Cast Away, 127 hours, Life of Pi போல, சர்வைவல் (உயிர்வாழ வேண்டும் என்ற உந்துதல்) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கின்றன (தமிழில் மரியானைத் தவிர எதுவும் தோன்றவில்லை). ஒரு சாதாரண மனிதன், விதி வசத்தால் தனியாளாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பப் படும் பாடுகளே, இவ்வகைக் கதைகளின் அடிப்படை. இந்த வகையான படங்கள், பத்தில் ஒன்பது, கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் உயிர் பிழைத்துவிடும் என்பது வரலாறு. அப்படி சமீபத்தில் வந்து ஹிட்டடித்திருக்கும் படம்தான் 'கிராவிட்டி'.
ஒரு விண்கலத்தைப் பழுதுபார்க்கும் போது ஏற்படும் விபத்தால், அந்த விண்வெளி வீரர்களின் குழுவில் அனைவரும் இறந்து போக, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் சாண்ட்ரா புல்லக் (SPEED பட நாயகி) மட்டும் உயிர் பிழைக்கிறார். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சங்கதிகளும் சேதமாகியிருக்க, பக்கத்தில் (100கி.மீ தொலைவில் !) மிதந்து கொண்டிருக்கும் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை எப்படியாவது அடைந்தால், உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில், பல்வேறு, அக + புறத் தடைகளைத் தாண்டி, சாண்ட்ரா எப்படி பூமிக்கு வருகிறார் என்பதே கதை.
படத்தில், ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் கிளேஷக்களில் இருந்து, பலவகையில் நிவாரணங்கள் உள்ளன. படம் 3198ஆம் வருடம் நடக்கவில்லை. வேற்றுகிரக வாசிகளின் அட்டூழியம் இல்லை, யார் வயிற்றையும் கிழித்துக் கொண்டு, விசித்திரமான ஜந்துக்கள் வரவில்லை, வித்தியாசமான ஆயுதங்கள் இல்லை, எல்லாம் வெடித்துச் சிதறும் நேரத்தில், நாயகன் நாயகியின் பாழாய்போன (உதட்டோடு உதடு) முத்த்த்தக்காட்சி இல்லை... இப்படிப் பல.
படத்தின் பிரதானப் பாத்திரம், சாண்ட்ரா புல்லக் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் ஆகாய மார்க்கத்தில் சீக்கிரம் பரமபதம் அடைகிறார்கள். படத்தினை ஒற்றை மனுஷியாக, தோளில் சுமக்கிறார். புதிதாக பயிற்சி முடித்து, விண்ணிற்கு வந்திருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதிலிருந்து, மெல்ல மெல்ல, தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் சூழல் வரை, மகிழ்ச்சி, பயம், தவிப்பு, இயலாமை எனப் பல்வேறு விதமான உணர்ச்சிகளை, அவ்வளவு பெரிய விண்வெளி உடைக்குள்ளிலிருந்து அள்ளித் தெளிக்கிறார். பல சமயங்களில், அவர் கண்ணும், உடல் மொழியும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. சான்ட்ராவிற்கு அடுத்து, ஜார்ஜ் க்ளூனி, 20 நிமிடம் சிறப்பாக கௌரவித்துவிட்டுச் செல்கிறார்.
இவர்களைத் தாண்டி, நம்மை படத்தோடு ஒன்றச் செய்வது, அதி துல்லியமான கிராபிக்ஸ், அதன் காட்சியமைப்பு, இசை மற்றும் ஒலி. படத்தின் ஒவ்வொரு நொடியிலும் கிராபிக்ஸ் வியாபித்திருக்கிறது. வான்வெளி, அங்கிருந்து தெரியும் பூமி, நட்சத்திரக் கூட்டம், உடையும் விண்கலம், சுழற்சியில் இருக்கும் உடைந்த பாகங்கள், விண்கலத்தின் உள் மிதக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் என, கிராஃபிக்ஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். 3டி, அதை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. வீரர்கள் மிதக்கும் போது, அவர்களுடனே மிதப்பது போல, சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் பாகங்கள், நம்மைச் சுற்றி இருப்பதைப் போல உணர முடிகிறது. 'அவதார்' படத்திற்குப் பிறகு, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது 'கிராவிட்டி'.
படத்தை இயக்கி, திரைக்கதையிலும், படத்தொகுப்பிலும், தயாரிப்பிலும் பங்கெடுத்திருப்பவர், மெக்ஸிக திரைப்பட இயக்குனர், அல்ஃபோன்சோ கௌரன். ஏற்கனவே சில்ட்ரன் ஆஃப் மென், ஹாரிபாட்டரின் மூன்றாவது பாகம் என ஒரு சிலப் படங்களை இயக்கி, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவர். அவரது இந்த முயற்சி, கண்டிப்பாக ஹாலிவுட்டில் ஒரு மைல்கல்.
வெறும் கிராஃபிக்ஸ் பூச்சை மட்டுமே நம்பாமல், ஒரு சாதாரணள், அசாதாரணமான தருணங்களை எப்படியெல்லாம் எதிர் கொள்கிறாள் என, தனி மனித உளவியிலை மையமாக வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார். சாண்ட்ரா, தற்கொலை செய்து கொள்ளத் தயாராகும் காட்சி, ரேடியோவின் கிராஸ் டாக்கில் கேட்கும் பேச்சு, அதற்கு சாண்ட்ராவின் பதில் சிறந்த உதாரணங்கள். படத்தின் பல இடங்களில், மிஷ்கினைப் போல, நீளமான, வசனங்கள் குறைந்த / இல்லாத காட்சிகள், மேலும் அழுத்தத்தையும், பரபரப்பையும் கூட்டுகின்றன.
படத்தில் காண்பிக்கும் விண்வெளி சமாச்சாரங்கள் பெரிய ரீல், படத்தில், பல்வேறு இடங்களில், பல வகையான நுண் குறியீடுகள் உள்ளன என, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அசை போடத் தேவையான விஷயங்களை, இப்போதே இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நல்ல ஒலி-ஒளி-3டி அமைப்புள்ள திரையரங்கில் 'கிராவிட்டி'யைப் பாருங்கள். உங்கள் வாழ்வில், 90 நிமிடங்கள் நீங்களும் விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
47 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago