பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்

By செய்திப்பிரிவு

 

ரா

திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது?

தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்டிய சூழல் உருவாகிடுச்சு. கிராமங்கள், நகரங்கள்னு பாகுபாடு இல்லாமல் மாநிலம் முழுக்கப் பள்ளிக்கூடங்களுக்குப் போய்ட்டு வந்துக்கிட்டிருக்கேன். அப்போல்லாம் நல்ல விஷயங்கள் கண்ணுல படும். அதெயெல்லாம் பாராட்டாம இருக்கவே முடியாது. அதேநேரத்துல பெரும்பாலான பள்ளி விழாக்கள்ல சினிமா பாடல்களை இசைக்கவிட்டுத்தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடக்கும். அதுல பல பாடல்களில் பள்ளிகள்ல ஒலிக்கவிட முடியாத அளவுக்கு வார்த்தைகளோட அர்த்தங்கள் இருக்கும்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள்கிட்ட கேட்டா, ‘என்ன செய்றது சார், உங்க வருத்தமும் ஆதங்கமும் எங்களுக்கும் இருக்கத்தான் செய்யுது. ஆனா பாடல், ஆடல் போட்டிகள் இல்லாம பிள்ளைகள் மேடையே ஏற மாட்டேங்குறாங்க’ன்னு சொல்றாங்க. அந்த இடத்துல தோணின யோசனைதான் இந்த ஆல்பம். பள்ளிக் குழந்தைகளை மனசுல வச்சு உருவான ஆல்பம். முழுக்க முழுக்க அவங்களுக்காகவே உருவான ஆல்பம்.

இந்தப் பாடல்கள் வழியே என்ன சொல்ல வர்றீங்க?

ஆல்பத்தில் மொத்தம் 15 பாடல்கள். அதுல 13 பாடல்கள் வரிகளோட இருக்கும். இரண்டு பாடல்கள் வாத்திய இசையா இருக்கும். பள்ளிக்கூட குட்டீஸ்களைக் கவரணும், அவங்கக்கிட்ட போகணும்னே சூப்பர் சிங்கர் குட்டீஸ் பாடகர்களை வைத்துப் பாட வைத்தேன். வரவேற்புப் பாடல், ஸ்கூல் ஓபனிங், ஆண்டு விழா, ஆசிரியர் தின விழா, இடையில் நடக்குற கலை நிகழ்ச்சின்னு எல்லாத்துக்குமான ஆல்பமா இது இருக்கும்.

பெற்றோர் கவனிப்பு, ஆசிரியரின் அக்கறை, குழந்தைகளின் கொண்டாட்டம்னு அத்தனை அம்சங்களும் இதுல இருக்கும். இந்த ஆல்பத்தை அரசுப் பள்ளிகளுக்கு முழுவதும் இலவசமாவும், தனியார் பள்ளிங்களுக்கு நியாயமான விலையிலும் அளிக்கலாம்னு களத்துல இறங்கியிருக்கேன். சினிமா வேலைக்கு இடையில இந்த வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

இசையமைப்பாளராகத் தரமான பாடல்களைக் கொடுத்தவர் நீங்கள். தற்போதைய திரையிசைச் சூழல் எப்படி இருப்பதாக நினைக்கிறீங்க?

ரொம்பவே மாறிடுச்சுன்னுதான் சொல்லணும். மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனா பாசிடிவ்வைவிட நெகடிவ் விஷயங்கள் இப்போ அதிகம் பார்வையில் படுதே. செம ஹிட்னு டாப்ல இருந்த பாடலை அடுத்த ஆறு மாதத்துக்குப் பிறகு எங்கேன்னு தேட வேண்டியதா இருக்கு. பாடலுக்கான லைஃப் ரொம்ப கம்மியாடுச்சு. இது திரையிசைக்கு நல்லதில்ல.

இது மாறணும்னா என்ன செய்யலாம்?

தயாரிப்பாளர்கள் கேட்குறதாலதான் இந்த மாதிரி பாடல்களை நாங்க கொடுக்குறோம்னு சில டெக்னீஷியன்கள் சொல்றாங்க. இன்னைக்கு மட்டும்தான் தயாரிப்பாளர்கள் அப்படிச் சொல்றாங்களா என்ன? எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி 80, 90 -களில் வெளியான ரஜினி, கமல் படக் காலத்து தயாரிப்பாளர்கள்கூட கமர்ஷியலா நிக்கணும்னுதான் விரும்பினாங்க. அப்போ மட்டும் எப்படித் தரமான பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அதனால முதல்ல தயாரிப்பாளர் கேட்குறார், இயக்குநர் விரும்புறார்ங்கிற நொண்டிச் சாக்கை இசையமைப்பாளர் தூக்கிப் போடணும். அப்படித் தூக்கிப்போடுற கலைஞர்கள்கிட்ட இருந்து இப்பவும் ஒண்ணு, ரெண்டு நல்ல பாடல்கள் வரவும் செய்யுது. அதை நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன்.

29chrcj_JamesVasanthan ஜேம்ஸ் வசந்தன் rightசத்தமே இல்லாமல் உங்களது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறீர்களே?

ஆமாம். ‘ஓ! அந்த நாட்கள்’ படத்துக்கான கதை தோன்றியதும் முதல்ல சுஹாசினியைப் போய்ப் பார்த்தேன். அவங்கள பார்த்ததுக்கு இரண்டு காரணங்கள். ஒண்ணு என்னோட குடும்ப நண்பர். இன்னொன்னு ரைட்டர், இயக்குநர்னு பக்கா கிரியேட்டர். அதோட மூன்றாவதும் ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்தக் கதையில வர்ற முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை அவங்க மட்டும்தான் நடிக்க முடியும்.

‘சிந்து பைரவி’ படத்துல சங்கீத மேதை ஜேகேபியின் தீவிர ரசிகையாவும் பள்ளிக்கூட மியூசிக் டீச்சராவும் அவங்க ஏற்று நடிச்ச சிந்து, ‘ரெட்டவால் குருவி’ படத்துல ராதிகா மேடம் ஏற்று நடிச்ச ராதா, ‘மன்னன்’ படத்துல குஷ்பு மேடம் ஏற்று நடிச்ச மீனா, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல ஊர்வசி மேடம் ஏற்று நடிச்ச திரிபுர சுந்தரி, தமிழ் ரசிகர்கள் மனசைவிட்டு நீங்காத கதாபாத்திரங்கள் பட்டியல்ல, இந்த கேரக்டர்களுக்கும் பசுமையான இடமிருக்கு. இந்தக் கதாபாத்திரங்களும் 25 வருஷங்களுக்குப் பிறகு சந்திச்சா எப்படி இருக்கும். அதுதான் படத்தோட கதை.

ஒரு பள்ளி விழால அவங்க சந்திக்கிறாங்க. படத்தோட பெரும்பகுதி ஆஸ்திரேலியால ஷூட் பண்ணியிருக்கேன். ரொமாண்டிக் காமெடி வகைப் படம். நாலு பேரும் என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. படத்தோட இறுதிகட்ட வேலைகள்ல இருக்கேன்.

ராதிகா, ஊர்வசி, சுஹாசினி மூவரையும் நடிக்க வைத்தது சரி. சமீப காலமாக குஷ்பு சொந்த நிறுவனப் படங்களில்கூடச் சிறப்புத் தோற்றத்தில் வருவதோடு நிறுத்திக்கொள்கிறார். அவரிடம் எப்படிச் சம்மதம் வாங்கினீங்க?

அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொள்ள வைத்ததே இந்தக் கதைதான். இந்தக் கதையைச் சொன்னதும் நேரா கமல்கிட்டதான், ‘இது சரியா இருக்குமா?’ன்னு அவங்க கேட்டிருக்காங்க. ‘கான்சஃப்ட் நல்லா இருக்கு நடி’ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு பிறகுதான் ஷூட்டிங் வந்தாங்க. படத்துக்காக 2 மாதங்கள் ஆஸ்திரேலியாவுலயே தங்கி ஷூட் பண்ணினோம். கதை, வசனம், இயக்கம், இசைன்னு பெரிய பொறுப்பு இருந்தது. நல்ல குழு என்பதால் வேலைகளை ஸ்மூத்தா முடிச்சோம்.

இசையமைப்பாளர்கள்ல பலர் இப்போ நடிகர்கள். உங்கள் முகம் ஏற்கெனவே பரிச்சயப்பட்டது. இருந்தும் ஏன் நடிக்க வரல?

நடிப்புல எனக்கு அந்த ஆர்வம் இருந்ததில்ல. மற்ற மற்ற விஷயங்கள்ல நிறைய சாதிக்கணும்னு கனவு இருக்கு. இந்த ‘பள்ளி விழாப் பாடல்கள்’ ஆல்பம் மாதிரி இன்னும் நிறைய செய்யணும். நம்ம பயணம் அதை நோக்கியதாக இருக்கட்டுமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்