நடப்பு: முதலிடத்தில் யார்?

By ஆர்.சி.ஜெயந்தன்

தேய்ந்துபோன கேள்வியாக இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லத் தவற மாட்டார்கள் நமது கதா நாயகிகள். “நம்பர் 1 விளையாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று அவர்கள் பதில் சொன்னாலும், முதலிடத்தை நோக்கி விரையும் கதாநாயகி மீது போட்டியாளர்களின் கண் இருந்துகொண்டே இருக்கும். கால்ஷீட் மேனேஜர்களில் தொடங்கி, டச் அப் பாய்வரை பலரும் ஏகப்பட்ட உள்குத்து வேலைகளைத் தங்கள் கதாநாயகியின் நம்பர் 1 ஸ்டேட்டஸுக்காகச் செய்வார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த அரசியலில் கோலிவுட்டே வேண்டாம் என்று டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களும் உண்டு. டோலிவுட்டே வேண்டாம் என்று அங்கிருந்து இங்கே வந்தவர்களும் உண்டு.

இந்த நம்பர் ஒன் பாலிட்டிரிக்ஸ் ஒரு பக்கம் இருக்க, நயன்தரா, ஹன்ஸிகா, அமலா பால், லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா என்று சீனியர், ஜூனியர் ஆகிய இரு தரப்பிலும் கலர்ஃபுல்லாகக் காட்சிதரும் கோலிவுட்டில் முதலிடத்தில் இருப்பது யார் என்று பார்ப்போம்.

இது கதிர்வேலனின் காதல் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் உதயநிதியுடன் ‘நண்பேண்டா, ஜெயம் ரவியுடன் பெயரிப்படாத ஒரு படம், சிம்புவுடன் இது நம்ம ஆளு என்று மூன்று நேரடித் தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, தமிழில் உருவாகும் இரண்டு படங்களிலும் நடித்துவருகிறார் நயன்தரா. இருமொழிப் படமென்றால் 1.20 கோடியும், தமிழ் மட்டும் என்றால் 1 கோடியும் சம்பளம் வாங்கும் நயன்தாரா, படங்களை நிதானமாக ஒப்புக்கொண்டு வருகிறார்.

முதிர்ச்சியிலும் மலர்ச்சியுடன் நயன்தாரா கலக்குகிறார் என்றால், 22 வயதே நிரம்பிய ஹன்சிகாவும் 20 வயதே நிரம்பிய ஸ்ரீதிவ்யாவும் நயன்தாராவை முந்திக்கொண்டு போட்டி போட்டுவருகிறார்கள். இளமையும் வசீகரிக்கும் புன்னகையும் குறைசொல்ல முடியாத நடிப்பும், தயக்கம் காட்டாத கிளாமரும் ஹன்ஸிகாவின் செல்வாக்கை அதிகப்படுத்தியிருக்கின்றன. வாலு, மான் கராத்தே, அரணமனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட் என்று ஆறு படங்களைக் கையில் வைத்திருக்கிறார். இவரது ஊதியம் 80 லட்சம்.

வந்த வேகத்தில் சரளமாகத் தமிழ் பேசத் தெரிந்துகொண்டது, பக்கத்து விட்டுப் பெண்ணைப் போன்ற தோழமை நிறைந்த தோற்றம், தமிழச் சாயல், புடவை, தாவணி, நவீன உடைகள் என எல்லா வகை ஆடைகளிலும் கவரும் அழகு ஆகிய அம்சங்களுடன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஸ்ரீதிவ்யாவின் கையில், பென்சில், ஈட்டி, ஜீவா, டாணா, காட்டுமல்லி, நாகபுரம் என ஆறு படங்கள். 65 லட்சம் சம்பளம். 2015 இறுதிவரை இவரது கால்ஷீட் டயரியில் இடம் இல்லை.

வேகமாக முன்னேறிவரும் நாயகிகளில் லட்சுமி மேனனுக்கு ஒரு இடம் உண்டு. ஐந்து படங்களைக் கையில் வைத்திருக்கும் இவர் தனது பாந்தமான அழகு, நடிப்புத் திறன் ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். முதலிடத்துக்கான போட்டியில் இவர் விரைவில் இடம்பிடிப்பார் என்று ஆரூடம் சொல்கிறது கோலிவுட் பட்சி. இப்போது வாங்கும் 40-50 லட்சம் சம்பளம் விரைவில் ஏறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பரபப்பான நாயகிகளில் ஒருவர் அல்ல என்றாலும் ஆண்ட்ரியாவின் கையில் இரண்டு படங்கள். கடந்த ஆண்டுகளில் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த அமலா பால் தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களின் மீது கவனம் செலுத்துகிறார். இவரும் தமிழில் இரண்டு படங்களைக் கையில் வைத்திருக்கிறார். ஆண்ட்ரியா 40, அமலா பால் 75 லகரம் வாங்குவதாகத் தெரிகிறது.

பல ஹிட் படங்களில் நடித்த காஜல் அகர்வால் கையில் பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது.

தமிழ் சினிமா இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லித் தெலுங்கில் வலுவாகக் காலூன்றிய சமந்தா, ஸ்ருதி ஹாஸன் இருவரும் மீண்டும் கோலிவுட்டின் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். சமந்தா, சூர்யா, விஜய் படங்களில் நடித்துக்கொண்டிருக்க, ஸ்ருதி விஷால் ஜோடியாகவும், சித்தார்த் ஜோடியாகவும் இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவருகிறார்.

பல ஆண்டுகள் முன்னணி நாயகியாக இருந்துவந்த த்ரிஷாவின் கையில் இப்போது ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் உள்ளது. என்றாலும் நட்சத்திர மதிப்பு வாய்ந்த நாயகிகளில் ஒருவராகவே அவர் இன்றும் இருக்கிறார்.

முதலிடத்திற்கான போட்டி என்பது கையில் உள்ள படங்களைப் பொறுத்ததா அல்லது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பொறுத்ததா என்பது பதிலளிக்க முடியாத கேள்வி. பல படங்களில் ஒன்றிரண்டு பெரும் வெற்றி அடைந்தால் சம்பளமும் முக்கியத்துவமும் கணிசமாக உயரும். அதே சமயம், படங்கள் அடுத்தடுத்து சறுக்கினால் வாங்கும் சம்பளமும் அடிவாங்கும். எனவே முதலிடம் என்பது எந்த அளவுகோலின் அடிப்படையிலும் யாருக்கும் நிரந்தரமல்ல என்பதே யதார்த்தம். என்றாலும் நட்சத்திர மதிப்பு, சம்பளம், படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது ஸ்ரீதிவ்யா, நயன்தாரா, ஹன்ஸிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் முதலிடம் யாருக்கு என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்