தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘பாகுபலி-2’ திரைப்படத்தில் பணியாற்றிய ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்ஸுக்கு பதில், அப்பாஸ் அலி மொகல் என்பவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், ரூ. 1,700 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்த ‘பாகுபலி-2’ திரைப்படத்துக்கு மொத்தம் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சண்டைக்காட்சி இயக்குநர் (ஸ்டன்ட் மாஸ்டர்) பிரிவில் பணியாற்றியதாக அப்பாஸ் அலி மொகல் என்பவருக்கு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘பாகுபலி’ படத் தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘பாகுபலி’ 1, 2 பாகங்களுக்கு பீட்டர் ஹெயின்ஸ்தான் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றினார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய திரைப்பட விருதுகளில், ‘பாகுபலி-2’ க்காக ஸ்டன்ட் மாஸ்டர் என அப்பாஸ் அலி மொகல் என்பவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனால், ‘பாகுபலி-2’ படத்துக்கு 2 தேசிய விருதுகளா, 3 தேசிய விருதுகளா என்பது பெரும் குழப்பமாக மாறி யுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago