இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியின் உருவாக்கத்தில் தண்ணீரை மையமாக வைத்து ‘ஜம்ப் ஹாரர்’ காட்சிகள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘ஈரம்’. அந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி ‘சப்தம்’ படத்தில் இணைந்தது ரசிகர்களிடம் ஆவலை உருவாக்கியது. இதில் ‘ஒலி’யை மையமாக வைத்து ஹாரர் த்ரில்லராக படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிவழகன்.
சிம்ரன், லட்சுமி மேனன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்படப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நாயகன் ஆதி ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ ஆக வருகிறார். காதலியைத் துரத்தும் ஆவியின் பின்னணியை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இசை தமன். படத்தின் டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து இயக்குநர் கூறும்போது ‘சப்தம்’ படத்தில் மலை, குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சிகளை உருவாக்கியுள்ளேன். சவுண்ட் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை உருவாக்கியுள்ளோம். பின்னணி இசைக்காக தமன், ஹங்கேரி சென்றுள்ளார்.
மும்பை, மூணாறு, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சிக்காக 2 கோடி ரூபாய் பொருட் செலவில் 120 வருடம் பழமையான கல்லூரி நூலகம் போன்ற அரங்கத்தை அமைத்துப் படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.
» திருப்பூரில் இவிஎம் இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்
» “தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்” - ராமதாஸ் பேட்டி
அக்காவின் திருமணத்தில் அதிரடி நடனம்! - ஜூன் மாதம் ‘இந்தியன் 2’ படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது கமல் - ஷங்கர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கிடையில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தருண் கார்த்திகேயனுக்கும் கோலா கலமாகத் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் ஷங்கர்.
திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணி ரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காந்த், கமல், சிரஞ்சீவி, மோகன்லால், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், ராம்சரண் தொடங்கி கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கட்டுக்கடங்காத பிரபலங்களின் கூட்டம்.
பாலிவுட்டிலிருந்து வந்திருந்த ரன்வீர் சிங்குடன் ஷங்கரின் இளைய மகளும் தமிழ் சினிமா கதாநாயகியுமான அதிதி ஷங்கர் தமிழ் சினிமா பாடலுக்கு அதிரடியாக நடனமாடிய காணொலி சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆட்டத்தில் ஷாருக் கானை இயக்கிய அட்லியும் இணைந்துகொண்டார்.
நிவின் பாலிக்கு குவியும் பாராட்டு! - நிவின் பாலி, பிரணவ் மோகன்லால், தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான மலையாளப் படம் ‘வர்ஷங்களுக்கு சேஷம்'. இந்தப் படமும், தமிழ், மலையாளக் கதாபாத்திரங்கள் புழங்கும் சமீபத்திய மலையாள வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
படத்தில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் நிவின் பாலி தனது தனித்துவமான நடிப்பால், ரசிகர்களிடம் பாராட்டுகளை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறார். 70 மற்றும் 80களின் திரைப்படத் தயாரிப்பாளர்களின், நடிகர்களின், இயக்குநர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை.
தென்னிந்திய சினிமாவின் மையமாகத் திகழும் கோடம்பாக்கம் தான் படத்தின் கதைக்களம். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நிவின் பாலி தன்னுடைய கதாபாத்திரத்துக்கு உயிர்த்துடிபுள்ள நடிப்பை வழங்கியிருப்பதற்காகப் படத்தைப் பார்த்த இணைய வாசிகள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
நிவின் பாலியின் சினிமா வாழ்க்கையில் இப்படத்தில் அவர் ஏற்றுள்ள நிதின் மோலி கதாபாத்திரம் அவரது நடிப்புத் திறமையின் உச்சமாக அமைந்துவிட்டதாகப் புகழ்ந்துள்ளனர்.
விக்ரமின் பிறந்த நாள் பரிசு! - விக்ரம் நடிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் - கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருக்கும் படம் ‘தங்கலான்'. 1900இல் கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கதையாக்கி, இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். இப்படத்தில், “டைட்டில் ரோலில் நடித்துள்ள விக்ரமின் உழைப்பு மிகுந்த வலிகளும் அர்ப்பணிப்பும் மிக்கது” என்று தெரிவித்திருந்தார் இயக்குநர்.
எவ்வித ‘டூப்’பும் பயன்படுத்தாமல் இனக்குழுக்களுக்கு இடையில் அவர் போரிடும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது பலமுறை ரத்தக்காயம் அடைந்திருக்கிறார். விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, படப்பிடிப்பில் அவர் அடிபட்டு விழுந்து நிஜமாகவே ரத்தம் சிந்திய காட்சிகளைப் படக்குழுவினர் ஒரு காணொலியாக வெளியிட்டு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.
விக்ரமுக்கு இந்த வித்தியாசமான பிறந்த நாள் பரிசு ஒருபுறமிருக்க, அவர் நடிக்கும் 62வது படத்தின் தலைப்பையும் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறார் விக்ரம். படத்தின் தலைப்பு ‘வீர தீர சூரன்’.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago