டிக் டிக் டிக்- விமர்சனம்

By செய்திப்பிரிவு

வி

ண்ணில் இருந்து பறந்து வந்த விண்கல் ஒன்று சென்னை எண்ணூர் அருகே விழுந்து 16 பேர் உயிரிழக்கின்றனர். அதைவிட 100 மடங்கு பெரிதான ராட்சத விண்கல் ஒன்று இன்னும் 6 நாட்களில் வங்கக்கடலோரம் விழப்போகிறது. அதனால் சுனாமி ஏற்பட்டு தமிழகத்தில் 4 கோடி பேர் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. அந்த விண்கல்லின் பின் பகுதியில் ஒரு பிளவு இருப்பதை இந்திய ராணுவத்தினர் (வழக்கமாக இதை விஞ்ஞானிகள்தான் கண்டுபிடிப்பார்கள்) கண்டறிகிறார்கள். அந்தப் பிளவுக்குள் அணுசக்தி ஏவுகணையை செலுத்தி, விண்கல்லை நொறுக்கினால், அழிவை தவிர்த்துவிடலாம் என்று ராணுவத்தினர் திட்டமிடுகின்றனர். அத்தகைய சக்திவாய்ந்த அணுசக்தி ஏவுகணையை, விண்வெளியில் உள்ள வெளிநாட்டு ஆய்வகத்தில் இருந்து திருடி, விண்கல்லை சிதைக்க வேண்டும். இந்தப் பணிக்காக, ஹீரோ ஜெயம் ரவியை விண்வெளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். கூடவே அவருக்கு ஒத்தாசையாக நண்பர்கள் ரமேஷ் திலக், அர்ஜுனன், ராணுவ அதிகாரிகளான கதாநாயகி நிவேதா பெத்துராஜ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் பயணிக்கின்றனர். திட்டமிட்டது எல்லாம் நடந்ததா என்பதே ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதை.

கிளின்ட் ஈஸ்ட்வுட் உள்ளிட்ட முன்னாள் ஹாலிவுட் ஹீரோக்களை வைத்து காமெடி கலந்து எடுத்த ‘ஸ்பேஸ் கவ்பாய்ஸ்’ படத்தின் சாயலும், சவாலும் கொண்ட கதையை எடுத்தாண்டுள்ளனர். ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்' என்ற முயற்சிக்காக இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனை பாராட்டலாம்.

‘சயின்ஸ் ஃபிக்சன்' என்றாலும், சாதாரண பார்வையாளர்களை குழப்பாமல் படத்தின் தொடக்கத்தில் கதையை நகர்த்திய விதம், விண்வெளி யில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், அங்கு என்னமாதிரி சூழல் இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து, திரைக்கதை உருவாக்கிய நேர்த்திக்காக இயக்குநருக்கு சபாஷ் சொல்லலாம்.

ஆனால், ‘6 நாட்களில் 4 கோடி மக்கள்' என்று பார்வையாளர்களிடம் ஒரு பதற்றத்தை படர விட்டுவிட்டு, ஜெயம் ரவி அன் கோ மிகவும் ரிலாக்ஸாக தயாராவதில் படம் சற்று விழுந்துவிடுகிறது. நடுவில், அப்பா - மகன் சென்டிமென்ட், அதற்கு ஒரு பாடல் என படத்தின் முதல் ஒரு மணி நேரம் தரைத் தளத்திலேயே பயணிக்கிறது.

அப்பா - மகன் உறவு, விண்கல்லை உடைக்க வேண்டிய சூழல் என படத்தில் 2 முடிச்சுகள். மகனுக்காக ஏவுகணையை வில்லனிடம் ஒப்படைக்க வேண்டிய சிக்கலான சூழல் ஜெயம் ரவிக்கு ஏற்படுகிறது. அதை அவர் கையாளும் விதம் சாதாரணமாக அமைந்துவிடுகிறது. அப்பா - மகன் பாசமும் வலுவாக காட்டப்படவில்லை.

கிராஃபிக்ஸ் காட்சிகள் படத்தோடு இயல்பாக ஒன்றிப்போய், விண்வெளியை தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. வெங்கடேஷ் ஒளிப்பதிவும், இமான் இசையும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

முழுக்க விண்வெளியை மையமாகக் கொண்ட படம் என்பதால், யாருக்கும் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.

ஜெயம் ரவி சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். நாயகி நிவேதா பெத்துராஜ் ராணுவ அதிகாரியாய் ‘கெத்து’ காட்டுகிறார். ஆனால், வில்லன் கதாபாத்திரம் ஊகிக்கக்கூடியதாக அமைந்துவிடுவதால், அதில் சுவாரசியம் போய்விடுகிறது.

விண்கல்லின் பாதுகாப்புக் கோட்டைத் தாண்டி ஏவுகணை செல்வது குறித்து, விண்வெளியில் இருக்கும் வீரர்கள் பூமிக்கு தகவல் கொடுக்கிறார்கள். இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய தலைமை நிர்வாகி உடனே நம்பிவிடுகிறார். நம்மால்தான் நம்ப முடியவில்லை. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் அனுபவ, திறமைசாலிகளுக்கே தெரியாத ஏவுகணை செயல்பாடுகள் ஜெயம் ரவிக்கு மட்டும் தெரிகிறது. விண்வெளி யில் விண்கல் உடைவதை, சென்னை மக்கள் வானத்தில் அண்ணாந்து பார்க்கின்றனர். விண்வெளியில் ஜெயம் ரவி தமிழில் பேசுவதை வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் புரிந்துகொள்கின்றனர். இப்படி பல லாஜிக் மீறல்கள்.

முதல் பாதியில் வேகமாகப் பயணித்து, 2-ம் பாதியில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் அந்த ‘டிக்.. டிக்.. டிக்..’ நமக்குள்ளும் படர்ந்து பரவி இன்னும் பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்