன ஒன்று, அவருக்கு கோபம் கொஞ்சமாக வரும். இவருக்கு கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். நாங்கள் இருவரும் பணியாற்றிய நாட்கள் வேறமாதிரி. நாங்கள் இருவருமே கோபக்காரர்கள் என்பதால் ஒருத்தரை ஒருத்தர் நன்றாக பட்டைத் தீட்டிக்கொண்டோம். இரண்டு சக்கரமும் வேகமாகப் போகும்போது தீப்பொறி பறக்கும் இல்லையா? அப்போது ஆயுதம் கூராயிடும். அப்படித்தான் எங்கள் கோபம் இருந்தது. எங்களுக்குள் ரோஷம் எந்த அளவுக்கு இருக்கிறதோ பாசமும் அந்த அளவுக்கு உண்டு.
ரவிக்குமாருடன் சேர்ந்து உழைத்த நாட்கள் ஞாபகம் வந்ததால் இங்கு வந்தேன். வியர்வை சிந்தும் அளவுக்கு தயாரிப்பாளரின் சிரமங்களையும் அறிந்த உழைப் பாளி அவர். தயாரிப்பாளரின் இயக்குநர் என்றே சொல்வார்கள். என்னைப்பொருத்தவரைக்கும் மக்களின் இயக்குநர். அதனால்தான் அவர் நடிகனின் இயக்குநர், தயாரிப்பாளரின் இயக்குநர் என்ற அடையாளங்களை எல்லாம் பெற்றார். அதுக்கு காரணம் அவரது உழைப்பு. உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!’’
இவ்வாறு கமல் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “ரவிக்குமாரும், நானும் 10 படங்களில் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறோம் என்று இங்கே சொன்னார்கள். வெளிவரவிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை சேர்த்து 11 படங்கள் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறோம். . அவருடைய கேரியரில் 30 சதவீத படங்களில் நான் இருந்திருக்கிறேன். அவருடைய முதல் படமான ‘புரியாத புதிர்’ படத்தில் ஒப்புக்கொண்ட நேரம் ஐதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் 60 அடி ஆழத்தில் குதித்து கழுத்தில் அடிபட்டது. அதன்பலனாக இன்றும் ‘இரும்பு மனிதன்’ போல கழுத்தின் உள்பகுதியில் ப்ளேட்டுடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.
அந்த விபத்து நேரத்தில், ‘இனி சரத்குமார் அவ்வளவு தான்’ என்று எல்லோரும் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்த சூழலில் என்னை எப்படியும் நடிக்க வேண்டும் என்று சொல்லி நடிக்க வைத்தவர் ரவிக்குமார். என்னை உன்னதமான நடிகன் என்று சொல்லிக்கொள்வதை பெருமையாக நினைக்க வைத்தது ரவிக்குமார்தான். கமலையும் என்னையும் வைத்து அவர் படம் எடுக்க சொல்வதாக கேள்விப் பட்டேன். அதற்கு நான் ரெடி!’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனின் கேள்விகளுக்கு கே.எஸ்.ரவிக்குமார் பதில் அளித்தார். அதில் சில கேள்வி பதில்கள்.
சேரன்: என்னையும் சேர்த்து உங்களிடம் பணியாற்றிய அத்தனை உதவியாளர்களும் இன்று வயிறார சாப்பிடுகிறோம். அதற்கு நீங்கள்தான் காரணம். படப்பிடிப்பில் தவறு செய்துவிட்டு உங்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் எல்லாம் இருக்கிறது. அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். உங்களிடம் இங்கே சில கேள்விகள்! கதை டிஸ்கஷனில்ல நன்றாக சீன் சொன்ன உங்கள் உதவியாளர் யார்?
கே.எஸ்.ரவிக்குமார்: சீன் என்றதும் உடனே ஆர்வமாக வந்து சொல் பவன் ரமேஷ்கண்ணா. சென்டிமென்ட் சீன்களுக்கு ஸ்பெஷல் சேரன். காமெடிக்கு எஸ்.பி.ராஜ்குமார்.
சேரன்: உங்களுடைய மாணவர்களில் யாரை மிகவும் பிடிக்கும்?
கே.எஸ்.ரவிக்குமார்: ஒருத்தனை எப்படி சொல்ல முடியும். எல்லோரையும் பிடிக்கும். நீங்கள் எல்லோரும் என்னைக் காட்டிலும் உச்சிக்கு போனால்தான் எனக்கு பல மடங்கு சந்தோஷம்.
பாராட்டு விழாவின் இடை யிடையே நடனம், நாட்டியம், பட்டிமன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago