அம்பாசமுத்திரம் அருகே உள்ள அழகிய கிராமம் சிங்கம்பட்டி. இங்குள்ள ஜமீன் குடும்ப வாரிசு சிவகார்த்தி கேயன் (சீமராஜா). ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும், ஊரில் பழைய சமஸ்தான குடும்பத்துக்கு இருக்கும் மரியாதையால் ராஜாவாக வலம் வருகிறார்.
இந்த ஜமீன் குடும்பத்துக்கு எதிராக செயல்படு பவர்கள் பக்கத்து கிராமமான புளியம்பட்டியைச் சேர்ந்த லால் - சிம்ரன் தம்பதிகள். விவசாயி களுக்கு ஜமீன் குடும்பம் பிரித்து வழங்கிய நிலங்களை, ஆசை வார்த்தை காட்டி வட இந்திய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்க முயல்கிறார் லால். இதை தடுக்க முடியாத விரக்தியில் உயிரிழக் கிறார் சிவகார்த்திகேயனின் தந்தை நெப்போலியன் (பெரிய ராஜா).
இதற்கு நடுவே, பி.டி. டீச்சரான சமந்தா மீது சிவகார்த்திகேயனுக்கு காதல். அது வில்லனின் மகள் என்று பின்னர் தெரியவருகிறது. வில்லனை வென்றாரா? மனம் விரும்பிய ராணியை சீமராஜா கைப் பிடித்தாரா என்பது மீதிக் கதை.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங் களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியின் 3-வது படம் இது. படத்தை வெறுமனே நகைச்சுவையை மட்டுமே வைத்து நகர்த் தாமல், நசிந்துவரும் விவசாயம், கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் பறிபோவது, தமிழரின் பாரம்பரிய சிறப்புகள் என சில கனமான விஷயங்களையும் சேர்த்து, பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயன்றுள்ளனர்.
‘பொழுதுபோக்கு நாயகன்’ என்ற முத்திரையைத் தாண்டி, ‘மாஸ் ஹீரோ’ என்ற பிம்பத்துடன் சிவகார்த்திகேயன் வலம் வரு கிறார். பெரும் பலசாலிகளை எளிதாக அடித்து வீசுகிறார். பஞ்ச் பேசு கிறார். இதனால், சில இடங்களில் சுவை கூடவே செய்கிறது. நகைச்சுவை, காதல், நடனத்திலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார். அவரும், சூரியும் சேர்ந்து செய்யும் ஒன்லைன் காமெடிகள் படத்தை கலகலப்பாக நகர்த்துகின்றன.
நாயகியை துரத்தி துரத்தி, தன் பக்கம் இழுப்பது; நாயகனுக்கு கைத்தடியாய் காமெடியன் ஒருவன் வந்து வழிநடத்துவது; காதலித்த பெண்ணே எதிரியின் மகளாக இருப்பது என ஏற்கெனவே பல முறை பார்த்து புளித்துப்போன கதை. நாம் இப்படி சொல்லக்கூடும் என்று உணர்ந்தே, ‘அரைச்ச மாவே அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை’ன்னு சிவாவுக்கான ‘பில்டப்’ பாடலிலேயே ஒரு வரியை வைத்து சமாளிக்கிறார்கள்.
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 14-ம் நூற்றாண்டு அரசனாக நடிக்க சிவா கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. இக்காட்சிகளில் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார் கீர்த்தி சுரேஷ்.
வழக்கமான நாயகியாக வரு கிறார் சமந்தா. சொந்தக் குரலில் பேசியதற்காகவும், நன்கு கற்றுக் கொண்டு அனாயாசமாக சிலம் பம் சுழற்றுவதற்காகவும் பாராட்ட லாம்.
சூரியின் நகைச்சுவை சில இடங் களில் சிரிக்க வைக்கிறது. இடை வேளைக் காட்சியில் சிக்ஸ் பேக் காட்டி அதிசயிக்கவைக்கிறார்.
வில்லனாக வரும் லால், ‘தாம் தூம்’ என்று கத்திக்கொண்டே இருக்கிறார்.
சிம்ரனை வீணடித்துள்ளனர். பின்னணி பேசியவரின் குரலும் அவருக்கு சுத்தமாகப் பொருந்த வில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் நெப் போலியன், கெத்தான ஜமீனாக அடக்கி வாசிக்கிறார். ஆனால், தந்தை - மகன் பிணைப்பு சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை.
இடைவேளைக்குப் பிறகு வரும் வரலாற்றுக் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டிருப்பது போல தோன்றினாலும், நன்கு மெனக்கிட் டுள்ளனர். அந்த காட்சிகளுக்காக சிவா கொஞ்சம் புஜபலத்தைக் கூட்டியிருக்கலாம். போர்க் காட்சி களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் சிறப்பு.
கலை இயக்குநர் முத்துராஜின் கைவண்ணம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் கேமரா வண்ணம்.. இரண்டும் இரண்டறக் கலந்து அம்பாசமுத்திரம் வட்டார கலர்ஃபுல் கிராமங்களை கண் முன்னே நிறுத்துகின்றன. பின்னணி இசை தொடங்கி பாடல்கள் வரை எங்கேயோ கேட்ட குரலாகவே ஒலித்தாலும், டி.இமானின் இசை அழகாய் பொருந்துகிறது.
21-ம் நூற்றாண்டில் அரசனாக நாயகன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது, அரச குடும்பம் சார்ந்த பெருமிதங்கள், ஜமீன் வம்சத்தி னரை மக்கள் ‘ராஜா, ராணி’ என்று பணிவோடு அழைப்பது என ஒரேயடியாக நிலப்பிரபுத் துவம் உயர்த்திப் பிடிக்கப்படு கிறது. 3 மனைவிகள் இருக்கும் நிலையில், சூரி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக காட்டுவது முகம் சுளிக்கவைக்கும் அபத்தம் மட்டு மல்லாது, தடை விதிக்கப் பட்டிருக்க வேண்டியது. கிளை மாக்ஸில் விவசாயிகளுக்கு ஆதர வாக சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் எடுபடவில்லை. ஜில் ஜங் ஜக் ரக காமெடிகளை, குழந்தை களுக்காக தவிர்த்திருக்கலாம்.
ஊர்த் தகராறு, காதல், விவ சாயிகள் பிரச்சினை, பாகுபலி போல ஒரு பின்கதை என எதை எதையோ தொட்டுச் சென்றாலும், எதையும் சீரியஸாய் சொல்லி விடக் கூடாது என்று சீரியஸாக பயணித்ததில் வெற்றி பெற் றிருக்கிறது படம். 'சீமராஜா' - சிவகார்த்திகேயனை விரும்பும் 'லைட் வெயிட்' ரசிகர்களுக்கு!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago