திரைப்பார்வை: ஒரு தென்னிந்தியத் தாண்டோட்டம் - ஆதி (மலையாளம்)

By ஆர்.ஜெய்குமார்

லையாள சினிமா எதிர்பார்த்திருந்தது, நடந்திருக்கிறது. ப்ரனவ் மோகன்லால் நாயகன் ஆகிவிட்டார். அவர் நடித்துக் கடந்த வாரம் வெளிவந்த ‘ஆதி’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஒன்னாமன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ப்ரனவ். ‘புனர்ஜனி’யில் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகப் பெரும் பாராட்டைப் பெற்றவர். அதற்கு 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு முழு நீளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘த்ரிஷ்யம்’ வெற்றிப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசபின் படத்தை தன் நாயக அறிமுகத்துக்காக அவர் தேர்ந்தெடுத்தது படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

த்ரில்லர் படத்துக்காகப் பெயர் பெற்றுள்ள ஜீத்து ஜோசப், இந்தப் படத்தை ஒரு கொலை, அதற்குக் காரணமானவனைத் தேடும் வேட்டை என வழக்கமான பாணியில்தான் நகர்த்தியுள்ளார். இதில் போலீசை விலக்கிவிட்டு, வில்லன் - நாயகன் எனத் திரைக்கதையில் நேர்கோட்டுப் பயணத்தைச் செய்திருக்கிறார். இதற்கிடையில் சந்தேகிக்கத் தூண்டும்விதமாகச் சில கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். ‘த்ரிஷ்யம்’ போல இதிலும் சீரியல்தனமாக சாப்பாட்டு மேஜையில்தான் குடும்பத்தைச் சித்திரித்துள்ளார். சிறந்த குணச்சித்திர நடிகர்களான லெனா, சித்திக் ஆகியோரின் நடிப்பு இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுடன் பொருந்திப் போகவில்லை.

02chrcj_aadi 1

எதிர்பாராதவிதமாக நகைச்சுவை நடிகரான ஷிஜூ வில்சன் அபாரமாக நடித்துள்ளார். பதற்றம் நிரம்பிய படத்தின் இரண்டாம் பாதியில் அனுஸ்ரீ தன் தயக்கமற்ற நடிப்பால் நிறைகிறார். உணர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தாத வகையில் புத்திசாலித்தனமாக ப்ரணவ் லாலுக்கான கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். அதிர்ந்து பேசாத இயல்புடையவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

கொலை, கொலைசெய்பவர், அதற்குப் பின்னாலுள்ள சதி எல்லாமும் பார்வையாளர்களுக்கும் தெரியும்விதமாகத்தான் படம் பயணிக்கிறது. பார்த்துப் பார்த்து சலித்துப்போன பின்னணிதான் கதை. இருந்தாலும் படத்தைப் பார்ப்பதற்கான தேவையைத் திரைக்கதை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மோகன்லால் அறிமுகமான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படப் பாடலான ‘மிழியோரம் நனஞ்சொழுகும்’ பாடலைப் பாடி ப்ரனவ் படத்தில் அறிமுகமாகிறார். சினிமா இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவுள்ள இளைஞர் வேடம் அவருக்கு. தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வந்துசெல்லும் பெங்களூருவில் ஒரு கிளப்பில் பாடினால் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பி அங்கு செல்கிறார். பாட்டும் பாடுகிறார். ஆனால், அதன் பிறகு அவர் கனவு வாழ்க்கை மட்டுமல்ல; இயல்பான வாழ்க்கையும் பறிபோய்விடுகிறது.

ப்ரனவ் ஒரு சதியில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க ஓடுகிறார். இந்த ஓட்டம்தான் படம். சாதாரண ஓட்டமல்ல அது, தாண்டோட்டம் (parkour). ப்ரனவ் சிறுவயதிலிருந்து இந்தத் தாண்டோட்டம் கற்று வருகிறார். ‘ஒன்னாமன்’ படத்தில் வர்கீஸ் கதாபாத்திரத்தைக் காப்பாற்ற சிறுவன் ப்ரனவ் அவன் அளவு இருக்கும் ஜன்னலைத் தாண்டிக் குதிப்பான். இந்தப் படத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தாண்டோட்டம் ஓடுகிறார்.

ப்ரனவ் இதைத் திறம்படச் செய்திருக்கிறார். நீளமான தாண்டோட்டக் காட்சிகள் படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. இதற்கு பெங்களூருவின் பரபரப்பான சந்தையும் தெருக்களையும் கைவிடப்பட்ட கட்டிடங்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். விளையாட்டாகவும் தற்காப்புக் கலையாகவும் கற்றுக் கொடுக்கப்படும் இந்தக் கலை, 1998-ல் ‘டாக்ஸி-2’ படத்தில்தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இந்த வகை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ‘எக் தா டைகர்’ போன்ற சில இந்திப் படங்களும் தாண்டோட்டத்தைச் சித்திரித்துள்ளன. ‘பார்கோவ்’, ‘ஜம்ப் லண்டன்’, ‘டிஸ்ட்ரிக்ட் பி 13’ உள்ளிட்ட பல படங்கள் இந்தத் தாண்டோட்டத்துக்காகவே கவனம் பெற்றன. ‘ஆதி’யையும் இந்த வரிசையில் ஒன்றாக்க முயன்றிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்