இதுவரை இல்லாத வகையில், 3 தற்கால ரஷ்யத் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு சென்னையில் திரையிடப்படுகின்றன. சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் அமைந்துள்ளது ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (Russian Centre of Science and Culture). இந்திய - ரஷ்ய நட்புறவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கலாச்சாரத் தூதரகமான இது, மொழி மற்றும் கலை, இலக்கியச் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்டுக்கு இருமுறை ரஷ்யப் படவிழாவை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டில் முதல் கட்டமாக வரும் மே 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் மூன்று தற்கால ரஷ்யத் திரைப்படங்களை மாலை 6 மணிக்குத் திரையிடுகிறது. இந்த மூன்று படங்களுமே தரமான முறையில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுத் திரையிடப்படுகின்றன. இவ்வாறு ரஷ்யத் திரைப்பட விழா ஒன்றில், தூதரகம் செயல்பட்டுவரும் மாநிலத்தின் வெகுமக்கள் மொழியில் ‘டப்’ செய்யப்பட்டுத் திரையிடப்படுவது இதுவே முதல் முறை.
படவிழாவின் முதல் நாளான மே 24ஆம் தேதி மாலை 6 மணிக்குத் திரையிடப்படும் ‘புராஜெக் ஜெமினி (Project Gemini) ஓர் அறிவியல் புனைவுத் திரைப்படம். கடந்த 2022இல் வெளியான ரஷ்ய மொழிப் படமான இது, பூமியிலிருந்து வேறு பிரபஞ்சத்தின் கிரகக் குடும்பங்களில் வாழ்விடம் தேடிச் செல்லும் ஒரு குழுவின் விண்வெளிப் பயணத்தின் எதிர்பாரா தருணங்களைச் சித்தரிக்கிறது. பூமியிலிருந்து புறப்படும் அந்த விண்கலம் கருந்துளை ஒன்றின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு, பல மில்லியன் ஆண்டுகள் வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்து, மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்த பண்டைய பூமியில் போய் இறங்குகிறது. அப்போது அக்குழு பூமியில் சந்திக்கும் ஆபத்துகளைச் சித்தரிக்கிறது இப்படம்.
மே 25ஆம் தேதி மாலை 6 மணிக்குத் திரையிடப்படும் ‘ஏர்’ 2024இல் வெளியான புத்தம் புதிய திரைப்படமாகும். போர்முனையில் ஒவ்வொரு நொடியும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் இளம் பெண் போர் விமானிகளின் தனிப்பட்ட மற்றும் பணி வாழ்க்கையின் ரோலர் கோஸ்டர் உணர்வுகளைச் சித்திரிக்கும் படம். 7.30 மணிக்குத் திரையிடவிருக்கும் 3வது படம் 2021இல் வெளியான ‘ஆபான் தி மேஜிக் ரோட்ஸ்’(Upon the magic roads). இது அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ள குழந்தைகளுக்கான ஒரு சாகசத் திரைப்படம். ரஷ்யாவிலும் உலக நாடுகள் முழுவதும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற இந்தத்ப் படத்தின் நாயகன் இவான் ஓர் ஏழை விவசாயி. அவனது கருணை உள்ளம் அவனை எதிர்பாராத உயரத்தில் அமர வைக்கிறது. அவனை வந்தடையில் ஓர் அதிசயக் கழுதை நண்பனுடன் சேர்ந்து செய்யும் சாகசங்களும், அவை அவனை எப்படி அந்த நாட்டின் அரசனாக ஆக்குகின்றன என்பதும்தான் கதை.
ரஷ்யப் படவிழா 2024 பற்றி, சென்னை ரஷ்யன் ஹவுஸின் துணைத் தூதரும் இயக்குநருமான அலெக்ஸாண்டர் தொதநோவ் (Alexander Dodonov -Vice-Consul And Director,
Russian House, Chennai) நம்மிடம் கூறும்போது, “உலக சினிமாவுக்கு திரைப்படக் கலையின் மாண்டேஜ் உத்தி, மெத்தெட் ஆக்டிங் உள்ளிட்ட பல சிறந்த கலை அம்சங்களை வழங்கிய நாடு ரஷ்யா. தற்கால ரஷ்ய சினிமா உள்ளடக்க ரீதியாவும் தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இதை இந்த மூன்று திரைப்படங்களையும் காணும்போது பார்வையாளர்கள் உணர முடியும். மூன்று படங்களுமே பார்வையாளர்களின் மதிப்பு மிக்க நேரத்துக்கு சிறந்த விருந்தாக அமையும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். குறிப்பாக ‘ஆபான் தி மேஜிக் ரோட்ஸ்’திரைப்படம் திரையில் விரியும் ஒரு சிறார் இலக்கியம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சாகசங்கள் நிறைந்ததாகவும் நம் ஒவ்வொருவருடைய பாட்டியும் நாம் தூக்கச் செல்லும்முன் சொல்லும் விறுவிறுப்பான ‘பெட் டைம் ஸ்டோரி’போலவும் இருக்கும். இந்த மூன்று படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள், இத்துறையில் ரஷ்யாவின் தொழில்நுட்பப் புரட்சியை உங்களுக்கு உணர்த்தும்” என்றார்.
படவிழாவில் திரைப்படங்களைக் காண அனுமதி முற்றிலும் இலவசம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago