திரை நூலகம்: வியப்பு தரும் ஆவணப்படங்கள்

By ரிஷி

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில் காட்சிவடிவ ஆவணங்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆகவே, ஆவணப்படங்கள் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டால் வரலாற்றில் நிலைபெறும் வகையிலான பல ஆவணப்படங்களை நம்மால் படைக்க இயலும். இந்த நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் ஆவணப்பட இயக்கம் எனும் இந்நூலைச் சுவைபட எழுதியுள்ளார் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.

ஆவணப்படங்களின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வரலாற்றையும் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார். 25 ஆண்டுகால ஆவணப்படமாக்கத்தில் பெற்ற அனுபவத்தின் சாரத்தையும் ஒரே நூலில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி இருவரும் மேற்கொண்டிருந்த இலங்கைப் பயணத்தை  அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்த மெட்ரோ செய்திப்படம், ஆவணப்பட வர்ணனையாளருக்குத் தேசிய அளவில் வழங்கப்படும் விருது உள்ளிட்ட பல தகவல்கள் நூலின் பக்கங்களில் பரந்து கிடக்கின்றன.

ஆவணப்படம் தோன்றிய காலத்துப் படங்கள் முதல் அண்மையில் வெளியான ‘கக்கூஸ்வரை’ பல அரிய படங்கள் பற்றிய அறியப்பட வேண்டிய செய்திகள் வியப்பு தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.

ஆவணப்படத்தை உருவாக்குவதற்குத் தேவையான அத்தனை நுணுக்கங்களையும் எளிய தமிழில் தெளிவாகத் தந்துள்ளார் அம்ஷன் குமார். ஆவணப்படங்களில் இவ்வளவு செய்திகள் மறைந்துள்ளனவா என்னும் வியப்பை உருவாக்கும் நூலாக அமைந்திருக்கிறது இந்நூல். ஆவணப்படம் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பொக்கிஷமாக விளங்கும் இந்நூல் அதைப் பற்றி அறியாதோருக்குச் சிறந்த நுழைவாயிலாகவும் உள்ளது. நூலைப் படித்து முடித்த பின்னர் ஓர் ஆவணப்படத்தையாவது உருவாக்கிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டும் நூலான இது இந்தப் புத்தாண்டின் சிறந்த வரவு.

ஆவணப்பட இயக்கம்

அம்ஷன் குமார்

சொல் ஏர் பதிப்பகம்

30/ஏ 17-ம் தெtரு, வெங்கடேஸ்வரா நகர்,

கொட்டிவாக்கம், சென்னை – 41.

விலை: ரூ.200

தொலைபேசி: 044 24512508

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்