சினிப்பேச்சு: சிறு படங்களுக்காகவே ஒரு ஓடிடி!

By செய்திப்பிரிவு

சின்ன பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்ப தில்லை. அதேபோல் முன்னணி ஓடிடி தளங்களும் ஆதரிப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் தரமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு பிரத்யேக ஓடிடி தளம் தேவைப்படுவதை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது ‘ஓடிடி பிளஸ்’. இத்தளத்தின் இயக்குநர்களாக எம்.ஆர்.சீனிவாசன், சுதாகர்,கேபிள் சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடக்க விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

தரணின் ‘பேய் காதல்’ - திரைப்படங்களில் பாடல்களின் எண் ணிக்கை குறைந்து விட்டன. மாறாக, சினிமா பாணியில் அமைந்த தனியிசைப் பாடல்களின் வெளியீடும் அவற்றுக்கு ரசிகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அதேநேரம், தனியிசைப் பாடல்களுக்கு இசையமைப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இசையமைப்பாளராக இருக்கிறார் தரண் குமார்.

அவர் இசையமைத்துப் பாடி, நடித்திருக்கும் புதிய தனியிசைப் பாடல் ‘பேய் காதல்’. ஆனந்த பால்கி பாடலை எழுதி, மியூசிக் வீடியோவை இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலில் சோனியா அகர்வால் ‘ஏஞ்சலிக் கோஸ்ட்’ ஆகத் தோன்றியிருக்கிறார். சரிகமா ஒரிஜினல் வரிசையில் வெளியாகியிருக்கும் இந்தத் தனியிசைப் பாடலை கேரட் ஆட் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

லோகேஷ் அழைத்தால்... வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்வு பெற்று வளர்ந்து வருபவர் அர்ஜுன் தாஸ். ‘மௌன குரு’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள ‘ரசவாதி’ விரைவில் ரிலீஸ் ஆகும் நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் ‘மீண்டும் வில்லனாக நடிக்கும்படிக் கேட்டால் நடிப்பீர்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு: “இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. வில்லன் ரோல்கள் எதுவுமே இப்போது வரவில்லை. ஆனால், எனது நண்பன் லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார். அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்