கோடம்பாக்கம் சந்திப்பு: தமிழில் ஒரு ‘கில்பில்’

By செய்திப்பிரிவு

குவெண்டின் டாரெண்டினோ இயக்கத்தில் கடந்த 2003-ல் வெளியாகி அமெரிக்காவில் மட்டுமே 150 மில்லியன் டாலர்களை குவித்த படம் ‘கில் பில்’. பழிக்குப் பழிவாங்கும் முதன்மைப் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் தாக்கத்தில் உலகம் முழுவதும் இன்னும் படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

தமிழில் ஒரு ‘கில் பில்’ என்று சொல்லத்தக்க அளவில் உருவாகியிருக்கிறது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹெராயின் போதைபொருள் கடத்தல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் தனது கணவனின் கொலைக்காக பழிவாங்கப் புறப்படும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய் பிரியங்கா ரூத்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பெண் கேங்ஸ்டர் உருவாகும் கதையை சில உண்மை நிகழ்வுகளின் தாக்கத்துடன் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் சி.வி.குமார்

மறக்க முடியாத நண்பன்!

‘சர்வம் தாளமயம்’, ‘குப்பத்து ராஜா’ என ஜி.வி.பிரகாஷுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த வரிசையில் இன்று வெளியாகும் ‘வாட்ச்மேன்’ படத்தில் புருனோ என்ற நாய் அவருடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக நடித்துள்ளது. நாயுடன் நடித்த அனுபவம் பற்றி ஜி.வி.பிரகாஷிடம் கேட்டபோது.

“நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனேயே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறது. ஆனால், அவனோ அந்த நாயைப் பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னைக் காப்பாற்ற நாய் செய்யும் செயல்களைக் குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள்.

அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகளைப் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கிக் கொண்டேன். சில சமயம் முறைக்கும்போது பயமாக இருக்கும். ஆனாலும் எனக்கு அது மறக்கமுடியாத நண்பனாக ஆகிவிட்டது” என்கிறார்.

அண்ணனின் சினிமா!

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ராஜுமுருகன். அவர் திரைத்துறையில் சாதிக்க ஊக்கியாக செயல்பட்டவர் அவரது அண்ணன், சரவண ராஜேந்திரன்.
ராஜுமுருகனின் திரைக்கதைகளில் பணியாற்றுவதில் தொடங்கி, தம்பியின் வெற்றியில் பங்காற்றி வந்த சரவண ராஜேந்திரன், பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர். அவரது இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது ‘மெஹந்தி சர்க்கஸ்’.

நாடோடியாக தேசம் சுற்றிவரும் ஒரு சர்க்கஸ் குழுவில் இருக்கும் ஒரு வட இந்தியப் பெண்ணுக்கும் ஒரு தமிழ் இளைஞனுக்குமான காதலை உணர்வுபூர்வமாக திரையில் விரிக்கவிருக்கிறதாம் இந்தப் படம்.

தமிழில் உயிர்பெறும் உலக சினிமா

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி கவனம் பெற்றவர் சாமி. கடைசியாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இவர் இயக்கிய ‘கங்காரு’ சர்ச்சைக்கு வெளியே நின்றும் ரசிகர்களை கவரமுடியவில்லை. இந்நிலையில் ‘அக்கா குருவி’ என்ற தலைப்பில் தனது ஐந்தாவது படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கிக்கொண்டிருக்கிறார் சாமி.

இது, 1997-ல் வெளியாகி உலகப் புகழ்பெற்ற ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of heaven) என்ற ஈரானியப் படத்தின் அதிகாரபூர்வமான மறுஆக்கமாம். ஒரு ஜோடிக் காலணிகள் வழியே அண்ணன் – தங்கையின் பாசத்தை உணர்வுபூர்மாகக் கூறிய ’சில்ஹென் ஆஃப் ஹேவன்’ உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பட்டியலில் நிரந்தர இடம்பிடித்த படம்.

மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை ஆகிய இரு பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு உப்பல் வி.நாயனார் ஒளிப்பதிவு செய்கிறார். மாஹின் என்ற 11 வயது சிறுவன் அண்ணனாகவும், டாவியா என்ற 7 வயது சிறுமி தங்கையாகவும் நடித்து வருகிறார்கள். கொடைக்கானலில் உள்ள பூம்பாறை என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்து வருகிறதாம்.

தொடரும் ரத்தம்!

‘தரமணி’க்குப் பிறகு ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிபெற்ற படம் ‘அவள்’. அது இந்தியிலும் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது ஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘மாளிகை’ என்ற படத்தை தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள்.

‘பாம்பே பிளட் குரூப்’ என்ற அரிய ரத்தவகை கொண்ட பெண்ணாக, காவல் அதிகாரி கதாபாத்திரத்திலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் அதே ரத்தவகையுடன் வாழ்ந்த இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. தில் சத்யா என்ற கன்னட இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்