உலகக் கோப்பை கால்பந்து 2018: கால்கள் துரத்தும் கனவுகள்

By டோட்டோ

நே

ற்று தொடங்கியது உலகக் கோப்பை கால்பந்தாட்டம். முதன் முதலில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் நிகழ்ந்த ஆண்டு 1930. ஆனால், இதற்கு 41 வருடங்களுக்கு முன்னரே, இந்தியாவின் அன்றைய தலைநகரமான கல்கத்தாவில், முதல் கால்பந்தாட்ட கிளப் ‘மோகன் பகான்’ 1889 –ல் நடைமுறையில் இருந்திருக்கிறது. இனிமையான குழு என்ற அர்த்தம் தொனிக்கும் இந்தப் பெயர், அந்நகரில் ஒரு மாளிகையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது.

கால்பந்து விளையாட்டைப் பின்புலமாகக் கொண்ட இந்திய திரைப்படங்கள் எண்ணிக்கையில் வங்காளம், மலையாளம், இந்தி என்ற வரிசையில் குறிப்பிடத்தக்க படங்களை எடுத்திருக்கிறோம். தமிழில், ‘முன்பே வா என் அன்பே வா’ மற்றும் ‘அழகினா அழகி அஸ்காவா’ பாடல்களில் வரும் கால்பந்தாட்டங்கள் நீங்கலாக, அதிக பட்சமாக பிரபு சாலமன் இயக்கிய ‘லீ’, பாபு யோகேஸ்வரன் இயக்கிய ‘தாஸ்’ மட்டுமே நினைவில் மெல்ல எட்டிப்பார்க்கின்றன. மாறாக ஒருமுறை பார்த்துவிட்டால் நினைவுகளை விட்டு அகலாத ஒரு இந்திப் படத்தையும், சில வங்காளப் படங்களையும் அலசுவோம்.

வெள்ளைச் செவ்வகத்தில் பச்சை செவ்வகம்.

‘ஹிப் ஹிப் ஹுர்ரே’ – 1984-ல் கவிஞர் குல்சார் எழுத்தில், எட்டு முறை தேசிய விருது வாங்கிய பீகாரைச் சேர்ந்த பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளிவந்த இந்திப் படம். வேலை நியமன உத்தரவுக்காகக் காத்திருக்கும் மும்பையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் சந்தீப் சௌத்ரி (ராஜ் கிரண்) ஒரு தற்காலிக வேலையாக ராஞ்சியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியாளராகச் சேர்கிறார். போக்கிரி மாணவன் ரகு தலைமையில் யாரையும் மதிக்காத, கால்பந்து நன்றாக ஆடும் ஒரு சிறு மாணவர் படை அங்கே உள்ளது.

விளையாட்டை மதிக்காத சக ஆசிரியர்களும் ஒத்துப்போகாத பள்ளி முதல்வரும் உள்ள சூழலில் சற்றே ஆறுதலாக இருக்கிறார் வரலாற்று ஆசிரியர் அனுராதா ராய் (தீப்தி நாவல் எனும் வசீகர நடிகை). பள்ளிகளுக்கிடையேயான முதல் கால்பந்துப் போட்டி, தோல்வியில் முடிகிறது. பின்னர், அவர் எப்படிப் பிரச்சினைகளைச் சமாளித்தார், ரகுவைக் குழுவில் எப்படி ஆட வைத்தார், அடுத்த போட்டியில் ஜெயித்தார் என்பதே கதை. (‘நம்மவர்’ திரைக்கதை நினைவுக்கு வருகிறதா?)

கால்பந்து பின்னணியில் நடக்கும் எளிமையான கதைக்கு குல்ஸார் திரைக்கதையின் வழி உயிர் கொடுத்தார். சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களாலும், இனிய பாடல்களாலும் இந்தப் படம் நினைக்கப்படுகிறது. மற்ற திரைப்படங்களான மாதவன் நடித்த ‘சிக்கந்தர்”, அனில் கபூரின் ‘சாஹேப்’ (இதுவும் வங்காளத்தில் இருந்து இந்திக்கு வந்தது), செயற்கையாகக் கையாளப்பட்ட ஜான் ஆபிரகாமின் ‘தன தனா தன் கோல்’ போன்ற படங்களிலும் கால்பந்து பின்புலமாக இருந்தாலும் அவை தட்டையான படங்களாக அமைந்ததால் நம் நினைவில் தங்கவில்லை.

bg_colrightவெறும் கால்களின் வரலாற்றுப் பெருமை

இந்திய நாட்டில் கால்பந்து பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மேற்கு வங்கத்தில்தான். 125ஆண்டுகள் தொடர்புள்ள விளையாட்டைப் பின்புலமாகக் கொண்ட திரைப்படங்களுக்கும் அங்கே பஞ்சமில்லை. 1911 ஜூலை 29 இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்று தான் முதன்முதலில், மோகன் பகான் இந்திய அணி ஆங்கிலேய அணியை நம் மண்ணில் வெற்றிகொண்டது! அதுவும் காலனிகள் அணியாமல் வெறும் கால்களால் ஆடி! இதன் நூற்றாண்டை குறிக்கும் விதமாக, 2011-ல் அறிமுக இயக்குநர் அருண் ராயின் முதல் படைப்பாக வங்காள மொழியில் வெளியான படம்தான் ‘ஈகரோ’.பதினொன்று என்பது இந்தத் தலைப்பின் பொருள்.

கதை நடப்பது 1911-ல். தேசிய விடுதலை, இன வெறுப்பு, பயிற்சிக்கான வசதியின்மை, ஒடுக்குமுறை, வெறும் கால்கள் ஆகிய பல தடைகளையும் மீறி, பல அடுக்குகளில் நமக்குக் கதை சொல்லப்படுகிறது. படம் ஆரம்பித்து 70 நிமிடங்கள் கழித்தே போட்டி தொடங்குகிறது என்றாலும் அது ஒரு போருக்கான பயிற்சி போல நம்மைத் தயார்படுத்துகிறது. கடைசி 40 நிமிடங்கள் முழுக்க, மைதானத்தில் நடக்கும் போட்டியை மட்டும் கொண்ட காட்சிகள்.

பல்வேறு இனத்தவர் ஒன்றுசேர்வது, ரேடியோ இல்லாத அந்த நாட்களில் கோல் விவரத்தை, அணியின் நிறம் கொண்ட காத்தாடியில் எழுதி பறக்கவிடுவது, அதை வீட்டில் இருந்து பெண்கள் பார்ப்பது, பஞ்சகச்சம் கட்டி பயிற்சி மேற்கொள்வது, பார்வையாளர் கூட்டம் இக்கட்டான நிலையில் ‘வந்தே மாதரம்’ என முழக்கமிடுவது, போட்டியை ஒரு போர் போல எதிர்கொள்வது என ‘லகான்’ படத்துக்கு எந்த அளவிலும் சுவாரசியம் குறையாமல் 110 நிமிடங்கள் கதை சொல்லப்படுகிறது.

திரைக்கு வெளியே 1977-ல் கால்பந்து மன்னன் பீலேவையெல்லாம் எதிர்த்து ஆடிய நம்மால், இந்த எண்பத்தியெட்டு வருடங்களில், தகுதிச்சுற்றில் கூட நுழைய முடியாதது இன்றைய வரலாற்றுச் சோகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்