பெரிய திரை, சின்னத் திரை என்ற பாகுபாடெல்லாம் இப்போது இல்லை. ஒரே சமயத்தில் இரு திரைகளிலும் ரெட்டைச் சவாரி செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஜெனி ப்ரியாவும் ஒருவர். பெரிய திரையில் அறிமுகமாகிவிட்டு, சின்னத் திரையில் 4 ஆண்டுகள் வெற்றிகரமான நிகழ்ச்சித் தொகுப்பாளார் தற்போது மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்திருக்கிறார். அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஜெனி ப்ரியா தொடர்ச்சியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார்.
என்னென்ன படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
பாக்யராஜ் அசிஸ்டெண்ட் ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் ‘அதிமேதாவிகள்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘உத்தம திருடன்’ படத்தில் சென்ட்ராயன் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அதில் நான் அவருக்கு ஜோடி. ‘வாலு’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகப் பள்ளி மாணவியாக நடிக்கிறேன். ‘காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை’ என்ற படத்தில் நாலு புது முகங்கள் நடிக்கிறார்கள். இதில் நான் கதாநாயகி. அப்புறம் மீரா கதிரவன் படம், மணி ரத்னம் படம், சிம்ரன் தயாரிக்கும் படங்களுக்குப் பேசிகிட்டு இருக்காங்க.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தால் சின்னத் திரையில் குடியேறுவது வழக்கம். நீங்கள் மட்டும் எப்படித் தலைகீழா டிராவல் பண்றீங்க?
பிரவீன் காந்தி இயக்கிய ‘துள்ளல்’ படத்தில்தான் அறிமுகமானேன். அந்தப் படத்தில் டைட்டில் சாங் பண்ணேன். சின்னி ஜெயந்தோட ‘நீயே என் காதலி’ படத்தில் நடித்திருக்கிறேன். ‘புதிய பார்வை’ ன்னு ஒரு பேய்ப் படம். அதுல நான்தான் ஹீரோயின். அப்புறம் 2007-ல ஒரு சேஞ்சுக்காக சின்னத் திரைக்கு வந்தேன். ஜெயா, கலைஞர், சன் டி.வி.ன்னு ஒரு ரவுண்டு அடிச்சாச்சு. நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல் என எதையும் விட்டு வைக்கவில்லை. சின்னத் திரையில் நான் இருந்தப்ப தொடர்ந்து பெரிய திரையில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துக்கிட்டுதான் இருந்துச்சு. ஆனால், நிறைய வாய்ப்புகள் கிளாமராகவே இருந்ததால எனக்குப் பிடிக்கவில்லை. சின்னத் திரையில் இருந்ததால் பெரிய திரையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். சின்னத் திரையில கிடைச்ச டீஸண்டான பெயரை சினிமால கெடுத்துக்க விரும்பல.
அப்போ சினிமால இப்படித்தான் நடிப்பேன் பாலிசி வெச்சிருக்கீங்களா?
சின்னத் திரை பெரிய திரை எங்க நல்ல வாய்ப்பு கிடைச்சாலும் அதைப் பயன்படுத்திக்கிறேன். ஒப்பந்த நிகழ்ச்சிகள் என்றால், நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். அதனால அட்ஜஸ்ட் பண்ண மாட்டாங்க. சின்னத் திரையில் ஒப்பந்த நிகழ்ச்சிகள் செய்ய எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என் கவனம் முழுக்க சினிமால வைக்கப்போறேன்.
சினிமால கிடைச்சிருக்க இடத்தைத் தக்க வைச்சுக்க தேவையில்லாத கிளாமர் பண்ண மாட்டேன்.
சரியான கதாநாயகி வாய்ப்புகள்தான் இலக்கா?
அப்படியெல்லாம் கிடையாது. கதாநாயகி மட்டுமில்லாமல் மற்ற ரோல்களிலும் நடிக்கவே விரும்புகிறேன். ஆனால், என்னோட கேரக்டருக்கு நல்ல முக்கியத்துவமும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். பருத்தி வீரனில் ப்ரியா மணி செய்த ரோல் போல செய்ய ஆசைதான். எல்லாருமே விஜய்கூட ஜோடியாக நடிக்க ஆசைப்படுவாங்க. ஆனால், எனக்கு அவருக்குத் தங்கையாக நடிக்கணும்னு ஆசை. அவரைப் பார்க்குறப்ப அண்ணன் ஃபீலிங் வருது.
யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை?
தனுஷ், சசிகுமார், சிவகார்த்திகேயன் கூட ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கு. இவர்கள் மூன்று பேரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பெரிய திரையில் ஜொலிக்க உங்கள் ஆலோசனை என்ன?
அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளெல்லாம் கிடையாது. டி.வி.யில் கையை ஆட்டி ஆட்டி ஈஸியாகப் பேசி முடிச்சிடலாம். ஆனால் சினிமா அப்படியில்லை. பாடி லாங்வேஜ் அவ்வளவு சுலபத்தில் வராது. பெரிய திரைக்கு வர விரும்பும் வீடியோ ஜாக்கிகள் இதை முதல்ல கத்துக்கணும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago