இதுவரை பார்க்காத ப்ரியா ஆனந்தை ‘இரும்பு குதிரை' படத்தில் பார்க்கப் போறீங்க! கதையே என்னைச் சுற்றிதான் நடக்கும். மருத்துவ மாணவியா நடித்திருக்கிறேன் என்று நிறைவான புன்னகையுடன் தொடங்கினார் ப்ரியா ஆனந்த். தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்களில் நடித்துவரும் அவர் ‘தி இந்து’வுக்காகப் பேசியதிலிருந்து...
‘இரும்பு குதிரை' பைக்கர்ஸ் சம்பந்தப்பட்ட படம். உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா?
நல்லாவே தெரியும். இந்தப் படத்தில் எல்லாருமே சூப்பர் பைக்ஸ் ஓட்டினாங்க. எனக்கு அதெல்லாம் ஓட்டத் தெரியாது. எனக்கு பைக் வேகமாக ஓட்டினாலே பிடிக்காது. சென்னையில் இருந்தால் இரவு படப்பிடிப்பு முடிந்ததும், நண்பர்களோடு பைக்கில் ரவுண்ட்ஸ் போவேன் அவ்வளவுதான். அதுவும் சின்ன பைக்ஸ்ல மட்டும்தான் போவேன்.
இத்தாலியில் இரும்பு குதிரை ஷூட்டிங்ல ரொம்பவே பயந்துவிட்டேன். அதர்வாகூட சூப்பர் பைக்ல போகணும். அங்கே ரொம்ப வேகமாக போகலாம். அவ்வளவு வேகத்துல அதர்வா பின்னாடி உட்கார்ந்து போனதை மறக்கவே முடியாது. இயக்குநர் ரீ-டேக் என்றதும், திரும்பவும் பயம் தொற்றிக்கொள்ளும்.
இப்போ தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் நாயகி நீங்கதான் தெரியுமா?
ரொம்ப சந்தோஷமான விஷயமா நினைக்கிறேன். ஒரு தமிழ்ப் பொண்ணுக்கு, தமிழ்த் திரையுலகில் இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்னவா இருக்க முடியும்? எனக்கு ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமான பாத்திரங்கள் கொடுத்து வளர்த்துவிட்டது இயக்குநர்கள்தான். அவர்களுக்குதான் நான் நன்றி சொல்லணும். ‘எதிர் நீச்சல்', ‘வணக்கம் சென்னை', ‘அரிமா நம்பி' எனத் தொடரும் பயணத்தில் இன்னும் நான் போக நினைக்கும் தூரம் அதிகம். எந்த ஒரு பாத்திரம் கொடுத்தாலும், ப்ரியா ஆனந்தால் முடியும் என்று இயக்குநர்கள் சொல்லணும். அதுதான் என்னோட ஆசை.
பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?
இப்போதான் ஒவ்வொரு படமா பண்ணி வளர்ந்துவரேன். அதுக்குள்ள பெண்ணை மையப்படுத்தும் படம் கிடைக்குமான்னு தெரியல. இங்க பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வருவதில்லை. அப்படி ஒரு கதையோட யாராவது கேட்டு, எனக்குக் கதை பிடித்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
‘குயின்' தமிழ் ரீமேக்கில் கதாநாயகி யார் என்று ஒரே பேச்சாக இருக்கிறதே?
என்னுடைய மனசுக்கு மிகவும் நெருக்கமான படம் ‘குயின்'. அந்தப் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், நான் பேசிட்டே இருப்பேன். கங்கணாவின் யதார்த்தமான நடிப்பு, கதை, திரைக்கதை, பாத்திரங்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் என எல்லாமே ஒரு படத்தில் நன்றாக அமைந்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு படம் தான் ‘குயின்'. கங்கணா கேரக்டரைத் தமிழ்ல யார் நடிச்சாலும் அதை 100 % பங்களிப்போடு செய்யணும். அந்த வாய்ப்பு எனக்கு வந்தா கண்டிப்பாக அதுக்கு ஃபேவர் பண்ணுவேன்.
எப்போதுமே உற்சாகமாவே இருக்கீங்களே... எப்படி?
அது கடவுள்கிட்டேயிருந்து எனக்குக் கிடைச்ச வரம்னுதான் சொல்லுவேன். எல்லா விஷயங்களையும் சந்தோஷமா, பாசிட்டிவா அணுகுவேன். என்னோட அம்மா, அப்பா என்னை விட உற்சாகமானவங்க.
நீங்க ரொம்ப வாலு, சுட்டினு இயக்குநர்கள் சொல்றாங்க. இது உங்களுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா?
கண்டிப்பாக ப்ளஸ்தான். எத்தனை இயக்குநர்கள் தன் படத்தோட நாயகி ரொம்ப வாலுன்னு சொல்றாங்க. எப்போதுமே என்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கணும்னு நினைப்பேன். ஷாட் முடிஞ்ச உடனே, கேரவனுக்குள்ள போய் உட்கார மாட்டேன். எப்போதுமே இயக்குநர், நடிகர்கள் எனப் படப்பிடிப்பில் இருப்பவர்களைக் கலாய்ப்பதுதான் வேலை. ப்ரியா ஆனந்த் ஒரு படத்தில் நடிக்கிறாள் என்றால், அந்தப் படப்பிடிப்பின் லைட் மேன் வரைக்கும் எல்லாரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தான்.
உங்களைப் பற்றி கிசுகிசு செய்திகள் வரும்போது எப்படி எடுத்துப்பீங்க?
நான் நடிக்கும் படத்திற்கு விளம்பரமாக இருக்கும் அவ்வளவுதான். நான் இங்க பாட்டியோட இருக்கேன், குடும்பம் எல்லாம் அமெரிக்காவில் இருக்காங்க. நான் எங்கு ஷூட்டிங் போறேன், இப்போ என்ன பண்றேன், என்ன சாப்பிட்டேன், யாரோடு நடிச்சிட்டு இருக்கேன் இப்படி எல்லா விஷயங்களுமே என்னோட அம்மா, அப்பாகிட்ட சொல்லுவேன். நான் அதிக நேரம் பேசுவது அவங்களோடுதான். அதனால் வீட்லயும் என்னைப் பத்தி கிசு கிசு வந்தா அவங்களுக்கு கிச்சு கிச்சு மூட்ற மாதிரிதான். கிசுகிசு பத்தி அவங்க எங்கிட்ட கேட்டதே இல்ல.
கல்யாணம் எப்போ பண்ணப் போறதா திட்டம்?
என்ன ஆச்சு பிரதர்? என்னோட கேரியர் எப்படி எல்லாம் இருக்கப் போகுதுன்னு இவ்வளவு பேசிட்டு, கடைசியில் கல்யாணம் எப்போன்னு கேட்டுட்டீங்களே! இப்போதான் ஏதோ நல்ல பாதை ஒண்ணு கிடைச்சுருக்கு. அதுக்குள்ள குழியைத் தோண்டி டேக் டைவர்ஷன் போட்டுறாதீங்க. கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு இல்ல. இன்னும் நிறைய ஜெயிக்கிற படங்கள்ல நான் இருக்கனும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago