குல்லா போடுறதையே விட்டுட்டேன்! - யோகிபாபு பேட்டி

By கா.இசக்கி முத்து

தமிழ் சினிமா நகைச்சுவையின் புதியமுகமாக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் யோகி பாபு. ‘சர்கார்’, ‘விசுவாசம்’, ‘ஜுங்கா’, ‘கடைசி விவசாயி’, ‘வெள்ளை யானை’, ‘கோலமாவு கோகிலா’ சிவகார்த்திகேயன் - இயக்குநர் ரவிகுமார் படம் என இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. 100 படங்களை ஒரே மூச்சில் கடந்து வெள்ளைச் சிரிப்புடன் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்துவரும் அவரிடம் பேசியதிலிருந்து...

‘கல்யாண வயசு’ பாடலில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறீர்களே?

சந்தோஷமாக இருக்கு. வெளியே போக முடியல. நயன்தாரா மேடத்துடைய ரசிகர்கள் எல்லாம் கோபத்தோட சுத்திக்கிட்டு இருக்காங்க. ‘கோலமாவு கோகிலா’ படத்தோட ஷூட்டிங் முடிஞ்ச கொஞ்ச நாள் கழிச்சு, இயக்குநர் நெல்சன் போன் பண்ணி “தலைவா உன்னையும் மேடத்தையும் வைச்சு பாட்டு ஒண்ணு எடுக்கணும். சிவகார்த்திகேயன்தான் அதை எழுதியிருக்கார்.” என்று சொன்னார். உடனே, என்னோடதான் இந்தப் பாட்டுன்னு நயன் மேடத்துக்குத் தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு “ டைரக்டர் நான் சொல்றேன் நம்ப மாட்டீங்களா? ” ஃபீல் குடுத்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்ல முதல்ல பயந்தேன். “இந்தப் பாட்டு வெளியானவுடனே இதோட மதிப்பு தெரியும்”னு நெல்சன் சொன்னார். அதில வர்ற டான்ஸ் எல்லாம் இயக்குநர் சொன்னதுதான். சின்ன பிள்ளைங்க, பெரியவங்கன்னு அந்தப் பாட்டு எல்லாருக்கும் எக்குத் தப்பா பிடிச்சுப்போச்சு.

குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டீர்களே?

ஜனங்ககிட்ட என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்த இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். மக்களுக்கும் என்னைப் புடிச்சிருக்கு. இனிமேல் அவர்களுக்காகப் புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும். அதுதான் இப்போ என் மைண்ட் ஃபுல்லா ஓடிக்கிட்டே இருக்கு. நடிப்பைப் பொழியிறது சோறு துண்றமாதிரி அதுவா நடக்குது.

விஜய் - அஜித் இருவரோடும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இருவரும் என்ன சொன்னார்கள்?

விஜய் என்னோட டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாத்தையும் ரொம்ப ரசிச்சுப் பார்த்தார். “ சின்ன சின்ன மூவ்மெண்ட்ஸ் போட்டு லைக்ஸ் அள்ளுறீங்க. ரொம்ப நல்லாயிருக்கு” என்று பாராட்டினார். அஜித் பாத்துட்டு சூப்பரா இருக்குன்னு பாராட்டினார்.

உங்களோட ரோல் மாடல் யார்?

யாருமே கிடையாது. கவுண்டமணி, செந்தில் ரெண்ட் பேரையும் ரொம்பப் பிடிக்கும். அந்தந்தக் காட்சிக்குத் தகுந்தமாதிரி தங்களை மாற்றிப் பண்ணியிருப்பாங்க. இப்போ இருக்கிற எல்லா காமெடியன்களையும் எனக்குப் பிடிக்கும்.

நகைச்சுவை வசனம் எழுதுவதற்காகச் சிலர் தனி அணியைக் கூடவே வைத்திருப்பர்களே... நீங்கள் எப்படி?

என்கிட்ட எந்த டீமும் கிடையாது. பெரிய காமெடி நடிகர்கள்கிட்ட இருந்தவங்க நிறையப் பேர் வந்தாங்க. ஏதாவது உதவி தேவைன்னா பண்றேன். டயலாக் எழுதுறதுக்காக வராதீங்கன்னு சொல்லிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன தோணுதோ, அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். என்னோட இயக்குநர்கள் எல்லாருமே ரொம்ப சரியாத்தான் கொண்டு வர்றாங்க. ஒன்றிரண்டு இடத்துல நாம அடிக்கிற டைம்மிங் காமெடியும் அவங்களுக்குப் பிடிக்குது. எல்லா இடத்திலுமே சோலோதான்.

நூறு படங்கள் தாண்டியிருக்கும் நிலையில் மறக்க முடியாத இயக்குநர் யார்?

கண்டிப்பாக சுந்தர்.சிதான். அவர் என்னை முதல் முறை பார்க்கும்போது, இப்படியெல்லாம் இருக்கணும் என்று சொன்னார். அதை இப்போ வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். “கவுண்டமணி, சந்தானம், சூரி இவங்க கூட எல்லாம் வொர்க் பண்ணிட்டேன். உன்னை வைச்சு ஒரு படம் பண்ணனும் யோகிபாபு” என்று சொல்லித்தான் ‘கலகலப்பு 2’ வாய்ப்புக் கொடுத்தார். அவர் கூப்பிட்டு ஒரு சீன் கொடுத்தாலே பண்ணிடுவேன். அவருக்கு வேறு என்ன பண்ணப்போறேன்னு தெரியல. என் வாழ்க்கைக்கு அவ்வளவு பெரிய விஷயம் பண்ணியிருக்கார். அப்புறம் என்னை அறிமுகப்படுத்திய சுப்பிரமணிய சிவா அண்ணன், அமீர் அண்ணன், என்னோட குருநாதர் ராம்பாலா இவங்களையும் மறக்க முடியாதுங்க.

உங்கள் ஹேர் ஸ்டைலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

அதுபாட்டுக்கு வளர்ந்து போயிட்டே இருக்கு. அதுக்கெல்லாம் பெருசா மெனக்கடுறதில்ல. ஏதாவதொரு மட்டமான ஷாம்பூ இல்லன்னா புலி மார்க் சீயக்காய் தூள்தான் போடுறேன். சின்ன வயசுலருந்தே சுருட்ட முடிதான். இதப் பார்க்கும்போது பலருக்கு காமெடியா தெரியுது. சில கம்பெனிகளுக்குக் குல்லாவை மாட்டிகிட்டு ஸ்டைலா போவேன். எங்கய்யா உன்னோட முடிய காணும்னு கேட்பாங்க. அதுக்கப்புறம் இந்த முடியும் எனக்கு ஒரு வகையில சாமிதான் நினைச்சு, குல்லா போட்டுக்கிறதையே விட்டுட்டேன்.

உங்க அடுத்தகட்ட திட்டம் என்ன?

எந்தத் திட்டமும் இல்ல. எப்பவும் சினிமால காமெடியனாதான் இருப்பேன். எந்த ஒரு காலத்துலயும் அதிகப்பிரசங்கியா இருக்க மாட்டேன். நம்மள வெச்சு எப்படி காமெடி பண்ணனும்ன்னு இயக்குநர் அண்ணன்களுக்குத் தெரியும். நாம பொத்திகிட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்