அறிமுகப் படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்கள் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதிய வைத்து தங்கள் பயணத்தை வெற்றிப்பாதையில் செலுத்துபவர்களும் உண்டு. ‘சாட்டை’ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா இதில் இரண்டாவது ரகம். இன்று வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அவருடன் ஒரு சின்ன உரையாடல்.
‘சாட்டை’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்தீர்கள், ‘குற்றம் 23’ படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்தீர்கள். கதாபாத்திர வளர்ச்சி என்பது இதுதானா?
எனது அம்மா ஸ்கூல் டீச்சர். அந்த ராசியோ என்னவோ, பள்ளி மாணவியாகவும் டீச்சராகவும் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்துவிட்டது. இதுவரை சவாலான கதாபாத்திரம் எனக்கு வரவில்லை. வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
த்ரில்லர் படங்களின் கதாநாயகிபோல் ஆகிவிட்டீர்களே?
‘குற்றம் 23’, ‘புரியாத புதிர்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என அடுத்தடுத்து மூன்று த்ரில்லர் படங்களில் நடித்துவிட்டதால் இப்படிக் கேட்கிறீர்கள். இது நானாகத் திட்டமிட்டது கிடையாது. ரசிகர்களுக்கு த்ரில்லர் படங்கள் சட்டென்று பிடித்துவிடுகின்றன. ஆனால், இந்த மூன்று படங்களிலுமே நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
பர்சனலா, எனக்கு க்ரைம் த்ரில்லர் பிடிக்கும். ஹாரர், த்ரில்லர் படங்களைத்தான் அதிகம் பார்ப்பேன். அதனால், நான் தேர்ந்தெடுக்கும் படங்களிலும் அதன் பாதிப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் நடித்து வெளிவர இருக்கும் ‘அசுர குரு’, ‘ஐங்கரன்’ மாதிரியான படங்களும் க்ரைம் த்ரில்லர்தான்.
இந்த ட்ரெண்டிலிருந்து ‘அண்ணனுக்கு ஜே’ கதாபாத்திரம் வேறுபட்டதா?
ரொம்ப வித்தியாசம். சுந்தரி என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ஹீரோவுடன் சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கிற கேரக்டர். ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போட்டுப் பேசுகிற உண்மையான லோக்கல் பெண்ணாக இந்தப் படத்துக்காக மாறிவிட்டேன். இந்த கேரக்டருக்காக என்னை எந்த அளவுக்கு அழுக்காகக் காண்பிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அழுக்காகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
மேக்கப் எதுவும் இல்லாமல், ப்ளஸ் 2 ஃ பெயிலான பெண்ணாக நடித்திருக்கிறேன். சாவு, காதுகுத்து மாதிரி கிராமத்தில் நடக்கும் திடீர் நிகழ்ச்சிகளில் உள்ளூர் பேண்ட் குழுவின் கச்சேரி நடக்கும். அந்தமாதிரி ஒரு கிராமத்து இசைக்குழுவில் ட்ரம்பெட் வாசிக்கும் பெண்ணாக வருகிறேன். சுந்தரி கேரக்டர் சுள்ளென்று இருக்கும்.
வீட்டில் எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பீர்கள்?
சுந்தரியைப்போல ரொம்ப அழுக்காகத்தான் இருப்பேன். கிட்டத்திட்ட ஒரு பேய் மாதிரிதான். எவ்வளவு நல்ல ட்ரெஸ் இருந்தாலும் கிழிந்த ட்ரெஸை எடுத்துப்போட்டுக்கொண்டுதான் வீட்டில் சுற்றிக்கொண்டிருப்பேன்.
முன்னணிக் கதாநாயகர்களுடன் நடிக்க விருப்பம் இல்லையா?
யார் இல்லை என்றது? அதை நான் முடிவு பண்ண முடியாது. ரஜினி சார், அஜித் சார் கூட நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. விஜய் சேதுபதியையும் ரொம்பவே பிடிக்கும். அவருடனும் நடிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
படங்கள்: கிரண்ஷா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago