உலக அளவில் பிரபலமான சினிமா சிரிப்பு இரட்டையர் லாரல் - ஹார்டி. இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகும் முதல் திரைப்படம் ‘ஸ்டேன் & ஆலி’ (Stan & Ollie).
ஒல்லி உருவமுடைய ஆங்கிலேயரான ஸ்டேன் லார்லியும் பருமனான தேகமுடைய அமெரிக்கரான ஆலிவர் ஹார்டியும் ஜோடி சேர்ந்து மவுனப்படக் காலம்தொட்டு திரை வரலாறு படைத்தவர்கள். தற்செயலாக நேரிடும் தவறுகள், புரிதலில் ஏற்படும் அபத்தங்கள் என அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வைத்தே இருவரும் கூத்தடிக்கும் ‘ஸ்லாப்ஸ்டிக்’ எனப்படும் சேட்டைத்தனமான நகைச்சுவைகள் இன்றைய யூடியூப் தலைமுறையிலும் வெகுவாக ரசிக்கப்படுபவை. சார்லி சாப்ளின் நகைச்சுவையில் இருக்கும் அவலம், தத்துவ விசாரம் போன்றவை இரட்டையர் நகைச்சுவையில் கிடையாது. ஆனால், குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிப்பவை. கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட் நகைச்சுவையை ஆண்ட இந்த இரட்டையரின் பாதிப்பில் நம்மூர் கவுண்டமணி - செந்தில் போல உலகமெங்கும் திரைப்பட நகைச்சுவை தப்பிப் பிழைத்ததும் நடந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், மவுனத் திரைப்படங்கள், ஹாலிவுட்டின் முழுநீளத் திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு அப்பால், ஐரோப்பிய நாடுகளில் இவர்கள் மேற்கொண்ட மேடைநாடகச் சுற்றுப் பயணங்களும் பிரபலமானவை. வெவ்வேறு மூலைகளில் பிறந்து திரையுலகப் பின்னணியில் இருவரும் வளர்ந்ததும் விசித்திர ஜோடியாக ஒன்று சேர்ந்தது ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதும் அவர்களது பெயரிலேயே திரைப்படமாகி உள்ளது. குறிப்பாக, தேச எல்லைகள் கடந்து ரசிகர்களைச் சிரிக்கவைத்த ஹார்டியின் உடல் பருமனே அவருக்கு எமனாகி இதயத்தைப் பாதித்தது. ஹார்டி இறந்த பிறகு லாரல் திரைப்பட வாய்ப்புகளைத் தவிர்த்தது, ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்காக இருவரும் திரைக்குப் பின்னே மேற்கொண்ட சிரத்தை, இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் தடுமாற்றங்கள், பரஸ்பரம் தோள்கொடுத்த தருணங்கள் எனப் பலவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.
ஸ்டேன் லாரல் கதாபாத்திரத்தில் ஸ்டீவ் கூகன், ஆலிவர் ஹார்டியாக ஜான் சி.ரய்லி (John C.Reilly) நடிக்க ஜோன் எஸ்.பேர்ட் இயக்கி உள்ளார். டிசம்பர் 28 அன்று ‘ஸ்டேன் & ஆலி’ திரைப்படம் வெளியாகிறது.ஹாலிவுட் ஜன்னல்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago