கோலிவுட் ஜங்ஷன்: அடிப்பட்ட புலி!

By செய்திப்பிரிவு

விஷால் நடித்த ‘இரும்புத்திரை, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படங்களின் திரைக்கதை ஆக்கத்தில் பங்களித்தவர் ஆண்டனி பாக்யராஜ். அவர், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தீபாவளியை முன்னிட்டு அப்படத்தின் டீசர் வெளியாகி 5 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. “ஆம்புலன்ஸ் ஓட்டுநராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஜெயம் ரவியின் மீது குற்றப்பழி விழுகிறது.

செய்யாத குற்றத்துக்காகச் சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் அவருக்கு, பரோலில் வெளியே வரும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு அடிப்பட்ட புலியாக சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெயரவியின் பரோல் நாட்கள் அவரை எப்படிப்பட்ட ஆளாக மாற்றுகின்றன என்பதுதான் கதை” என்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் பரோலில் வரும் ஜெயம் ரவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் காவல் துறை அதிகாரியாக, முழுநீள அக் ஷன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ஜி.வி.பிகாஷ்.

கார் வாங்கினால் கலவரம்! - ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் புதிய படம் ‘பார்க்கிங்’. “கடன் வாங்கி இன்று கார் வாங்குவது எளிது, ஆனால், அதை நிறுத்துவதற்கான இடம்தான் பெரிய பிரச்சினை. இதை மையமாக வைத்து இந்த த்ரில்லர் டிராமாவை உருவாக்கியிருக்கிறேன். பக்கத்துக்கு வீட்டுப் பையனைப் போல் எவ்வளவு சிக்கலான கதையிலும் பொருந்திக்கொண்டு நம்மை நமக்கே நினைவூட்டுவார் ஹரீஷ் கல்யாண்.

கார் வாங்க வேண்டும் என்கிற கனவு நிறைவேறிய பின் அவரது வாழ்க்கையில் நடக்கும் ஒரு சின்ன ‘பார்க்கிங்’ பிரச்சினை, மனிதர்களின் ஈகோவால் எவ்வளவு பெரிய கொடுங்கனவாக மாறியது என்பதுதான் கதை. சென்னையில் நடக்கும் இந்தக் கதையுடன் இந்தியாவில் வாழும் எல்லோரையும் இணைக்கும். ஹரீஷ் கல்யாண் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம். அவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். ஹரீஷ் கல்யாணின் மனைவியாக இந்துஜா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்” என்கிறார் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

நாயகன் மறைக்கும் ரகசியம்! - கமலின் ‘விக்ரம்’ (2022), ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களில் அழுத்தமான முத்திரை நடிப்பை வழங்கினார் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். சரியான கதைகளுக்காக ஒவ்வொரு முறையும் காத்திருந்து நடிக்கும் அவர் கதாநாயகனாக நடிக்க, தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் நேரடியாகத் தயாராகியிருக்கும் படம் ‘அவள் பெயர் ரஜ்னி’அதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் வினில் ஸ்காரியா வர்கீஸ் பேசும்போது: “மலையாள சினிமாவுக்குரிய நேர்த்தியுடன் திரைக்கதையை எழுதினேன். கதையின் பெரும்பகுதி சென்னையில் தான் நடக்கிறது. அப்படியிருக்கும்போது இதைத் தமிழ், மலையாளத்தில் உருவாக்குவதுதான் சரியாக இருக்கும் என்று தமிழ் ரசிகர்களுக்காகவும் கதையை சற்று மாற்றி அமைத்தேன்..

அதனால், இருமொழிக்கும் பரிச்சயமான காளிதாஸும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் வருபவர்களும் நச்சென்று பொருந்தினார்கள். இது கதாநாயகனின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியத்தை வெளிக்கொண்டு வரும் த்ரில்லர் கதை. அப்பெண் எப்படிப்பட்டவள் என்பதுதான் படம். படத்தின் டிரைலரைப் பார்த்து நீங்கள் எப்படிப்பட்ட கதையை வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆனால், நீங்கள் எதிர்பாராத திரை அனுபவத்தை நான் கொடுத்திருக்கிறேன்” என்றார். காளிதாஸ் ஜெயராம் தவிர, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், சைஜு குருப், அஷ்வின் குமார், கருணாகரன், பூ ராமு, ஷான் ரோமி என நடிகர்களின் எண்ணிக்கையும் படத்தில் அதிகமாகவே உள்ளது.

மீண்டும் தேர்வு! - விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்காக, கடந்த1952இல் தொடங்கப்பட்டது சென்னை ரைபிள் கிளப். சென்னை எழும்பூர், திருவள்ளூர் அருகியுள்ளே அலமாதி ஆகிய இடங்களில் இரண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி வளாகங்களை அமைத்து, தேசிய, சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டில் பயிற்சிபெறும் வீரர், வீராங்கனைகளையும் ஆர்வலர்களையும் ஊக்குவித்து வருகிறது.

இந்த கிளப்பில் அர்ஜுனா விருதை வென்ற ரூப ஸ்ரீநாத் உன்னிகிருஷ்ணன், சமீபத்தில் ஆசியத் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிருத்விராஜ் தொண்டைமான், தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்‌. இந்நிலையில் சென்னை ரைபிள் கிளப்பின் 2023 -26 ஆண்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில். பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரும் துப்பாக்கி சுடும் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவருமான கே.ராஜ்சேகர் பாண்டியன் கௌரவ செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த தேர்தலிலும் இவர் இதே பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்