“ மொ
பைல் ஆப்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றைக் கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து தொடங்கி நடத்தும் பெண்ணாக 'மிஸ்டர்.சந்திரமெளலி' படத்தில் நடிச்சிருக்கேன். நாயகனுக்கு வரும் பிரச்சினைகளுக்கு உதவுவேன். இதைத் தாண்டி என் கேரக்டரைப் பற்றிச் சொன்னால் எனக்கு உதை விழும். அதை நீங்க விரும்புறீங்களா?” என்று சமர்த்துப்பெண்ணாகப் பேசத் தொடங்கினார் ரெஜினா.
‘மிஸ்டர் சந்திரமௌலி’யில் அப்பா கார்த்திக் – மகன் கௌதம் கார்த்திக் என இருவருடன் நடித்த அனுபவம் எப்படி?
செம சூப்பர். ஷூட்டிங்ல ஒரே கலகலப்புதான். கார்த்திக் சாரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். சீனியர் நடிகரோடு நடித்தால் கொஞ்சம் தயக்கம் இருக்கும். ஆனால், கார்த்திக் சாருடன் நடிக்கும் எல்லா நாட்களும் ஜாலிதான். படப்பிடிப்பில் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொள்வோம். தன்னோட வாழ்க்கைக் கதை, நடித்த படங்கள், திரையுலக அனுபவம் என சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடன் நடிக்கக் கிடைத்த சான்ஸ் அபூர்வம். அவர் ஒரு சிறந்த நடிகர். வாழ்க்கையை அவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார். நடிப்பை விடுத்து வாழ்க்கையை எவ்வளவு பாசிட்டிவாக அணுக வேண்டும் எனத் தெரிந்துகொண்டேன். கவுதம் கார்த்திக்கிடம் அடிக்கடி உங்கப்பாவால் உனக்குப் பொறுப்பு அதிகமாகியிருக்கிறது என்று சொல்வேன்.
நாயகியாக நடித்து வரும் சமயத்தில் ‘ஆ’ (Awe) படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறீர்களே?
நாயகியானது முதல் பெரிய, சிறிய கதாபாத்திரம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அது கதைக்குள் எத்தனை முக்கியமாக இருக்கிறது என்று பார்க்கும் திறமை எனக்கு உண்டு. ‘ஆ’ படத்தில் அமைந்தது அப்படித்தான். படத்தைப் பார்த்த பலரும் அற்புதமாக நடித்திருந்ததாகப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டைக் கேட்கும்போது, பட்ட கஷ்டங்களைத் தாண்டி ஒரு சந்தோஷம் கிடைத்தது. அப்படத்துக்காக மூக்கில் ரிங் போட்டேன், முடி வெட்டினேன், உடலில் டாட்டூ வரைந்தேன். படப்பிடிப்பில் மேக்கப் போட்டு முடிக்க 24 மணி நேரமாகும். அப்படத்துக்குப் பிறகு இப்போதுதான் கொஞ்சம் முடி வளர்ந்திருக்கிறது. வரும் காலத்தில் நான் இப்படியும் ஒரு கதாபாத்திரம் நடித்திருக்கிறேன் பாருங்கள் என்று தைரியமாகச் சொல்ல முடியும்.
தென்னிந்தியத் திரையுலகம் நிறைய மாறி வருகிறது எனத் தெரிவித்துள்ளீர்கள். எந்த விதத்தில்?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது பலவிதமான கதைக்களங்கள் கொண்ட திரைக்கதைகளைக் கேட்க முடிகிறது. முழுத் திரைக்கதைகளை ஈமெயிலில் அனுப்பிப் படிக்கச் சொல்கிறார்கள். நாம் நன்றாக நடித்தாலும் ரிகர்சல் வரமுடியுமா மேடம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறார்கள். டீம் ஒர்க், திட்டமிடல், புரமோஷன் என எல்லாமே மிரட்டுகிறது. நாம் கேரவனுக்குள்ளே உட்கார்ந்திருந்தால் உலகம் இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளும் பூனை மாதிரி ஆகிவிடுவோம்.
சமூகவலைத்தளத்தில் தொடர்ச்சியாக நடிகர் - நடிகைகளைக் கிண்டல் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நிறைய கமெண்ட்ஸைப் படிக்க மாட்டேன். சில நேரத்தில் படிப்பேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது அவர் அணிந்திருக்கும் உடை எனக்கு அருமையாக இருக்கலாம். ஆனால், மற்றொருவருக்கு அது ஆபாசமாகத் தெரியலாம். நமது பார்வைதான் முக்கியம். கிண்டல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அது என்னைப் பாதிக்காது.
நாயகியானவுடன் குறும்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டீர்களா?
தெலுங்கில் ‘ஹெர்’ (HER) என்ற குறும்படம் பண்ணியிருக்கிறேன். நல்ல கதைகள் வந்தால் குறும்படங்களில் நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
கதாநாயகிகளுக்குச் சீரான உடலமைப்பு மிகவும் முக்கியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இன்று எல்லோருக்குமே ஃபிட்னஸ் முக்கியம்தான். சில நேரம் ஷூட்டிங் முடிந்து சந்தோஷமாக வந்தால், உடனடியாகப் போய் வொர்க்-அவுட் பண்ணுவேன். ஜிம் பிடிக்கவே பிடிக்காது. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று ஜாக்கிங் போவேன். என்னை அங்கே நீங்கள் அடையாளம் காணமுடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
57 mins ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago