அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் வெளியான படம் 'அவள் பெயர் தமிழரசி'. அந்தப் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் மீரா கதிரவன். தொடர்ந்து அவர் இயக்கிய ‘விழித்திரு’ சிறந்த விழிப்புணர்வுத் திரைப்படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு இயக்குநராக சமூக விழிப்புணர்வை முனைப்புடன் திரை ஊடகத்தில் கையாண்டதைப் பாராட்டும் விதமாக திராவிடர் கழகம் அவருக்குப் பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
ஒரே மேடையில் ரஜினி - கமல்
முழுநேர அரசியலில் இறங்கியபிறகு, அது திரைப்பட விழா என்றாலும் ரஜினி, கமல் இருவரும் ஒரே மேடையில் தோன்றுவதைத் தவிர்த்து வந்தனர். சிவாஜி மணி மண்டபத் திறப்புவிழாவில் கலந்து கொண்ட இருவரும் மீண்டும் தற்போது இளையராஜா 75 நிகழ்வில் பங்கேற்பதாக உறுதி அளித்திருக்கிறார்களாம். அந்த நிகழ்ச்சியை நடத்தும் தயாரிப்பாளர் சங்கம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
செல்லப்பிள்ளை
‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘தேவராட்டம்’ படங்களைத் தொடர்ந்து ‘செல்லப்பிள்ளை’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக். அருண் சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவையுடன் கூடிய முக்கிய குணச்சித்திரக் கதாபாத்திரத்திரத்தில் முதல் முறையாக நடிக்கிறாராம் சூரி.
கார்த்திக் ரசிகர்!
எண்பதுகளின் கால கட்டத்தைத் தற்கால திரைப்படங்களில் உருவாக்குவது பெரும் சவால். மாணிக் சத்யா இயக்கியிருக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ மிகச் சிரத்தையுடன் 80-களின் காலகட்டத்தில் ஒரு காதல், நட்பு, துரோகக்கதையைக் காட்சிப்படுத்தியிருக்கிறதாம். இயக்குநர் - நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜனும் சாந்தினியும் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா எனப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கின் ரசிகராக வருகிறாராம் ப்ரித்விராஜன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago