டிஜிட்டல் மேடை 15: காதலர் தினத்துக்கு ‘கவுண்ட் டவுன்’

By எஸ்.எஸ்.லெனின்

தினமொரு காதல் ரசம் சொட்டும் திரைப்படத்துடன் காதலர் தினத்தை வரவேற்கத் தயாரா? நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் வரிசையில் கடந்த ஆண்டில் வெளியான காதல் திரைப்படங்களில் இருந்து அதற்கான ’கவுண்ட் டவு’னைத் தொடங்கலாம்.

இன்னமும் மிச்சமிருக்கிறதா காதல்?

மூன்றாவது மணநாளை வெற்றிகரமான கொண்டாடும் ஓர் இளம் மனைவிக்கு ‘தான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறோமா, தன் கணவன் இன்னமும் அதே தொடக்க காலக் காதலுடன் இருக்கிறானா?’ என்ற சந்தேகம் வந்து தொலைக்கிறது. இதை ஆராய முற்படும் ஜோடி, தங்கள் மண உறவையே மறுபரிசீலனை செய்யுமளவுக்கு விபரீதமாகப் போகிறார்கள். நிமிடத்துக்கு ஒரு சண்டையும் சமாதானமும் அவ்வப்போது வந்துபோகும் பழைய நினைவுகளுமாக இளஞ்ஜோடியின் வழியே மண வாழ்வின் காதலைக் கொண்டாடுவதுதான் ஹேப்பி ஆனிவர்ஸரி (Happy Anniversary) திரைப்படம்.

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2RHY3af

சாவை வெல்லும் காதல்

பள்ளிப் பருவம் தொட்டு தனக்குப் பிரியமானவனுடன் திருமணத்துக்குத் தயாராகிறாள் அவள். ஆனால், அழையா விருந்தாளியாக எமன் அவள் கதவைத் தட்டுகிறான். தீவிர நோயின் பிடியால் தனது நாட்கள் எண்ணப்படுவதை உணரும் அவள், அந்த வேதனையைவிடத் தனது மறைவுக்குப் பின்னர் அன்புக் காதலன் என்ன ஆவானோ என்று கலங்குகிறாள். அதற்காகத் தன்னுடைய இடத்தை இன்னொரு பெண்ணால் நிரப்புவதை இறுதி ஆசையாகக் கொள்கிறாள். மறைவுக்குப் பின்னரும் காதலின் வழியே காதலனுடன் வாழ்வைத் தொடரும் ’இர்ரிபிளேசபிள் யு’ (Irreplaceable You) ஒரு உருக்கமான காதல் கணங்கள் நிரம்பிய திரைப்படம்

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2BOwdRV

பதின் பருவ ஆட்டோகிராஃப்

பதின்ம வயதுப் பெண்ணின் ஆட்டோகிராஃப் அனுபவமாக வெளியான இந்தத் திரைப்படத்தை (To All The Boys I've Loved Before) டிஜிட்டல் மேடையில் https://bit.ly/2RHPwUE ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

எவரெஸ்ட்டில் சாதித்த காதல்

‘உனக்காக எதுவும் செய்வேன்’ என்று வழக்கம்போல அவளிடம் அவன் தனது பிரியத்தைக் கொட்டுகிறான். ’உனக்காக உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் ஏறுவேன்’ என்று இம்முறை அள்ளி விடுகிறான். ’சரி. எவரெஸ்ட்டில் ஏறிவிட்டு வா, உன் காதலை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அவளும் பதிலடி தருகிறாள்.

அவன் யோசிக்கவே இல்லை. காதலுக்காக நிஜமாகவே எவரெஸ்ட் பயணத்தைத் தொடங்குகிறான். எந்தவொரு பயிற்சியோ முன் அனுபவமோ இன்றி காதலே தனிப்பெருந்துணையாய் வழிநடத்த பல்வேறு தடைகளுக்கு அப்பால் தனது உலக சாதனையை முடிக்கிறான். பிரான்ஸ் பின்னணியிலான நிஜ சம்பவம், ‘தி கிளைம்ப்’ (The Climb) என்ற பிரெஞ்சுத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2J2nakl

காதல் ‘செட் அப்’

ஒரே வளாகத்தில் வெவ்வேறு முதலாளிகளிடம் வேலை பார்க்கும் ஓர் இளைஞனுக்கும் யுவதிக்கும் ஒரே மாதிரியான பிரச்சினை. எப்போதும் வேலை வேலை என்றே வறுத்தெடுக்கும் தத்தமது முதலாளிகளிடம் விழிபிதுங்கும் இருவரும் சேர்ந்தே தீர்வைத் திட்டமிடுகிறார்கள். அதன்படி தங்கள் முதலாளிகளைச் சந்திக்க செய்து காதலில் விழ வைக்க முயல்கிறார்கள். அவர்களின் முயற்சி என்னவாயிற்று என்பதுடன் தங்கள் மத்தியில் முளைக்கும் ஈர்ப்பு எங்கே போய் முடிகிறது என்பதையும் நகைச்சுவையுடன் சொல்லுகிறது ‘செட் இட் அப்’ (Set it Up) திரைப்படம்.

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2L7x0Cn

நேசம் முதிராது

உடலின் தேவைகள் கரைந்துபோன முதியவர்களின் நேசத்தைச் சமூகம் பொருட்படுத்துவதே இல்லை. துணையை இழந்து தன்னந்தனியாய்ப் பக்கத்து வீடுகளில் வசிக்கும் இரு முதியவர்கள், பகலைவிடக் கொடுமையாக நீளும் இரவுகளைப் போக்க வித்தியாசமானதொரு முடிவில் இறங்குகிறார்கள். அதைச் சமூகமும் வாரிசுகளும் ஏளனம் செய்ய அவற்றுக்கு மத்தியில் அந்த முதிய ஜோடியும் அவர்களின் தனிமையும் என்னவாயின என்பதே ’அவர் சோல்ஸ் அட் நைட்’ (Our Souls At Night) திரைப்படம்.

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2x2bGKg

காதல் சாதிக்கும்

ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஈராக் இஸ்லாமியக் குடும்பங்களை மையமாகக் கொண்ட காதல் கதை ‘அலி’ஸ் வெட்டிங்’ (Ali’s Wedding). சூழல் நெருக்கடியில் நாயகன் உதிர்க்கும் பொய் அவனது உயிருக்கு உயிரான காதலைக் காவு வாங்குகிறது. மத போதகரான தந்தையின் கௌரவமும் பறி போகிறது. ஆனபோதும் அவன் கடவுளையும் காதலையும் நம்பி, காதலிக்காகக் காத்திருந்து ஜெயிக்கிறான். உண்மைச் சம்பவம் திரைப்படமாகி இருக்கிறது. இறை நம்பிக்கை, காதலின் மகத்துவம், குடும்ப உறவுகள் என வாழ்வின் மதிப்பீடுகளை உரசும் வசனங்கள் படத்தின் இன்னொரு சுவாரசியம்.

ட்ரைலரைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள் இணையச் சுட்டி: https://bit.ly/2xbkkEf

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்