“பொ
துவாக சவுண்ட் மிக்ஸிங் பற்றி நிறையப் பேர் பேச மாட்டார்கள். ‘மெர்க்குரி’ படத்தைப் பார்த்துட்டுப் பலரும் சமூகவலைதளங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் நிறையப் பேர் மெசேஜ் பண்ணாங்க” என்று தனது வேலைக்குக் கிடைத்த பாராட்டால் சந்தோஷமாகப் பேசினார் குணால் ராஜன். ஹாலிவுட் படங்களுக்குப் பணிபுரிந்து வந்தவர் தற்போது கோலிவுட்டுக்கு வந்து ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2’, ‘மெர்க்குரி’ ஆகிய தமிழ்ப் படங்களுக்கும் சவுண்ட் மிக்ஸிங்கில் பணிபுரிந்திருக்கிறார்.
வசனமே இல்லாத படமான ‘மெர்க்குரி’யில் பணிபுரிந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
சவாலான படம். ரசிகராக கார்த்திக் சுப்பராஜின் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோடு நிறைய முறை பேசியிருந்தாலும், ‘மெர்க்குரி’ படத்தில்தான் இணைந்தோம். படத்தில் ஒலிதான் எல்லாமே எனும்போது முதலில் பயமாக இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு, இதை எப்படிப் பண்ணப்போகிறோம் எனக் கொஞ்ச நேரம் யோசித்தேன். பிறகு அதையே சவாலாக எடுத்துக்கொண்டு சுமார் 5 மாதங்கள் பணிபுரிந்து முடித்தேன்.
கார்த்திக் சுப்பராஜோடு நிறையப் பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் பொறுமையாகப் பணிபுரிந்தேன். இயக்குநர் கதையை எவ்வளவு கவனமாக எழுதினாரோ, அதைப் போலவே ஒலி வடிவமைப்பிலும் ரொம்ப கவனம் எடுத்துக்கொண்டார். எங்கள் இருவருக்குமே சந்தோஷ் நாராயணன் பெரிதும் துணைபுரிந்தார்
சவுண்ட் மிக்ஸிங் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டி.டி.எஸ். ஒலியமைப்பு அறிமுகமானது. பாண்டிச்சேரியில் உள்ள திரையரங்கில் டி.டி.எஸ். ஒலியமைப்பில் படம் பார்த்தேன். அப்போது ஏன் பின்னால் ஸ்பீக்கர் வைச்சுருக்காங்க, முன்னாடியிருந்து தானே சத்தம் வரும் என்று யோசித்தேன். ஹாலிவுட் படங்கள் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் போகும் சத்தம் பின்னால் உள்ள ஸ்பீக்கரிலிருந்து முன்னால் டிராவல் செய்து வருவதுபோல் கொடுத்திருப்பார்கள்.
அப்போதுதான் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்தது. பிளஸ் டூ படிக்கும்போதுதான் இதை இசையமைப்பாளர் செய்வதில்லை, சவுண்ட் எடிட்டிங், டிசைனிங், மிக்சிங் என்ற தனித்துறையாக இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அதை எங்கெல்லாம் படிக்கலாம் என்று தெரிந்து முறையாகப் படித்தபின் இந்தத் துறைக்குள் வந்தேன்.
எப்படி ஹாலிவுட் படங்களில் பணிபுரியத் தொடங்கினீர்கள்?
சினிமாத் துறையின் பெரிய இடமென்றால் ஹாலிவுட் என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்குச் சென்று படிக்கப் போகிறேன் என்றபோது, வீட்டிலும் ‘சரி போய் ட்ரை பண்ணு’ என்றார்கள். எந்தத் தைரியத்தில் அங்கே சென்றேன் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் படித்ததால், அங்கே வேலையும் கிடைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாகத் தான் தமிழ்ப் படங்களில் பணிபுரிகிறேன். முன்னதாக அமெரிக்காவில் மாணவர்கள் செய்யும் குறும்படங்கள் போன்றவற்றுக்கு சவுண்ட் மிக்ஸிங் மூலமாகத்தான் பணியைத் தொடங்கினேன்.
அப்பணிகள் மூலமாகவே ஹாலிவுட் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஹாலிவுட்டில் சவுண்ட்டை மையமாக வைத்து நிறையப் பணிகள் இருக்கின்றன. நமது திறமையைப் பொறுத்து அங்கு பணிகள் கிடைக்கும். ‘தி லாஸ்ட் ஹவர்’ என்ற குறும்படம்தான் நான் முதலில் ‘சவுண்ட் மிக்ஸிங்’ செய்தது. ‘தி ஃபைனஸ்ட் ஹவர்’ தான் நான் பணிபுரிந்த முதல் ஹாலிவுட் படம். ரொம்பக் குறைந்த பொருட்செலவில் உருவான படம் அது.
27CHRCJ_MERKCURY SOUND 2 குணால் ராஜன் ஒரு படத்தில் சவுண்ட் டிசைனிங் பணியின் முக்கியத்துவம் என்ன?
இருவர் ஒரு ஹோட்டலில் பேசிக்கொண்டிருக்கும் காட்சி அப்படியே இருவருக்குமான அடிதடியாக மாறுகிறது என வைத்துக்கொள்வோம். அந்தக் காட்சியைப் படமாக்கிய பிறகு டப்பிங் செய்துவிடுவார்கள். ஆனால், ஹோட்டலில் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள், அவர்களைச் சுற்றி உள்ள விஷயங்கள் என்னென்ன என்பதெல்லாம் டப்பிங்கில் சேர்க்க முடியாது. அதேபோல வெளியே இருக்கும் டிராஃபிக் சத்தத்தையும் சேர்க்க முடியாது.
இப்படி அனைத்துச் சத்தங்களையும் சேர்க்கும் இடம் சவுண்ட் மிக்ஸிங். ஒரு படத்துக்கான டப்பிங், அக்காட்சிக்காக இசையமைப்பாளர் கொடுக்கும் இசை மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் இதெல்லாம் சேர்த்து எந்தச் சத்தம் எந்த இடத்தில் அதிகமாகவும் கம்மியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதுதான் சவுண்ட் டிசைனரின் வேலை.
எந்த வகையான படங்களுக்கு சவுண்ட் மிக்ஸிங் மிகவும் கடினம்?
‘மெர்க்குரி’ மாதிரியான படம் கடினம். ‘விஸ்வரூபம்’ படத்தில் வரும் போர் காட்சிகளுக்கு சவுண்ட் மிக்ஸிங் பண்ணுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஒரே காட்சியில் வெவ்வேறு ஹெலிகாப்டர்கள், பல வகையான துப்பாக்கிகள் உபயோகித்திருப்பார்கள். அக்காட்சிகளுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்வது ரொம்ப சவாலாக இருக்கும். காட்சியின் நம்பகத் தன்மைக்கு விதவிதமான ஆனால் பொருத்தமான சவுண்ட் டிசைன் உயிர்கொடுக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago