ஹாலிவுட் ஷோ: இயக்க வந்த ஏஞ்சல்

By ஆர்.சி.ஜெயந்தன்

ஏஞ்சலினா ஜோலியை இனி நாயகி என்று அழைத்தால் அவர் கோபித்துக்கொள்ளக்கூடும். இயக்குநர் இருக்கையில் தற்போது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் இந்த அழகி.

லாரா கிராப்ட் கதாபாத்திரமாக ஆக்‌ஷன் அவதார் எடுத்த ‘டோம் ரைடர்’ திரைப்படத்தை ஜோலியே நினைத்தாலும், மறக்க முடியாது. படத்தின் அகில உலக வசூல் சாதனையால் அல்ல. அந்தப் படத்தின் படப்பிடிப்பு கம்போடியாவில் நடந்தபோதுதான் அங்கு வாழும் அகதிகளின் துயர வாழ்வு பற்றி அறிந்துகொண்டார். இன மோதல்களால் சொந்தத் தேசத்திலேயே அகதிகளாக்கப்பட்ட மக்கள், தாய் மண்ணைப் பிரிந்து உயிர் பிழைக்க ஓடிய கோடிக்கணக்கான அகதிகள், ஆகியோரது வாழ்வுள் ட்அவரை உலுக்கிப் போட்டது. கம்போடியப் படப்பிடிப்பைப் பாதியில் முடித்துக்கொண்டு 2001-ம் ஆண்டு பிப்ரவரியில், அகதிகளை நேரில் சந்திக்கத் தனது முதல் 18 நாள்கள் பயணத்தைத் தொடங்கினார். சியரா லியோன் மற்றும் தான்சானியாவில் கண்ட அகதிகளின் வாழ்நிலை தன்னை எத்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஊடகங்களிடம் வெளிப்படுத்திய இந்த ஆஸ்கர் நாயகியின் மனிதாபிமான பணிகள் அதன் பிறகு நிற்கவே இல்லை.

அயராத அவரது சமூகப் பணிகளைக் கண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட பிறகு முன்பைவிடவும் வேகமாகச் சுழல ஆரம்பித்தார் ஜோலி. தான் பார்த்தவற்றைத் திரைப்படங்களில் பதிவு செய்ய நினைத்தார். இதனால் தற்போது ஹாலிவுட்டில் இயக்குநராகவும் வண்ணம் மாறி நிற்கிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு எ ப்ளேஸ் இன் டைம் (A place in Time) என்ற ஆவணப்படத்தை இயக்கினார். பிறகு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட ஜோலி, போஸ்னியா போரைக் கதைக் களமாகக் கொண்டு, அதன் பின்னணியில் ஒரு மெல்லிய காதல் கதையை, ‘தி லேண்ட் ஆஃப் பிளட் அண்ட் ஹனி’ (In the Land of Blood and Honey) என்ற முழுநீளப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் போஸ்னிய, செர்பிய மொழிகளோடு ஆங்கிலமும் பேசின. சப்-டைட்டில்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்றது. ஜோலியை ஒரு முழுமையான இயக்குநராகவும் ஏற்றுக்கொள்ள வைத்தது.

நடிப்பதை முற்றாக நிறுத்திவிட்டு முழுநேர இயக்குநராக மாறத் திட்டமிட்டிருக்கும் ஜோலி தற்போது கையிலெடுத்திருப்பது இரண்டாம் உலகப் போரில் நடந்த ஒரு முக்கியச் சம்பவத்தைத் தழுவி அவரே எழுதியிருக்கும் திரைக்கதை. ‘அன்ப்ரோக்கன்’ (Unbroken) என்று தலைப்பும் வைத்துவிட்டார்.

இந்தப் படத்தில் அவரது கணவர் பிராட் பிட் நாயகனாக நடிப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, “இந்தக் கதாபாத்திரத்துக்கெல்லாம் என் கணவர் சரிப்பட்டுவர மாட்டார்” என்று வெளிப்படையாகப் பதிலளித்திருக்கிறார்.

மீடியாவிடம் எதையும் மறைக்காத ஜோலி, தன் கருணை மிகுந்த மனதாலும், அழகாலும், நடிப்பாலும் மயக்கியது போதாதென்று தற்போது தன் இயக்கத்தாலும் வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்