சென்னை சுயாதீன திரைப்பட இயக்கமும் இ-ஆர்ட் ஸ்டுடியோஸ் நடிப்புப் பயிற்சியகமும் இணைந்து ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட படக் குழுவினருக்குப் பாராட்டுவிழா நடத்தினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அவர்களைப் பாராட்டி பேசும்முன் மேடையைவிட்டுக் கீழே இறங்கியவர்.
“அனைவரும் எழுந்து நின்று இந்த அபூர்வக் கலைஞர்களை ஒரு நிமிடம் தொடர்ச்சியாகக் கைதட்டிப் பாராட்டுவோம்” என்று அனைவரையும் அரங்கம் அதிரக் கைதட்ட வைத்தார். அதன்பின் மேடையேறிய அவர், படத்தின் இயக்குநர் லெனின் பாரதியில் தொடங்கி, அங்கே அமர்ந்திருந்த படக் குழுவினரை வாஞ்சையுடன் கட்டி அணைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டினார்.
சிரிப்புப் பேய்!
மிரட்டும் கோலிவுட் பேய்ப் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பல நகைச்சுவைப் பேய்ப் படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனால், தற்போது டீகே மீண்டும் தனது பிராண்ட் நகைச்சுவைப் பேயை அழைத்து வந்திருக்கிறார்.
‘காட்டேரி’ என்ற அதிரடித் தலைப்புடன் அவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் நாயகன் வைபவ். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, அபி அண்ட் அபி இணைந்து தயாரிக்க, வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என்று மூன்று கதாநாயகிகள். இவர்களோடு ‘யாமிருக்க பயமே’ படத்தில் இடம்பெற்ற கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட மொத்த கலகலக் கூட்டணி அப்படியே இந்த முறையும் இணைந்திருக்கிறது.
மூன்றாம் முறை!
‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் புகழ்பெற்றது நகுல் - சுனைனா ஜோடி. அந்தப் படத்தின் வெற்றியால் ‘மாசிலாமணி’ என்ற படத்திலும் இணைந்தனர். தற்போது சச்சின் தேவ் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் இவர்கள் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்கள்.
நாயகன் அவதாரம்!
‘நானும் ரவுடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடித்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக நம்பகமான தகவல். ஏற்கெனவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த விக்னேஷ் சிவன், பாடலாசிரியராகவும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார்.
கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஏற்ற திரைக்கதையைத் தன் நண்பர்கள் குழுவின் உதவியுடன் எழுதி முடித்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பணியாற்றிய நட்பின் அடிப்படையில் இந்தப் படத்துக்கு நயன்தாரா நிதியுதவி செய்வார் எனத் தெரிகிறது.
அரசியல் ரவுடி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறும் கதாபாத்திரத்தை சிம்புவுக்காக எழுதியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago