‘கழுகு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்துக் கடந்த ஆண்டு வெளியான படம் ‘நான் மிருகமாய் மாற’. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தி ருக்கிறது. 90களில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட திரில்லர் ட்ராமா வாக இப்புதிய படம் உருவாகிறது. 90களின் காலகட்டத்தைக் கொண்டு வரக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஓர் ஊரையே செட் போட்டுப் படக்குழு படமாக்கி வருகிறது.
இதில் சசிகுமார் ஜோடியாக ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோள் ஜோஸ் நடித்து வருகிறார். இந்திப் படங்களில் புகழ்பெற்றிருக்கும் சுதேவ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கே.ஜி.எஃப் மாளவிகா, போஸ் வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விரைவில் தலைப்பு அறிவிக்கப்படவுள்ள இப்படத்தை, விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கிறார். படத்துக்கு இசை ஜிப்ரான்.
கோலிவுட்டின் விருந்தினர்! - தரமான சினிமாக்களைக் கொடுத்துவரும் தமிழ் இயக்குநர்களின் அலுவலகங்களில் இந்த சிங்கள இயக்குநரை விருந்தோம்பிக் கொண்டாடுகிறார்கள். அவர் உலக சினிமா அரங்கில் பெரிதும் மதிக்கப்படும் பிரசன்ன விதானகே. இலங்கை இனப் பிரச்சினையைத் தமிழருக்கும் சிங்களருக்கும் நடுவில் நின்று மிக நேர்மையாக அணுகிய அவருடைய ‘முழுநிலா நாளில் ஒரு மரணம்’ (Death on a full Monday) என்கிற திரைப்படம், போரைக் கையிலெடுக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கிய ஒன்று. பிரச்சினை தீவிரமாக இருந்த 1997இல், ஒரு ராணுவ வீரனின் மரணம் வழியாக இலங்கை ராணுவத்தைத் துணிந்து இப்படத்தில் விமர்சித்தவர் விதானகே.
» இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு
» வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அவர் தற்போது எழுதி, இயக்கியிருக்கும் படம் 'பேரடைஸ்'. இப்படத்தை நியூட்டன் சினிமா என்கிற தமிழ்ப்படத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. முழுவதும் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த மணி ரத்னம், தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் அதைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வருகிறார். பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடும் போருக்குப் பிறகான இலங்கைக்குச் சுற்றுலா வரும் ஒரு தம்பதியின் நிலையை இந்தப் படம் விவரிக்கிறது.
இப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ, மகேந்திரா பெரேரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். தென்கொரியாவின் புகழ்பெற்ற பூஸன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான ‘கிம் ஜிஜோக்’ நினைவு விருதை வென்றிருக்கிறது ‘பேரடைஸ்’.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago